இடுகைகள்

காசநோய் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நோபல் பரிசு பெற்ற நியூரோட்ரான்ஸ்மீட்டர் ஆய்வு - ஓட்டோ லோவி

படம்
ஓட்டோ லோவி (1873 -1961) ஜெர்மனியின் ஃபிராங்க்பர்ட் நகரில் பிறந்தவர், லோவெய். பெற்றோர் ஜேக்கப் லோவி, அன்னாவில்ஸ்டாட்டர். பிரான்ஸ் நாட்டின் ஸ்ட்ராஸ்பர்க்கில் படித்து மருத்துவப் பட்டம் பெற்றார். காசநோய் பாதிப்பால் மக்கள் கடும்பாதிப்புக்கு உள்ளாவதைப் பார்த்தார். இதனால், குணப்படுத்தமுடியாத நோய்களைப் பற்றிய ஆராய்ச்சிகளை செய்ய முயன்றார்.  1902ஆம் ஆண்டு லண்டனுக்கு இடம்பெயர்ந்தவர்,ஹென்றி டேலுடன் இணைந்து ஆராய்ச்சியை செய்யத் தொடங்கினார்.  1936ஆம் ஆண்டு, டேல் மற்றும் லோவி செய்த நியூரோட்ரான்ஸ்மிட்டர்  ஆய்வுக்கு மருத்துவப்பிரிவில் நோபல் பரிசு கிடைத்தது. 1938ஆம் ஆண்டு ஆஸ்திரியாவில் ஆய்வுகளைச் செய்துகொண்டிருந்தவர் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டது.எனவே, 1940ஆம் ஆண்டு அமெரிக்காவுக்கு சென்று, நியூயார்க் பல்கலைக்கழகத்தில் மருந்தியல் துறையில் (Pharmacology) பேராசிரியராகப் பணிக்குச் சேர்ந்தார்.   1954ஆம் ஆண்டு ராயல் சொசைட்டியில் வெளிநாட்டு உறுப்பினராக நியமிக்கப்பட்டார்.   https://www.nobelprize.org/prizes/medicine/1936/loewi/biographical/

உலக நாடுகளை அச்சுறுத்திய காசநோய் வரலாறு!

படம்
  பான்டம் பிளேக் வித்யா கிருஷ்ணன் பெங்குவின் ஹவுஸ்  பத்தொன்பதாம் நூற்றாண்டில் உலக நாடுகளை அச்சுறுத்திய காசநோய் எப்படி பரவியது, லட்சக்கணக்கான மக்களைக் கொன்றது என்பதைப் பற்றி எழுதியுள்ளார் வித்யா. நியூயார்க்கின் குடிசைகள் தொடங்கி நியூயார்க் வரை காசநோய் பாதிப்பு இருந்தது. கைவைத்திய மருந்துகள் முதல் ஆங்கிலமருத்துவ ஆராய்ச்சிகள் வரை காசநோயை அழிக்கும் பல்வேறு முயற்சிகளை நூல் ஆசிரியர் கூறுகிறார்.  வயலெட்ஸ் கியூங் சூக் சின் ஹாசெட் 699 1970ஆம் ஆண்டு தென்கொரியாவில் நடைபெறும் கதை. சான், தனியாக வாழ்ந்து வரும் நபர். அவருக்கு நாமே என்ற என்ற பெண் ஸ்னேகிதி கிடைக்கிறார். சானுக்கு அவளை மிகவும் பிடித்துப்போகிறது. ஆனால் திடீரென ஒருநாள் மாலை அவளை நாமே நிராகரிக்கிறாள். பெண்ணின் மனம், ஆசை, சமூகத்தின் பல்வேறு கட்டுப்பாடுகள் என நிறைய விஷயங்களை நூலில் கியூங் பேசுகிறார்.  மேட் இன் ஃப்யூச்சர் பிரசாந்த் குமார் பெங்குவின் ராண்டம் ஹவுஸ்  ரூ.499 மார்க்கெட்டிங் தொடர்பான நூல் இது. இதில் எதிர்காலத்தில் மார்க்கெட்டிங்கை எப்படி செய்வது என பல்வேறு ஆலோசனைகளை சொல்லுகிறார் பிரசாந்த் குமார். ஊடகம், எழுத்து, பல்வேறு செல்வாக்கு ச

பொருளாதாரத்தை சிதைக்கும் காசநோய்!

படம்
இந்தியாவை வதைக்கும் காசநோய்! விறகு புகை, தொழிற்சாலை மாசுபாடு, பசு சாணம் ஆகியவை காரணமாக ஏற்படும் காசநோயின் அளவு தொண்ணூறுகளில் 28 சதவீதமாக இருந்து தற்போது 55 சதவீதமாக உயர்ந்துள்ளது. மார்ச் 2019 ஆம் ஆண்டு இந்தியா ஸ்பெண்ட் செய்த ஆய்வுப்படி பத்து லட்சம் பேர் ஆண்டுதோறும் இறந்து வருகின்றனர். அரசு இந்நோய்களைக் கட்டுப்படுத்துவதில் தடுமாறி வருகிறது. ஆண்டுதோறும் இந்தியா இந்நோயைக் கட்டுப்படுத்த 32 ஆயிரம் கோடி ரூபாயை செலவழித்து வருகிறது. அதாவது அரசு அப்படிக் கூறுகிறது. இத்தொகை நடப்பு ஆண்டில் தேசிய சுகாதாரத் திட்டம், கல்வித்திட்டம், பிரதமந்திரி வீடு கட்டும் திட்டம் ஆகியவற்றுக்கு ஒதுக்கப்பட்ட தொகையை விட இத்தொகை அதிகம். 2010 ஆம் ஆண்டு தொற்றா நோய்களுக்கான நாடு தழுவிய திட்டம்  தொடங்கப்பட்டது. இதில் புற்றுநோய், இதயநோய், நீரிழிவு ஆகியவை முக்கியமாக கவனிக்கப்பட்டன.  2018 ஆம் ஆண்டு ஆயுஷ்மான் பாரத் திட்டத்தில் ஐந்து கோடிக்கும் அதிகமானோர் இணைந்தனர். நாங்கள் மாநிலங்களுக்கு கருவிகள் வாங்க 150,000, மருந்துகள் வாங்க 250000 ரூபாய் வழங்குகிறோம். மைசூருவைச் சேர்ந்த லக்ஷம்மா, பால் கறந்து வீடுகளுக