இடுகைகள்

தகவல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நோய் எதிர்ப்பு சக்தி, மூளை - அறிவியல் அறிவோம்

படம்
  திருப்பி அடிப்பேன் முதுகில் குத்திய துரோகிகளை நண்பர்களைப் பற்றியல்ல நாம் பேசவிருப்பது. உடலுக்குள் நிறைய கிருமிகள் புகுகின்றன. அவற்றை உடலிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தி அமைப்பே எதிர்கொண்டு தாக்குகிறது. அதில் முக்கியமானது, வெள்ளை அணுக்கள். தமிழ்நாடு காவல்துறையில் பல்வேறு குற்றங்களைத் தடுக்க பல்வேறு பிரிவுகள் உண்டோ, அதேபோல்தான் கிருமிகளை அழிக்கவும் சண்டையிடவும் நிறைய வேறுபட்ட வெள்ளை அணுக்கள் உண்டு. எடுத்துக்காட்டு. காசநோய் கிருமிகளோடு மேக்ரோபேஜ் எனும் வெள்ளை அணுக்கள் போரிடுகின்றன.  கிருமிகள் உடலுக்குள் புகுவதை தடுக்க கண்களில் கண்ணீர், மூக்கில் சளி, வாயில் எச்சில், காதில் மெழுகு போன்ற திரவம், வயிற்றில் அமிலம் உருவாகிறது. இவற்றையும் மீறி கிருமி உடலுக்குள் வந்துவிட்டால், நீங்கள் மருத்துவரை சந்தித்து, அவர் கமிஷன் வாங்கும் இடத்தில் ஸ்கேன் எடுத்து, அவரது சொந்த மருந்தகத்தில் உள்ள விற்காத மாத்திரைகளை வாங்கி சாப்பிடும் நிலை வரலாம். காற்றில் உள்ள தூசி, பூவில் உள்ள மகரந்தம் ஒருவரின் உடலுக்குள் செல்லும்போது, அதை நோய் எதிர்ப்பு சக்தி எதிரியாக கிருமியாக நினைக்கிறது. அப்போது அதை எதிர்த்து தாக்குத...

டெஸ்லா பைல்ஸ் - ஆட்டோபைலட் முறையில் நடக்கும் எண்ணற்ற விபத்துகள், மரணங்கள்

படம்
 டெஸ்லா பைல்ஸ் - அதிகரிக்கும் கார் விபத்துகள் பாசிச இந்து மதவாதிகள் முஸ்லீம் தீவிரவாதிகள் பற்றி, அல்லது இயக்கங்கள் பற்றி காசு கொடுத்து எடுத்த வட இந்திய திரைப்படத்தின் பெயரல்ல இது. டெஸ்லா நிறுவனத்தின் தானியங்கு கார்கள் பற்றிய 23 ஆயிரம் ரகசிய ஆவணங்களை தன்னார்வலர் ஒருவர் இணையத்தில் வெளியிட்டார்.அதுதொடர்பாக கார்டியன் நாளிதழ் விசாரணையைத் தொடங்கி செய்திகளை வெளியிட்டு வருகிறது. இப்போது நாம் எழுதுவது அதன் தமிழாக்கம்தான்.  டெஸ்லா தொடங்கப்பட்டது தானியங்கு முறையில் காரை ஓட்டுவதை சாதிப்போம் என்று சொல்லித்தான். காரின் மாடல்கள் பாரம்பரியா போர்டு, ஜெனரல் மோட்டார்களை விட சிறப்பாக இருந்தன. டெஸ்லாவின் சிறப்பு, மின் வாகனம், அதற்கான பேட்டரிகளை ரீசார்ஜ் செய்யும் நிலையங்களையும் அவர் வலைப்பின்னலாக உருவாக்கி வைத்திருந்தார். இதனால்தான் டெஸ்லா வெற்றி பெற்றது. எலன் மஸ்க், குடியரசு கட்சிக்கு நிதியளித்து வெற்றிபெறச்செய்தார். அமைச்சர் பதவியைப் பிடித்தார். நாஜி வணக்கம் வைத்தார். பிறகு இப்போது அமைச்சர் பதவியை விட்டுவிட்டு அமெரிக்கன் என்ற அரசியல் கட்சியை தொடங்கியுள்ளார்.  2018ஆம் ஆண்டு ஜெர்மனியைச் சேர்ந்...

