இடுகைகள்

தீனி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உடல் எடையைக் குறைப்பது எப்படி?

படம்
  உடல் எடையைக் குறைப்பது எப்படி? பா ராகவனே இளைப்பது சுலபம் என நூல் எழுதியிருக்கிறார். அவரே பன்னீர், வெண்ணெய் என்று சாப்பிட்டு குனுக்கெனதான் இருக்கிறார். அவர் எழுதிய நூலைப் படிப்பவர்கள் மட்டுமே உடனே இளைத்து விடுவார்களா? முடியும். அதற்கு முக்கியக் காரணம், உணவுமுறை. ஒருவர் சாப்பிடும் உணவின் அளவு. அதைக் கட்டுப்பாட்டில் வைத்தாலே உடற்பயிற்சியைத் தொடங்கும் முன்னரே உடலில் மாற்றம் தெரியும். அதற்குப் பிறகு உடற்பயிற்சி பழக்கமானால் மெல்ல உடல்எடை சீராக குறையத் தொடங்கும்.  ஹோமியோபதியில் கூட உடல் எடையைக் குறைக்கலாம் என மருந்துகளை விற்கிறார்கள். ஆனால் அதற்கு ஒருவர் கொடுக்கவேண்டிய விலை என்னவென்று யாருக்கும் தெரியாது. எனவே, மாத்திரை, டானிக்குகள், பெல்ட் என பேசும் விஷயங்களை சரியான ஆலோசனைகளோடு அணுகுவது நல்லது.  ஃபிட்னெஸ் பேண்டுகள், வாட்சுகள், ஆப்கள் நிறைய உள்ளன. இவற்றை வாங்கிக்கொண்டு சரியான உடற்பயிற்சிமுறை, அதற்கேற்ப உணவுமுறையை திட்டமிட்டால் நிச்சயமாக எடை குறைய வாய்ப்புள்ளது. கலோரி குறைய, ஊளைச்சதை அழிய, கொழுப்பு கரைய என நிறைய பயிற்சிகள் உள்ளன. இவற்றை ரெசிஸ்டன்ஸ், ஸ்ட்ரென்தனிங், கார்டியோ என பல்வேறு பெயர்கள

உணர்வுகளால் ஆனது சமையல் - கடிதங்கள் - கதிரவன்

படம்
  பெண்ணுடலை அறிய கோட்டை பயணம் ! அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு , வணக்கம் . நலமா ? நான் கடந்து வந்த செவ்வாய் திருவண்ணாமலை சென்றுவிட்டேன் . இன்று காலை பதினொரு மணிக்கு மயிலாப்பூர் அறைக்கு வந்தேன் . குடும்பஸ்தர்களின் வீட்டுக்குப் போவது எனக்கு சங்கடம் அளிக்கிற விஷயமாக உள்ளது . வினோத் அண்ணா வீட்டுக்குப் போகவில்லை . இது அவருக்கும் சற்று நிம்மதி கொடுத்திருக்கும் . திருவண்ணாமலையில் ஆலிவர் என்பவரின் அறையில் தங்கினேன் . தஞ்சையைச் சேர்ந்தவர் . வினோத் அண்ணாவைப் போல புகைப்படக்காரர்தான் அவரும் . முதலில் என்னைப் பார்த்து லெஜண்டுடா என பதற்றமானவர் , பிறகு சமாதானமாகிவிட்டார் . ஓவியம் , புகைப்படம் ஆகியவற்றில் ஆர்வம் கொண்டவர் . அதுதான் பிழைப்பும் கூட . இந்த முறை பயணத்தில் செஞ்சி கோட்டைக்குச் சென்றோம் . அங்கு வரலாற்றை அறிய விரும்புபவர்களை விட பெண்ணின் உடலை அறிய விரும்புபவர்கள்தான் அதிகம் இருந்தார்கள் . சுவர்கள் எங்கும் காதலர்களின் பெயர்கள்தான் . அதைக்கடந்துதான் வரலாறு , வெங்காயம் எல்லாம் . டிக்கெட் வாங்குவது எல்லாமே டிஜிட்டலாக க்யூஆர் கோட் மூலம்தான் . தரையில் கற்பாளங்கள் , சுவர்களில் கருங்கற்கள் இருப்பதுதான் இ

