இடுகைகள்

ஆர்தர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எளிய குடும்பத்தில் பிறந்து நாடுகளுக்கு இடையிலான போரில் கடவுள் தேசத்தால் பயிற்றுவிக்கப்படும் வீரனின் கதை!

படம்
    பிகினிங் ஆப்டர் தி எண்ட் மாங்கா காமிக்ஸ் 200 அத்தியாயங்கள். குன்மாங்கா.காம் இந்த காமிக்ஸில் இரண்டு கதைகள் உள்ளன. ஒன்று கிங் கிரேவின் கதை. அடுத்து அவரின் மறுபிறப்பு கதை. தொடக்கத்தில் நாம் வாசிப்பது கிங் கிரேவின் மறுபிறப்பு கதை. கிங் கிரே எப்படியோ திடீரென இறந்துபோகிறார். அவரது வாழ்க்கை பற்றிய விஷயங்கள் கூறப்படுவதில்லை. ஆனால், பதிலாக அவர் குழந்தையாக கூலிவேலைகளை செய்யும் ஒரு தம்பதிக்கு மகனாக பிறக்கிறார். அவன் இவன் என்று கூறிக்கொள்வோம். ஆர்தர் லெய்வென்னின் கதை இது. அக்கதையின் போக்கினூடே திடீரென கிங் கிரேவின் முன்கதையும் கூறப்படுகிறது. இடையில் ஜாஸ்மின் பிளேம்ஸ்வொர்த்தின் கதையும் கூட. எனவே, இருநூறாவது அத்தியாயத்தை தொடும்போது எதற்கு இத்தனை பாத்திரங்களின் முன்கதை கூறவேண்டும் என்று கூட தோன்றுகிறது. இந்த இடத்தில் கதாசிரியர் சற்று குழம்பிவிட்டாரோ என்று தோன்றுகிறது. ஆர்தர் லெய்வென் பிறப்பால் தாழ்த்தப்பட்டவன். அவன் தன்னுடைய உழைப்பால் மெல்ல முன்னேறி வளர்கிறான். ஒருகட்டத்தில் எல்ப் இளவரசியைக் காப்பாற்றி அவர்களுடை அரசரின் அன்பையும் ஆதரவையும் பெறுகிறான். அவர்களின் மருமகன் ஆகும் நிலை. அவனை ஏ...