கட்டற்ற மென்பொருட்களை எஃப்ட்ராய்ட் மென்பொருள் வழியாக பெறுங்கள்!

படம்
        எஃப் ட்ராய்ட் ஆப் பற்றி, மெட்டா மங்கீஸ் யூட்யூப் சேனலில் திரு. விஜய் வரதராஜ் பேசியிருந்தார். அந்த வகையில் பிளே ஸ்டோர் போன்ற அந்த மென்பொருளை முதலில் தரவிறக்கி இசை, வானொலி போன்ற ஆப்களை சோதித்துப் பார்த்ததில் சிறப்பாகவே இயங்கியது. முக்கியமாக எளிமையாக இருந்தது. அந்த வகையில், அசலான கட்டற்ற மென்பொருள் வணிக அடிப்படையில் வெளியிடும்போது சில தீர்க்க முடியாத பாதுகாப்பு குறைபாடுகளைக் கொண்டுள்ளது. ஆனால், எஃப்ட்ராய்டில் சில நிறுவனங்கள் அந்த மென்பொருள்களின் பாதுகாப்பு சிக்கல்களை தீர்க்கிறார்கள். தனிநபர் கணினி நிபுணர்களும் உண்டு. மென்பொருட்கள் உங்களுக்கு பிடித்திருந்தால், அதை உருவாக்கியவர்களுக்கு நிதியுதவியை வழங்கலாம். இல்லையென்றாலும் சரிதான். பயன்பாட்டு வகையில் சிறப்பாக உள்ளது.வாசகர்களும் எஃப்ட்ராய்டைப் பயன்படுத்தலாம்.  ஓப்போ போனில் கூகுள் ஆப்ஸ்கள் இன்றி, அதில் ப்ரீ இன்ஸ்டாலாக உள்ள கட்டற்ற மென்பொருட்களை வைத்தே இயக்க முடியும். ஆனால் அந்த மென்பொருட்கள் பயன்படுத்த அந்தளவு வசதியானவை அல்ல.  வானொலிக்கு ட்ரான்சிஸ்டர், கேமராவுக்கு ஓப்பன் கேமரா, ஆர்ஐ மியூசிக், டெலிகிராம் எ...

முயற்சியும், பயிற்சியும் செய்தால் எழுத்தாளராக மாறமுடியும்!

படம்
            ரைட்டிங் தட் கெட் நோட்டிஸ்டு எஸ்டெல் எராஸ்மஸ் இந்த நூல் பொது வாசகர்களுக்கானது அல்ல. வளரும், துறையில் ஏற்கெனவே உள்ள எழுத்தாளர்களுக்கானது. நூலை எழுதியுள்ள எழுத்தாளர் எஸ்டெல், பல்வேறு பதிப்பகங்கள், பெண்கள் பத்திரிகைகள், நாளிதழ்களில் பணியாற்றி பல நூறு கட்டுரைகள் எழுதியுள்ளார். தற்போது சப்ஸ்டாக், பிளாக், வலைத்தளத்தளங்கள், பாட்காஸ்ட் ஆகியவற்றை நடத்தி வருகிறார். புதிய தலைமுறையினருக்கு எழுதுவது பற்றிய பயிற்சிகளை வழங்கி வருகிறார். நீங்கள் அவருடைய வலைத்தளத்திற்கு சென்று, மின்னஞ்சலுக்கு பதிவு செய்தால் கூட இலவச நூலை தரவிறக்கிக்கொள்ள வழிவகை செய்திருக்கிறார். நூல் தரவிறங்குமா என்று தெரியவில்லை. முடிந்தால் முயலுங்கள். எழுத்தாளர் பயணிதரன் என்பவர் கூட இப்படி மின்னஞ்சலில் இணைபவர்களுக்கு புத்தகப் பரிசு ஒன்றை வழங்குவதாக அறிவித்திருந்தார். ஆனால், வலைத்தளத்தில் சேர்ந்தபிறகும் கூட அவரது இலவச பரிசு இன்னும் வந்து சேரவில்லை. புதிய வாசகர்களைப் பிடிக்க இப்படியான தூண்டில்களை போடவேண்டும்போல. நூலில், எஸ்டெல் எப்படி எழுதவேண்டும், எடிட்டர்கள் கூறுவதைப் புரிந்துகொள்வது, நேரத்திற...

