இடுகைகள்

இமயமலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நீரின்றி தவிக்கப்போகும் கோடிக்கணக்கான மக்கள்!- இமாலயத்தில் உருகும் பனிப்பாறைகள்

படம்
  சிந்து, கங்கை, பிரம்ம புத்திரா ஆகிய ஆறுகள் சூழல் மாற்றத்தால் பாதிக்கப்பட்டு வருகின்றன. இதனால் இவற்றிலிருந்து கிடைக்கும் நீரின் அளவு குறைந்து வருகிறது. ஆறுகள் உருவாகி வரும் இமயமலையில் இதற்கான பாதிப்புகள் தொடங்குவதால் விரைவில் டெல்லி, பெங்களூரு, இந்தூர், ரூர்க்கி, நேபாளம், அகமதாபாத் ஆகிய நகரங்கள் பாதிக்கப்படும் வாய்ப்பு உள்ளது.  ஜம்மு, காஷ்மீர், பஞ்சாப்பின் சில பகுதிகள், ஹரியானா ஆகியவை சிந்து நதியினை நம்பியுள்ளன. டெல்லி, உத்தர்காண்ட், உத்தரப்பிரதேசம், மத்தியப்பிரதேசம், மேற்கு வங்கம், ராஜஸ்தானின் பெரும்பகுதி கங்கை நதியை நம்பியே நிலப்பரப்புகள் உள்ளன.  அசாம், சிக்கிம், நாகலாந்து ஆகிய வடகிழக்கு மாநிலங்கள் பிரம்ம புத்திரா ஆற்றை நம்பியே உள்ளன.  உலக மக்கள் தொகையில் 13 சதவீதம் பேர் நீர் தட்டுப்பாட்டால் பாதிக்கப்படுவார்கள் என மதிப்பிடப்பட்டுள்ளது. இவர்கள் டெல்லி, டாகா, லாகூர், கராச்சி, கொல்கத்தா ஆகிய நகரங்களையே அதிகம் சேர்ந்தவர்களாக இருப்பார்கள். உலகளவில் பார்த்தால் எட்டில் ஒருவர் என்று கூறலாம்.  இமாலயத்திலுள்ள காரகோரம் பகுதியில் உருவான பனிப்பாறைகள் மெல்ல வெப்பத்தால் உருகத் தொடங்கியுள்ளன. இதனால

ஆடை வடிவமைப்பு, மலையேற்றம், சினிமா, தொழில் சாதிக்கும் பெண்கள்! - கிருஷ்ணா பாட்டில், அங்கிதா, ஸ்வேதா, ஹர்சிதா

படம்
                கிருஷ்ணா பாட்டீல் இமாலயத்தில் உள்ள சாடோபந்த மலையில் ஏறிய இளம்வயது பெண் இவர்தான் . மகாராஷ்டிரா மாநிலத்திலிருந்து இமயமலைக்கு சென்ற முதல் பெண் கிருஷ்ணாதான் . 2007 ஆம் ஆண்டு மலையேற்றம் பற்றி உத்தர்காசியிலுள்ள நேரு இன்ஸ்டிடியூட்டில் படித்தார் . பிறகு அதிலேயே அட்வான்ஸ் கோர்சும் முடித்தார் . பதினெட்டு வயதில் படிப்பின் ஒரு பகுதியாக மலையேற்றத்தைத் தொடங்கிவிட்டார் . மூன்று வயதிலிருந்து மலையேற்றம் செய்யவேண்டும் என்று நினைத்து வந்தவர் கிருஷ்ணா . ஏழு கண்டங்களிலுள்ள ஏழு மலைத்தொடர்களில் ஏறிவிட்டார் . அதற்குப் பிறகு 2010 இல்தான் இமயமலையில் ஏறுவதற்கான முயற்சியைத் தொடங்கினார் . மெக்கின்லி மலை ஏறும்போது தொழில்நுட்பரீதியான தடைகள் தோன்றின . ஒருவகையில் பெண்கள் சாதிப்பதற்கான பல்வேறு தடைகளை கிருஷ்ணா பாட்டீல் தனது சாதனைகள் மூலம் ஓரளவு தகர்த்துவிட்டார் . இயற்கைச்சூழலோடு இணைந்து வாழ்வது பற்றி திட்டமிட்டுக்கொண்டிருக்கிறார் . ஆறு கண்டங்களிலுள்ள மலையேற்ற பெண்களில் இவரும் சுத்தமான நீர் , காடுகள் பாதுகாப்பு நிகழ்ச்சிக்காக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார் . தையல் மற்றும் ஓவியங்களிலும்