உணர்வுகளால் ஆனது சமையல்! - கடிதங்கள்- கதிரவன்

படம்
  16.1.2021 மயிலாப்பூர் அன்புள்ள நண்பர் கதிரவனுக்கு, வணக்கம். நலமா?  இங்கு ஞாயிறு. சிறப்பு திரைப்படம் போல சிறப்பு லாக்டௌன். அறையில் அடைந்து கிடப்பது பெரும் அவஸ்தை. ஊருக்குப் பொங்கலுக்குப் போனவர்கள் வீட்டிலிருந்தே பணிசெய்யும் ஆப்ஷனைப் பெற்றால் சென்னையில் போக்குவரத்து நெரிசல் குறையும். நான் அமேசானில் ஆர்டர் செய்த புத்தகங்கள் வந்துவிட்டன. இரு புத்தகங்கள் கையில் கிடைத்துவிட்டன. இன்னும் ஒரு புத்தகம் மாத இறுதியில் கிடைக்கும். மூன்றாவது நபரிடமிருந்து அமேஸான் வாங்கிக் கொடுப்பதால், காலதாமதம் என விளக்கம் கொடுக்கிறார்கள்.  ரீடர்ஸ் டைஜெஸ்ட் மாத இதழில், நடிகர் நஸ்ரூதின்ஷா பேட்டி படித்தேன். சமகாலத்தைப் புரிந்துகொண்டு ஓடிடி படங்களில் அதிகம் நடித்து வருகிறார். நேர்காணலில் நிறைய விஷயங்களை காலப்போக்கில் புரிந்துகொண்ட அனுபவத்தில் பேசியிருந்தார். சினிமாவில் முஸ்லீம்கள் பங்களிப்பு, முஸ்லீம்களுக்கு எதிரான மனநிலை, பிரிவினை, புதிய இயக்குநர்கள் என அனைத்துக்கும் விளக்கமாக பதில் சொல்லியிருந்தார். நின்னிலா நின்னிலா என்ற தெலுங்குப்படம் பார்த்தேன். தமிழ் டப்பிங்கில் தீனி. சசி என்பவர் இயக்கிய படம். அதிக உடல்நிலை கொண

சமையல் கலைஞனை இயக்கும் சிறுவயதுத் தோழி! தீனி

படம்
      தீனி             தீனி தமிழ் டப் அசோக் செல்வன், நித்யா, ரிது ஏ.எஸ் சசி லண்டனில் உள்ள அமரா என்ற ஹோட்டலுக்கு தேவ் என்ற இளைஞன் வேலைக்கு வருகிறான். அவனுக்கு உடல் எடை அதிகம். தசை தொடர்பான நோய் இருப்பதாக கூறுகிறான். நிறைய நேரங்களில் திடீரென வினோதமாக நடந்துகொள்கிறான். பாத்திரங்களை தட்டி விடுகிறான். பிறர் மீது மோதுகிறான். யாரோ இழுத்தது போல வேறு திசைக்கு செல்கிறான். ஆனால் இந்த குறைபாடுகளைத் தாண்டி அவனுக்கு நல்ல மனம் உள்ளது. பிறரின் பிரச்னைகளை அவனால் கவனிக்கமுடியும்.  அவன் வேலை செய்யும் ஹோட்டல் தலைமை சமையல்காரர் நாசர் மிக கண்டிப்பானவர். அவர்  பதினைந்து ஆண்டுகளாக சமைக்காமல் இருக்கிறார். அதற்கு அவர் தனது ஆசை மகளை பிரிந்ததுதான் காரணம். இதனால் தினசரி தற்கொலை செய்துகொள்ளலாமா என்ற அளவிற்கு மன அழுத்தத்திற்கு சென்று திரும்புகிறார். இந்த நேரத்தில் தேவின் வருகை அவரசது செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இறுக்கமாக இருக்கும் அந்த சமையல் அறையின் சூழலை கலகலப்பாக மாற்றுகிறான் தேவ். அவன் சமையல் காரன் என்றாலும் கூட அவனை உடனே சமைக்க விடவில்லை. பாத்திரங்களை கழுவ வைக்கிறார்கள். இதற்கெல்லாம் அவன் கவலைப்பட