தேர்தல், அரசியலில் தலையிடாமல் தள்ளி நிற்க முயலும் டெக் நிறுவனங்கள்!

படம்
  கீழ்த்தரமாக பேசுவது அரசியலில் இயல்பாக இருக்கிறது. அதை இன்னும் புதிய உயரங்களுக்கு காவிக்கட்சி ஆட்கள் கொண்டு சென்று வருகிறார்கள். எதிராளி பேசும் விதமாக அதற்கு நிகராக அதை விட கீழ்த்தரமாக பேச நிறைய ஆட்கள் தயாராகி வருகிறார்கள். தனிநபர்கள் பேசுவது வேறு. அதையே டெக் நிறுவனங்கள், இணையத்தில் பதிலாக அளிப்பது வேறு. குறிப்பிட்ட கட்சி சார்ந்து தவறான பதில்களை அல்லது அவர்களுக்கு பிடிக்காதது போல நேர்மையாக பதில் சொன்னால் கூட தொழில் செய்யமுடியாது.  இந்த விதிகளை யாரும் மீறமுடியாது. மீறினால் உடனே அமலாக்கத்துறை, வருமானவரித்துறை, தேசியபாதுகாப்பு, உளவுத்துறை என பல்வேறு அமைப்புகள் தொழிற்சாலைகளுக்கு, அலுவலகங்களுக்கு வந்து சோதனையிடுவார்கள். பிறகு தேர்தல் பத்திரங்களில் காசு கொடுத்தால் மட்டுமே தொழில் பிழைக்கும். இல்லையெனில் லஞ்ச, ஊழல் வழக்கு பதிவாகும். தேசதுரோகி என பிழைப்புவாத ஊடகங்கள் அலறுவார்கள். இதற்கு யாரும் விதிவிலக்கு கிடையாது. இப்படி மிரட்டி பணம் பிடுங்குவதில் காவிக்கட்சி அதிகாரத்தில் இருப்பதால் கெட்டிக்காரத்தனம் காட்டுகிறது.  கூகுள், அரசியல் கருத்துகளைக் கூறுவது தொடர்பான பிரச்னையில், எந்த க...

மரபணு நோய்களை தீர்க்க உதவும் மரபணு வரிசை வரைபடத் திட்டம்!

படம்
  ஜெனோம் இந்தியா - மரபணு வரைபடத்திட்டம் இந்தியாவிலுள்ள 20 அறிவியல் நிறுவனங்கள் ஒன்றாக இணைந்து 10 ஆயிரம் ஆரோக்கியமான மனிதர்களின் மரபணு வரிசையை வெற்றிகரமாக உருவாக்கியுள்ளனர். இதுபற்றிய செய்தி, கடந்த பிப்ரவரி 27 அன்று வெளியிடப்பட்டது. ரத்த மாதிரிகளை சேகரிப்பது, மரபணுக்களை வரிசைப்படுத்துவது, செயல்பாட்டுமுறையை மேம்படுத்துவது, தகவல்களை சேகரிப்பது ஆகியவை முக்கியமான அம்சங்களாகும்.  ஒரு மரபணு வரிசையை சேமித்து வைக்க 80 ஜிபி நினைவகம் தேவைப்படுகிறது. 8 பீட்டபைட்ஸ் அளவுள்ள தகவல்கள் ஃபரிதாபாத்தில் உள்ள இந்திய உயிரியல் தகவல் மையத்தில் சேமிக்கப்பட்டுள்ளது. இத்தகவல்கள் பொதுமக்களின் நன்மைக்காக ஆராய்ச்சியாளர்களுக்கு வழங்கப்படவிருக்கிறது. புதிய நோய் கண்டறியும் முறைகள், சிகிச்சைகள், அரியவகை நோய்களை அடையாளம் கண்டறிவது, நோய்களை குணமாக்குவது ஆகியவற்றுக்கு மரபணு வரிசை தகவல்கள் உதவக்கூடும்.  மக்கள்தொகையில் உள்ள மரபணுக்களின் பன்மைத்தன்மையை அறிய மரபணு வரிசை வரைபடம் தேவை. அதை வைத்து பரிமாண வளர்ச்சியை அறிந்துகொள்ளலாம். கூடுதலாக, நோய் அதற்கான சிகிச்சைகளை மேம்படுத்தலாம். இதற்கு உலக நாடுகளில் சேகரிக்கப்ப...

