இடுகைகள்

புள்ளியியல் நிறுவனம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தடுப்பூசித் திட்டம் வெற்றி அடைந்ததா? இல்லையா?

படம்
pixabay 2017 ஆம் ஆண்டு பிரதமர் மோடியால் தொடங்கப்பட்ட இந்திரதனுஷ் எனும் தடுப்பூசித்திட்டம் இன்றும் நடைமுறையில் உள்ளது. 2020க்குள் நூறு சதவீதம் என்பது லட்சியம். இதுபற்றி புள்ளியல் துறை 60 சதவீதம் என கணக்கெடுத்துள்ளது. இல்லை, நாங்கள் 83 சதவீதம் தடுப்பூசித் திட்டத்தை அமல் செய்துள்ளோம் என்று சாதிக்கிறது இந்திய அரசு. முழுமையான தடுப்பூசி குழந்தைக்கு போடுவது என்றால் என்ன? ஐந்து வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு காசநோய், கக்குவான் இருமல், டெட்டனஸ் ஆகிய பாதிப்புகள் ஏற்படாமல் காக்க அரசு வழங்கும் தடுப்பூசிகளை போட்டுக்கொள்வதாகும்.  உங்கள் பர்ஸ் பெருசு என்றால் தனியாகவும் இதனை போட்டுக்கொள்ளலாம். இல்லையெனில் அங்கன்வாடி மையம், கிராமங்களில் பால்வாடி சென்று தடுப்பூசிகளை போட்டுக்கொள்ளலாம்.  அரசு ஏன் பதற்றமாகிறது என்றால் 2015-16 ஆண்டில் அரசு இதே நிலையில்தான் இருந்தது. அப்போதும் தடுப்பூசிகளை குழந்தைகளுக்கு அரசு முழுமையாக அளிக்க முடியவில்லை. அறுபது சதவீதம் என்பது அரசுக்கு நிந்தனையாக மாறியது. இதனால்தான் தற்போது 83 சதவீதம் என்ற எண்ணைக் கூறுகிறது. எங்கு பிரச்னை தொடங்குகிறது? தோராய அளவு என்பதில்த