இடுகைகள்

புத்திசாலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புத்திசாலித்தனத்தை அளவிடும் சோதனைகள்!

படம்
  சோறு தின்றுவிட்டு பற்களில் உள்ள துணுக்குகளை நீக்குவதற்கு பற்குச்சி உதவுகிறது. ஆனால் அதே குச்சியை வைத்து ஐரோப்பிய நாடுகளில் உள்ள புகழ்பெற்ற கட்டுமானங்களை ஒருவர் உருவாக்கினால் அவரது புத்திசாலித்தனத்தை என்ன சொல்லுவீர்கள்? இ்ந்தியாவில் இதுபோன்ற விஷயங்களுக்கு பெரிய மதிப்பில்லை. மதம், சாதி, இனம் பார்த்து பாராட்டுவது இந்நாட்டின் தனிக்குணம். அயல்நாடுகளில் இதை ஏற்றுக்கொண்டு புதுமைத்திறன் என்கிறார்கள். அதை இனவெறி கடந்தும் பாராட்டுகிறார்கள். இப்படி மேதாவியாக யோசிப்பவரின் புத்திசாலித்திறனை அளக்க ஐக்யூ அளவீடுகள் கூட உண்டு. 1905ஆம் ஆண்டு வரை ஒருவரின் புத்திசாலித்தனத்தை அளவிட அளவீடு என்று ஒன்று உருவாக்கப்படவில்லை. பிரெஞ்சு உளவியலாளரான ஆல்பிரட் பைனட், தியோடர் சைமன் ஆகியோர் இணைந்து பைனட் சைமன் ஸ்கேல் என்ற அளவீட்டை உருவாக்குகிறார்கள். இதில் குழந்தைகளின் புத்திசாலித்தனத்தை அளவிடும் அம்சங்கள் உள்ளன. நினைவுத்திறன், கவனம், பிரச்னையை தீர்க்கும் திறன் ஆகியவை கணக்கிடப்பட்டன.  இதில் தோராயமான ஐகியூ அளவீடு 100. அதிமேதாவி என்றால் 145. மற்றபடி பிறர், எழுபது முதல் 130க்குள் வருவார்கள். உலகில் மேதாவி என்பவர்களின் அ

ஆட்டு மந்தைகளைக் கட்டுப்படுத்தி மேய்க்கும் புத்திசாலி நாய்!

படம்
  பார்டர் கோலி நாய் இனம் டெப் பைலே, இசைக்கலைஞராக இயங்கி வருபவர். இவரின் அப்பா, உளவியல் பேராசிரியராக பணியாற்றி ஓய்வு பெற்றவர. தனது அப்பா மூலம் பார்டர் கோலி என்ற இன நாய் ஒன்றை டெப் பெற்று வளர்த்து வந்தார். இந்த நாய், ஆட்டுக்கூட்டங்களை வழிநடத்துவதற்காக விவசாயிகளில் வளர்க்கப்படுகிறது. ஸ்காட்லாந்து நாட்டில் பார்டர் கோலி நாயினம் விவசாயிகளிடையே மிகவும் பிரபலம்.   இந்த நாயினம் எப்போதும் உற்சாகத்தோடு இயங்க கூடியது. அதிகம் சலிப்பு ஏற்படாமல் பார்த்துக்கொள்வது முக்கியம். இதற்கென விளையாட்டுகளை சொல்லிக்கொடுத்து அதை உற்சாகத்தோடு வைத்திருக்கலாம். டெப் பைலே வளர்த்த பார்டர் கோலி நாய்க்கு, சேசர் என்று பெயர். இந்த நாய்க்கு ‘உட்கார்’ அல்லது ‘அமைதியாக இரு’ என்றாலோ புரிவதில்லை. ஆனால், ‘அமைதியாக இரு’, ‘ஹாலுக்குப் போ’ என்று கூறினால் புரிந்துகொள்ள முடிந்தது. அதேநேரம் சில பொருட்களை நினைவுபடுத்தி அதை எடுத்து வா என்றால், எடுத்து வந்தது. அதிகம் எதிர்பார்க்காதீர்கள். இரண்டரை வயது குழந்தையின் புத்திசாலித்தனத்தை சேசர் கொண்டிருந்தது. உலகிலேயே சொற்கள், வார்த்தைகள், அதற்கான பொருள் என கற்றுக்கொள்வதில் மனித இனமே தேர்

சீரியல்கொலைகாரர்கள் புத்திசாலிகளா இல்லையா?