நிறுவனம் வளரும்போது மக்களின் நம்பிக்கையைப் பெறுவது முக்கியம்! - டிக்டாக் செயலி இயக்குநர் ஷூ ஸி சூ

படம்
  டிக்டாக் இயக்குநர் ஷூ ஸி சூ shou zi chew டிக்டாக் செயலி, இசைத்துறையை சிதைக்கிறது என சில இசைக்கலைஞர்கள் புகார் சொல்கிறார்களே? நான் அப்படி நினைக்கவில்லை. நீங்கள் சமூக வலைத்தளங்களைப் பயன்படுத்துபவர் என்று முன்னர் கூறினீர்கள். ஆனால் அது உண்மையல்ல. எங்கள் தளத்தில் இருந்து அகற்றப்பட்ட சில பாடல்களை உங்களுக்கு காட்டுகிறேன். அதைப்பார்த்தால் உங்களுக்கு சில விஷயங்கள் புரியும்.  உங்களது செயலியின் வழியாக வெற்றி பெற்ற மனிதர்களையும் பார்த்திருக்கிறேன்.  டிக்டாக்கில் வீடியோக்களை உருவாக்குவதற்கான செலவு குறைவு. 15 நொடிகள் என பாடல்களை சுருக்குவதன் வழியாக நீங்கள் ஏராளமான புதிய பாடல்களைத் தேடி கேட்க முடியும். இப்படி செய்வது மக்களின் கவனத்தை நூறு சதவீதம் மடைமாற்றுகிறது என்று கூறமுடியாது. டிக்டாக்கில் வெற்றி பெற்ற பாடல்கள் பில்போர்ட் பட்டியலிலும் கூட வெற்றி பெற்றவையாக உள்ளன. இப்படி சொல்வதற்கு நிறைய எடுத்துக்காட்டுகள் உள்ளன. மக்கள் எதிர்பார்ப்பதற்கு ஏற்ப கிரியேட்டிவிட்டியாக செயல்படவேண்டியுள்ளது.  டிக்டாக்கின் அல்காரிதத்திற்கு ஏற்ப இசைக்கலைஞர்கள் தங்களை மாற்றிக்கொள்ளவேண்டும் என்று கூறுகிறீ...

வேலைவாய்ப்பை தீர்மானிக்கும் அல்காரித நிறுவனங்கள் - பாதகங்களும் விளைவுகளும் - அல்காரிதம் - நூல் விமர்சனம்

