இடுகைகள்

சமூக பொறுப்புணர்வு திட்டம். சிஎஸ்ஆர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கேட்டுக்கொள்ள வேண்டிய கேள்விகள்!

படம்
பிக்சாபே 4 கேட்டுக்கொள்ளவேண்டிய கேள்விகள் ! சமூக பொறுப்புணர்வு திட்டங்களை பொறுத்தவரை இந்தியாவில் நிறைய விஷயங்களை செய்ய முடியும் . அரசும் ஆதரவுக்கரம் நீட்டும் . ஆனால் இதற்காக திட்டம் அவசியம் .. ஒரு விஷயத்தை கையில் எடுத்துவிட்டு அதன் பிரச்னைக்கான தீர்வு கிடைத்துவிட்டது என்று கலைந்து போய்விடக்கூடாது . கல்வி , சுகாதாரம் , சூழல் போன்ற பிரச்னைகளை நீங்கள் கையில் எடுத்தால் செய்வதற்கு நிறைய விஷயங்கள் உண்டு . உதாரணமாக சென்னையில் தண்ணீர் பிரச்னை ஏற்பட்டபோது , டைம்ஸ் ஆப் இந்தியா வாட்டர் பாசிட்டிவ் என்ற பிரசாரத்தை கையில் எடுத்தது . மக்களின் நினைவில் நீர் பற்றிய கவனத்தை கொண்டு வந்தது . அதேநேரம் ஆனந்த விகடன் தன்னார்வலர்களை திரட்டி நீராதாரங்களை தூர்வாரும் முயற்சிகளை செய்தது . அதுதொடர்பான செய்திகளுக்கு வாரந்தோறும் பக்கங்களை ஒதுக்கியது . இதெல்லாம் சினிமாவை வைத்து வியாபாரம் செய்கிறார்கள் என்ற பெயரை கொஞ்சமேனும் மாற்றும் விஷயங்கள் . இந்த பிரசாரங்களை , திட்டங்களை செய்வதில் பல்வேறு தடைகளும் எழக்கூடும் . எனவே திட்டங்களை தயாரிக்கும்போது நீங்கள் என்ன கேள்விகளைக் கேட்கவேண்டும் என்