இடுகைகள்

மருத்துவம்- கால்சியம் பற்றாக்குறை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எலும்புகளின் அடர்த்தி குறைய என்ன காரணம்?

கால்சியத்தை கைப்பற்றுவோம் ! உலக ஆஸ்டியோபோரோசிஸ் பவுண்டேஷனின் வரைபடத்தில் கால்சியம் பற்றாக்குறையில் ஆசியாவில் சீனாவுக்கு அடுத்த இடத்தில் இந்தியா இடம்பெற்றுள்ளது . ஆரோக்கிய உடல்நிலைக்கு தினசரி உணவில் 400 மி . கி கால்சியம் அவசியத்தேவை . விட்டமின் டி உடம்பில் குறைந்தால் கால்சியம் சத்தை நம் உடல் கிரகிக்க முடியாது என்பது அடிப்படை . இதன் விளைவாக ரிக்கெட்ஸ் நோய் தோன்றி எலும்புகள் மென்மையாகி அடிக்கடி முறிந்துபோகும் அவலம் ஏற்படும் . வளரிளம் பருவத்தில் எலும்புகள் உறுதியாக சரியான உணவு சூழல் அமையாதபோது 30 வயதில் எலும்புகளின் அடர்த்தி குறையும்போது பல்வேறு எலும்புக்குறைபாடுகள் ( ஆஸ்டியோபோரோசிஸ் உட்பட ) தோன்றும் . கால்சியம் , புரதம் , விட்டமின் டி ஆகியவை எலும்புகளுக்கு அதிஅவசியத்தேவை . தேசிய ஊட்டச்சத்துக்கழகம் தினசரி உணவில் 600 மி . கி கால்சியத்தை உட்கொள்ள பரிந்துரைக்கிறது . மேற்குலகில் தினசரி ஆயிரம் மி . கி கால்சியத்தை (18-50 வயதினருக்கு ) பரிந்துரைக்கிற நிலையில் இந்திய அரசு இதனை சீர்திருத்தவேண்டும் என்கின்றனர் மருத்துவ வல்லுநர்கள் . 200 மி . லி பாலில் 240 கி . கால்சியம