படம்
  அல்காரிதம் ஹில்கே செல்மன் ஹாசெட் புக்ஸ் வங்கிகள், பள்ளிகள், தனியார் டெக் நிறுவனங்கள் ஆகியவற்றில் அல்காரித நிறுவனங்கள் எந்தளவு பயன்படுத்தப்படுகின்றன. அதன் விளைவாக ஏற்படும் பாதகங்கள் என்னென்ன, அதை வேலை தேடுவோர் எப்படி எதிர்கொள்வது என நூலாசிரியர் விளக்கியுள்ளார்.  இன்று வேலைக்கு அனுப்பும் ரெஸ்யூம்களை அல்காரிதங்கள்தான் தேர்ந்தெடுக்கின்றன. அவை தேர்ந்தெடுத்து சில தேர்வுகளை வைக்கின்றன. இதில் ஒருவரின் உடல்மொழி, குரல், செயல்பாடு, நிறம், இனம் என அனைத்தும் பார்க்கப்படுகிறது. பிறகு அவரின் திறன் மதிப்பிடப்படுகிறது. இதன் அடிப்படையில் அடுத்தகட்ட வேலைவாய்ப்பு தேர்வுகளை பெரு நிறுவனங்கள் நடத்துகின்றன. அமேஸான் ஃபிளெக்ஸ் போன்ற நிறுவனங்களில் ஒருவர் அல்காரிதம் மூலம் கண்காணிக்கப்பட்டு, குறைகள் எழுந்தால் பெரிதாக விளக்கங்கள் கேட்காமல் ஒரே ஒரு மின்னஞ்சல் மூலம் வேலையை விட்டு நீக்கப்பட்டுவிட முடியும். இதற்கான விளக்கங்களை வேலை இழந்தவர் பெற முடியாது. இதற்காகவே தனி ஒப்பந்தங்களை அமேசான் தயாரித்து வைத்து வேலை செய்பவர்களிடம் கையெழுத்து வாங்கி வருகிறது. வாகனங்களில் உள்ள கேமராக்கள் மூலம் ஓட்டுநர்களை கண்காணிப்ப...

யோகா பற்றிய சுவாரசியமான தகவல்கள்!

படம்
  ரிக் வேதத்தில் யோகா பற்றி குறிப்பிடப்பட்டுள்ளது. ஏறத்தாழ 5 ஆயிரம் ஆண்டுகள் பழமையானது. சோப்பு விற்பவர்கள் கூறுவது போல இருக்கிறது என யோசிக்காதீர்கள். எளிமையாக செய்யும் உடற்பயிற்சிதான் யோகா. உலகம் முழுவதும் 300 மில்லியன் மக்கள் யோகா செய்கிறார்கள். சரியாக செய்கிறார்களா என்று கேட்கக்கூடாது. செய்கிறார்கள். அந்தே... உடல், மனம், ஆன்மா என்ற மூன்றும் ஒன்று என்று கூறிய பதஞ்சலி முனிவரின் தத்துவத்தில் யோகா பயிற்சி உள்ளது. ஒருவரின் ஆன்ம சக்தி என்பது உள்ளிழுக்கும்,வெளிவிடும் மூச்சில் உள்ளது. மூச்சைக் கட்டுப்படுத்துவதன் வழியாக உடலை புத்துயிர்ப்பு செய்வதோடு, ஆயுளையும் அதிகரிக்கமுடியும். இந்திய அரசியல்வாதிகள், வலதுசாரி கட்சிகள் யோகாவை கருத்தியலுக்காக பிரசாரம் செய்கிறார்கள். உண்மையில் யோகா என்பது ஒரு வாழ்க்கை முறை. வெறும் உடற்பயிற்சி மட்டும் அல்ல. பெரும்பாலான மேற்குலக மக்கள் அதை உடற்பயிற்சியாகவே கருதுகிறார்கள்.  பொதுவாக யோகா  பயிற்சிகள், உடலின் இறுக்கத்தை தளர்த்துபவை. உடலை இறுக்கமாக்கும் எடை பயிற்சிகள் போல அவற்றை செய்துவிட்டு குளிக்கக்கூடாது. குளித்துவிட்டு யோகா செய்தால் உடலின் நெகிழ்வுத்...

நேரடி சாட்சியத்தில் ஏற்படும் பிழைகளை கண்டறிந்த உளவியலாளர்!