படம்
            சைக்கோ டைரி சீரியல் கொலைகாரர்கள் பிறக்கிறார்களா அல்லது உருவாக்கப்படுகிறார்களா ? இப்படி ஒரு கேள்வியை கேட்டு தொடங்கிய விவாதத்திற்கு இன்றுவரை முடிவே இல்லாமல் சென்று கொண்டிருக்கிறது . இயற்கையா அல்லது வளர்ப்பு முறையா என்று கூட கேள்வியை நாம் அமைத்துக்கொள்ளலாம் . கொடூரமான கொலைகள் வல்லுறவு சித்திரவதை என ஒருவன் செய்யவேண்டுமானால் உறுதியாக அவன் மூளையில் ஏதோ பாதிப்பு ஏற்பட்டிருக்கவேண்டும் . அதுவும் அவனது மரபணுரீதியான சிக்கல்தான் இப்படி ஒரு வன்முறையை உருவாக்குகிறது என பேசுகிறார்கள் இதற்கு மறுதரப்பு , அப்படி கூற முடியாது . ஒருவனது பிறப்பிலிருந்து அவன் பார்க்கும் மோசமான விஷயங்கள்தான் அவனை இப்படி தவறான வழிக்கு மடைமாற்றுகிறது . இன்னொரு குழு , மேற்சொன்ன இரண்டின் கலப்புதான் கொலைகார ர்களை உருவாக்குகிறது என நம்புகிறார்கள் . அறிவியல் முறைப்படி யாரும் பிறக்கும்போது தீயசக்தி கொண்டு மரபணுக்களோடு பிறப்பதில்லை . சூழலையும் இதற்கு குறைசொல்லமுடியாது . ஆனால் வன்முறை , வறுமை , சித்திர்வதை நிறைந்த சூழல்கள் ஒருவரை கடுமையாக மனதளவில் பாதிக்கும் என்பது உண்மை . இவை இரண்டின் கலப்புதான் கொலைகாரர்கள்

இருமடங்கு புத்திசாலித்தனத்தின் விளைவு?

படம்
டாக்டர். எக்ஸ் நாம் இப்போது இருப்பதை விட புத்திசாலியாக இருந்திருந்தால்..... ஜியோமி போன்களை நோக்கியாவுக்கு முன்பே கண்டுபிடித்திருப்போம். 48 எம்பி கேமராவை வைத்து கிளு கிளு வீடியோக்களை உருவாக்கி பஞ்சாயத்து செய்திருப்போம். பிட்காயின்களில் பரிவர்த்தனை செய்ய ஆரம்பித்திருப்போம். ஹாலோகிராமில் பல்வேறு வித்தைகள் செய்திருப்போம். விண்வெளியில் காலனிகள் அமைந்திருக்கும் என ஏகமாக கற்பனைகள் பறக்கிறதா? பத்தொன்பதாம் நூற்றாண்டு புத்திசாலி ஆய்வாளரான ஐசக் நியூட்டனுக்கு கூட நாம் ஐக்யூ டெஸ்ட் செய்யவில்லை. அதிபுத்திசாலி என்பதால் ஐக்யூ டெஸ்ட் 200 மதிப்பெண்களுக்கு வைக்கப் போவதில்லை. புத்திசாலித்தன காரியங்களை விட அதை நிரூபிக்கத்தான் அதிக விஷயங்கள் செய்யவேண்டியிருக்கிறது இல்லையா?

சுடோகு விளையாடினால் மூளை கூர்மையாகுமா?

படம்
நேரம் கிடைக்கும்போது சிலர் இபுக் படிப்பார்கள். சிலர் போனில் கேம்ஸ் விளையாடுவார்கள். சிலர் அதில் ஆபாச படங்களைப் பார்ப்பார்கள். சிலர் சுடோகு, குறுக்கெழுத்துப் போட்டியை விளையாடுவார்கள். இதில் எது சிறந்தது என்று நான் கூறப்போவதில்லை. யாருக்கு என்ன தேவையோ அதைத்தானே செய்ய முடியும். மூளையை உசுப்புவது என்பது வியாபாரத்திற்கான விஷயம். சுடோகு, குறுக்கெழுத்துப்போட்டிகள் ஆகியவை இவ்வகையில் வரும என பலரும் நினைக்கிறார்கள். ஆனால் ஆதாரமின்றி பலரும் இதனை நம்புகிறார்கள் என்பது அதிர்ச்சியளிக்கும் உண்மை. 2016 ஆம் ஆண்டு இதுபோல மூளையை புத்துணர்ச்சி கொண்டதாக மாற்றுகிறோம் என்று விளையாட்டு பேக்கேஜை அளித்த நிறுவனம் வழக்கில் மாட்டிக்கொண்டது. பின் நிறுவனம் அல்சீமர் நோய் தீர்ப்பதற்கும், மூளையின் செயல்பாட்டை மாற்றுவதற்குமாக எந்த ஆதாரமும் கிடையாது என உறுதியானது. நிறுவனத்திற்கு 2 மில்லியன் டாலர்கள் அபராதம் விதிக்கப்பட்டது. எனவே சுடோகு விளையாடுவதை உங்கள் பொழுதுபோக்காக வைத்துக்கொள்ளுங்கள். தயவு செய்து கண்ணாடி போட்டா புத்திசாலி என்பது மாதிரியான உதாரணங்கள் வேண்டாம். அது ஆபத்து.