இடுகைகள்

மேஜிக்பஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மேஜிக் பஸ் சாதித்தது எப்படி?

படம்
மேஜிக் பஸ் சாதித்தது எப்படி? 1999 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட மேஜிக் பஸ் என்ஜிஓ அமைப்பு, குழந்தைகளுக்கு ஆளுமை தொடர்பான வகுப்புகளை எடுப்போடு அவர்களுக்கு கல்வி மூலம் வறுமையிலிருந்து வெளியே வருவதற்கான வாய்ப்பையும் ஏற்படுத்தி வருகிறது. ஏறத்தாழ இருபது ஆண்டுகால பணியில் 3,75,000 குழந்தைகளின் வாழ்க்கையில் மாற்றத்தை ஏற்படுத்தி சாதித்துள்ளது இந்த தன்னார்வ தொண்டு நிறுவனம். இந்தியா, மியான்மர், நேபாளம், வங்காள தேசம் ஆகிய நாடுகளில் செயல்பட்டு வருகிற அமைப்பு இது. அதன் இயக்குநர் ஜெயந்த் ரஸ்தோகியிடம் பேசினோம். கல்வியை அளித்து மாணவர்களுக்கு உதவ வேண்டும் என்று எண்ணம் எப்போது வந்தது? முதலில் எங்கள் பணியை மும்பையின் குடிசைப்பகுதிகளில்தான் தொடங்கினோம். குறிப்பாக, இந்தியாவில் எங்களுடைய செயல்பாடு சிறப்பாக பயனளித்துள்ளது. அதனால்தான் எங்கள் கல்வித்திட்டத்தை விளையாட்டுடன் இணைந்ததாக உருவாக்கினோம். நீங்கள் இந்தியாவிலுள்ள எந்த கிராமத்துக்கும் கால்பந்தை எடுத்துக்கொண்டு செல்லலாம். பாடநூலை விட கால்பந்து நிறைய மக்களை, குழந்தைகளை நம்முடன் ஒன்றாக இணைக்கிறது. சிறுவர்கள் குறைந்த பட்சம் பனிரெண்டாவது வரை படி