படம்
  ஒரு மோசமான விபத்து நடைபெற்றிருக்கும். அதை பல்லாண்டுகளுக்கு பிறகும் சம்பவ இடத்தில் இருப்பவர் நினைவுகூரலாம்.அதற்கு என்ன காரணமாக இருக்கும்? அந்த விபத்தில் அவருக்கு சம்பந்தமான யாரோ ஒருவர் மாட்டிக்கொண்டு இறந்திருப்பார். அல்லது நினைத்துப் பார்க்க முடியாத அதி்ர்ச்சியை விபத்து சம்பவம் உருவாக்கியிருக்கும். காலப்போக்கில், இதை ஒருவர்  எத்தனை முறை மீள கூறினாலும் அதில் தகவல்கள் மாறிப்போயிருக்க வாய்ப்பகள் உள்ளது. குறிப்பாக எதனால் தூண்டப்பட்டு விபத்து சம்பவத்தை ஒருவர் நினைவுகூருகிறார் என்பது முக்கியம்.  கார்கள் இரண்டு சாலையில் எதிரெதிரே வருகின்றன. திடீரென மோதிக்கொள்கின்றன. இதைப் பார்த்தவர்களிடம் கார்களின் வேகம், உடைந்த பொருட்கள், அங்கு சுற்றியிருந்த பொருட்கள் பற்றி கேள்வி கேட்டால் பலரும் பலவிதமாக பதில்களை கூறுவார்கள். இதிலுள்ள உண்மையைக் கண்டுபிடிப்பது கடினம். இதைத்தான் உளவியலாளர் ஆய்வு செய்து கண்டுபிடித்து கூறினார். இதற்கான அவசியம் என்ன வந்தது? நீதியைக் காப்பாற்றத்தான்.  அப்போது நீதிமன்றங்களில் குழந்தைகளை பாலியல் சீண்டல் செய்தவர்களுக்கு எதிரான வழக்குகள் அதிகம் வந்தன. இதில் நேரடி ...

பாஸ்வேர்டால் பணயக் கைதியாகும் வாழ்க்கை

படம்
  பாஸ்வேர்ட்டால் வதைக்கப்படும் வாழ்க்கை  ஒவ்வொருமுறை விண்டோஸ் ஓஎஸ்ஸை எஸ் ஆர் எலக்ட்ரிகலுக்கு எடுத்துச்செல்லும்போதும் நான் மறந்துவிடும் விஷயம் ஒன்றுண்டு. அதுதான் பாஸ்வேர்ட். விண்டோஸ் கணினியில் இணையத்தில் இணைத்தால் மைக்ரோசாஃப்ட் அக்கவுண்டிற்கென தனி பாஸ்வேர்ட் உண்டு. பிறகு, கணினிக்கென தனி பாஸ்வேர்ட் உண்டு. இதை பதிவு செய்து மொபைலில் வரும் ரகசிய குறியீட்டு எண்ணை பதிந்து கணினியை இயக்குவதற்குள் வாயில் நுரைதள்ளிவிடும். அந்த நேர பதட்டத்தில் பாஸ்வேர்டுகள் நினைவுக்கு வந்து தொலைவதில்லை என்பதுதான் தனித்துயராக மாறுகிறது. கணினி பழுதுபார்க்கும் அண்ணனோ, பாஸ்வேர்டை இந்த முறையும் மறந்துவிட்டாய்தானே என கிண்டலாக பார்ப்பது மாறவே இல்லை. இதன் பிரச்னைகளைப் பார்ப்போம்.  லினக்ஸ் ஓஎஸ்ஸைப் பொறுத்தவரையில் அவர்கள் இயங்குவதே பாஸ்வேர்டில்தான். அதை வைத்துத்தான் டெர்மினலை இயக்க முடியும். மென்பொருட்களை இன்ஸ்டால் செய்யமுடியும். ஜினோமில் உங்கள் கணக்கு தொடங்க, கூகுள் கணக்கை இணைத்தால் போதுமானது. அப்போதுதான் இதற்கு தனியாக பாஸ்வேர்ட் கேட்கவில்லையே என மனம் நிம்மதி அடைந்தது. இது கொஞ்சம் ஆறுதலான ஓஎஸ்.  இணையத்தி...

