இடுகைகள்

இவான் அயர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

முதலாளித்துவத்தால் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்கள்தான்! - திரைப்பட இயக்குர் இவான் அயர்

படம்
    இவான் அயர் இயக்குநர் இவான் அயர் இவர் இயக்கியுள்ள மீல் பத்தார் எனும் படம் முதலாளித்துவ சமூகத்தில் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் பிரச்னை பற்றி பேசுகிறது . இவர் சண்டிகர் நகரைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர் . கடந்தாண்டு வெனிஸ் திரைப்படவிழாவில் உங்கள் படம் மீல் பத்தார் திரையிடப்பட்டது . அப்படம் பற்றி நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் , எங்கே செல்லவேண்டும் என்பது பற்றி கூறுவதாக கூறினீர்கள் . கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன் . படத்தலைப்பிற்கு அர்த்தம் மைல்கல் என்பது . மைல்கல் என்பதுதானே நீங்கள் எங்கே இருக்கிறீர்கள் . எவ்வளவு தூரம் போக முடியும் என்பதைக் கூறுகிறது . இதற்காகவே படத்திற்கு மீல் பத்தார் என தலைப்பு வைத்தேன் . ஆனால் படத்தில் ஐம்பதாயிரம் மைல்களை கடந்தபிறகு அவன் , தான் என்ன சாதித்தோம் என்பதே அவனுக்குதெரியாமல் இருக்கிறது . நிலையாமை பற்றித்தான் இங்கு பேசுகிறேன் . டெல்லியில் நடைபெற்ற குழு வல்லுறவு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 2018 இல் சோனி என்ற படத்தை உருவாக்கினீர்கள் . உங்களது இரண்டாவது படத்தை எப்படி இந்த முறையில் உருவாக்க முடிந்தது ? பஞ்சாபி