தகவல்களை ஜனநாயகப்படுத்துகிறது ஏஐ - கூகுள் இயக்குநர் சுந்தர் பிச்சை

படம்
               சுந்தர் பிச்சை நேர்காணல் - பகுதி 2   என்விடியா நிறுவனத்தோடு சேர்ந்து ஏஐ சிப்களை தயாரித்து வருகிறீர்கள். இப்படி செய்வது ஒரே நிறுவனத்திற்கு அதிக அதிகாரத்தை தருவது போல இருக்கிறதே? நாங்கள் அந்த நிறுவனத்தோடு பத்தாண்டுகளுக்கு மேலாக தொழில் உறவைக் கொண்டிருக்கிறோம். ஆண்ட்ராய்ட் சார்ந்து ஒன்றாக வேலை செய்து வருகிறோம். ஏஐயைப் பொறுத்தவரை அவர்கள் நிறய கண்டுபிடிப்புகளை செய்திருக்கிறார்கள். எங்கள் க்ளவுட் வாடிக்கையாளர்கள் பலரும் என்விடியா வாடிக்கையாளர்கள்தான். செமிகண்டக்டர் துறை கடுமையான போட்டிகளைக் கொண்டது. இத்துறையில் முதலீடும் அதிகம் தேவை. நாங்கள் என்விடியா நிறுவனத்தோடு நல்ல உறவில் இருக்கிறோம். ஏஐ தொடர்பாக முறைப்படுத்தல் சட்டங்கள் வேண்டும் என கூறியிருக்கிறீர்கள். அந்த தொழில்நுட்பத்திற்கு பயன் அளிக்கும்படியான என்ன விஷயங்கள் கிடைக்கும் என நினைக்கிறீர்கள்? மருத்துவ காப்பீடை ஒருவர் பரிந்துரைக்கிறார், காபி ஷாப்பிற்கு செல்வதற்கான பரிந்துரை என வரும்போது பாகுபாடு இல்லாமல் ஏஐ இயங்க வேண்டும். சட்டங்கள் உருவாகும்போது ஏஐயின் செயல்பாட்டில் எந்த மாற்றமும...

செயற்கை நுண்ணறிவை எப்படி புரிந்துகொள்வது?

படம்
  ஹியூமன் கம்பாட்டிபிள் ஸ்டூவர்ட் ரஸ்ஸல் வைகிங் செயற்கை நுண்ணறிவு நம் வாழ்க்கையில் பயன்பாட்டுக்கு வந்தால் என்ன விதமான நல்லவை, அல்லவை நடைபெறும் என்பதை விளக்கி எழுதப்பட்ட நூல். பயப்பட வேண்டியதில்லை. செயற்கை நுண்ணறிவு என்றால் என்ன, அதன் வகைகள், செயல்பாட்டு வரம்புகள், அதைப்பற்றிய நூல்கள், நுண்ணறிவை மேம்படுத்த உதவிய கணிதவியலாளர்கள், அவர்களது தத்துவங்கள், கோட்பாடுகள், எழுதிய நூல்கள் என ஏராளமான தகவல்களை ஆசிரியர் விவரிக்கிறார். அடிப்படையில் செயற்கை நுண்ணறிவின் அடிப்படையை தெரிந்துகொண்டால் போதும் என்று நினைப்பவர்களுக்கான நூல் இதுதான். அந்த பிரிவிலேயே ஏராளமான தகவல்களை அள்ளிக்கொட்டியிருக்கிறார். கூகுளின் டீப் மைண்ட் தயாரிப்புகள் என்னவிதமான கணித திறன் கொண்டவை என விவரிக்கும் பகுதி இதற்கு உதாரணம். செயற்கை நுண்ணறிவை அரசு கையில் எடுத்து பயன்படுத்தினால் நன்மை என்ன, தீமைகள் என்ன என்று ஆராய்ந்த விதம் முக்கியமானது.. இந்த வகையில் சீனா மக்களைக் கண்காணிக்க செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துகிறது. குற்றவாளிகளைப் பிடிக்க என்று அரசு சொன்னாலும், தனக்கு எதிரி என்று தோன்றுபவர்களை எளிதாக பிடித்து ஒழித்துக்க...

தெரிஞ்சுக்கோ - விளையாட்டு, நூல் வாசிப்பு

படம்
  தெரிஞ்சுக்கோ – விளையாட்டு   டேபிள் டென்னிஸ் விளையாட்டில் பயன்படுத்தும் பந்தின் எடை 2.7 கிராம். விளையாட்டுகளில் பயன்படுத்தும் பந்துகளில் மிக இலகுவான எடை கொண்ட பந்து இதுவே. ஸ்நூக்கர் விளையாட்டில் எட்டு நிறங்களில் 22 பந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இதில் வெள்ளை நிறப்பந்தும் உள்ளடங்கும். குறைந்த தொலைவிலான ஸ்கேட்டிங் பந்தயங்களில், விளையாட்டு வீரர்கள் மணிக்கு 45 கி.மீ வேகத்திற்கும் அதிகமான வேகத்தில இயங்குகிறார்கள். 1981-1986 காலகட்டங்களில் பாகிஸ்தானைச் சேர்ந்த ஜஹாங்கீர் கான் என்ற   ஸ்குவாஷ் விளையாட்டு வீரர், 555 போட்டிகளில் தொடர்ச்சியாக வெற்றிபெற்ற சோதனையை நடத்தினார். ஜிம்னாஸ்டிக் விளையாட்டில் பயன்படுத்தும் பலகையின் அகலம் பத்து செ.மீ. 1912ஆம் ஆண்டு ஒலிம்பிக்ஸில் நடைபெற்ற மல்யுத்தப்போட்டி பதினொரு மணி நேரம், நாற்பது நிமிடங்களுக்கு நடைபெற்றது.   பாட்மின்டன் போட்டியில் பயன்படுத்தும் பந்து, பதினாறு வாத்துகளின் இறகுகளில் இருந்து உருவாக்கப்படுகிறது. இதன் எடை 5 கிராம்.   நூல் இந்திய எழுத்தாளர் விக்ராந்த் மகாஜன் ஒரே முறையில் தனது “யெஸ் தேங்க்யூ யுனிவர்ஸ...

தெரிஞ்சுக்கோ - இசை, நாடகம்

படம்
  தெரிஞ்சுக்கோ – இசை பியானோ கீபோர்டில் 88 கீகள் உண்டு. இதில் 52 கீகள் வெள்ளை நிறமானவை. கறுப்பு நிறமான கீகளின் எண்ணிக்கை 32 2019ஆம் ஆண்டு தனியிசை பாடல்களின் விற்பனையில் வினைல் ரெக்கார்டுகளின் பங்களிப்பு 26 சதவீதம். தனியிசை பாடல் ஒரு கோடி என்ற   எண்ணிக்கையில் விற்றால் அதற்கு பிளாட்டினம் என்ற அந்தஸ்தை அமெரிக்காவில் வழங்குகிறார்கள். ஜெர்மனியில் அகழ்ந்தெடுக்கப்பட்ட புல்லாங்குழலின் வயது 43 ஆயிரம் ஆண்டுகள் ஆகும். இசைக்கலைஞர் வோல்ஃப்கேங் மொசார்ட் தனது முதல் சிம்பொனி இசைக்கோவையை இயற்றியபோது அவருக்கு வயது எட்டு. முதல் ஓபராவை இயற்றியபோது   அவருக்கு பனிரெண்டு வயதுதான் ஆகியிருந்தது. 2019ஆம் ஆண்டு, உலக இசைத்துறையின் மதிப்பு 20.2 பில்லியன் ஆகும். நொடிக்கு   4,186 மடங்கு வேகத்தில் வாசிக்கப்படும் பியானோ நோட் சி8 ஆகும். அடால்ஃப் சாக்ஸ், பதினான்கு வகையான சாக்ஸ்போன்களை உருவாக்கினார். அவர் 1846ஆம் ஆண்டு உருவாக்கி காப்புரிமைக்கு பதிந்தார். அதில் நான்கு மட்டும் தற்போது பயன்பாட்டில் உள்ளது.   நாடகம் பிரிட்டிஷ் நாட்டில் அரங்கேற்றப்படும் புகழ்பெற்ற நாடகத்தின் பெயர், த...