முதலாளித்துவத்தால் பாதிக்கப்படுவது அடித்தட்டு மக்கள்தான்! - திரைப்பட இயக்குர் இவான் அயர்

 

 


இவான் அயர்




இயக்குநர் இவான் அயர்


இவர் இயக்கியுள்ள மீல் பத்தார் எனும் படம் முதலாளித்துவ சமூகத்தில் பாதிக்கப்பட்ட அடித்தட்டு மக்களின் பிரச்னை பற்றி பேசுகிறது. இவர் சண்டிகர் நகரைச் சேர்ந்த திரைப்பட இயக்குநர்.



கடந்தாண்டு வெனிஸ் திரைப்படவிழாவில் உங்கள் படம் மீல் பத்தார் திரையிடப்பட்டது. அப்படம் பற்றி நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், எங்கே செல்லவேண்டும் என்பது பற்றி கூறுவதாக கூறினீர்கள். கொஞ்சம் விளக்கமாக சொல்லுங்களேன்.


படத்தலைப்பிற்கு அர்த்தம் மைல்கல் என்பது. மைல்கல் என்பதுதானே நீங்கள் எங்கே இருக்கிறீர்கள். எவ்வளவு தூரம் போக முடியும் என்பதைக் கூறுகிறது. இதற்காகவே படத்திற்கு மீல் பத்தார் என தலைப்பு வைத்தேன். ஆனால் படத்தில் ஐம்பதாயிரம் மைல்களை கடந்தபிறகு அவன், தான் என்ன சாதித்தோம் என்பதே அவனுக்குதெரியாமல் இருக்கிறது. நிலையாமை பற்றித்தான் இங்கு பேசுகிறேன்.




டெல்லியில் நடைபெற்ற குழு வல்லுறவு சம்பவத்தை அடிப்படையாக கொண்டு 2018இல் சோனி என்ற படத்தை உருவாக்கினீர்கள். உங்களது இரண்டாவது படத்தை எப்படி இந்த முறையில் உருவாக்க முடிந்தது?


பஞ்சாபி லாரி ஓட்டுநர் டெல்லியில் பணிபுரிவதாக கதை அமைக்கப்பட்டது. எனக்கு உலகின் கதைகளை கூறவே விருப்பம். எங்கள் குடும்பத்திலுள்ள உறுப்பினர்கள் சிலர் லாரி ஓட்டுநர்களாக பணிபுரிந்துள்ளனர். அவர்களது வாழ்க்கை பயணம் சார்ந்து என்றாலும் அவர்களது உலகம் குறிப்பிட்ட சிறிய இடத்திலேயேதான் சுற்றி வந்தது. எனது கதைக்கு வட இந்தியாதான் பொருத்தமாக இருந்தது. அமெரிக்காவில் கூட இந்தியர்களின் குழுதான் சரக்கு லாரி போக்குவரத்தில் முன்னணியில் இருக்கிறார்கள். இதுவும் கூட பயணம் பற்றிய கதையை உருவாக்க என்னை ஈர்த்த அம்சங்களில் ஒன்று.


உங்கள் படத்திலுள்ள கதாபாத்திரங்களின் பெயர்கள் பலவும் கவிஞர்களான காலிப், பாஷ், ஆமிர் அசிஷ் என பெயர்களைக் கொண்டுள்ளதே?


படத்தில் லாரி ஓட்டுநர் கவிஞராக முயல்பவராக இருக்கவேண்டும் என நினைத்தேன். ஆனால் அதற்கான பயிற்சியில் அது சாத்தியம் இல்லை என்று தெரிந்தது. படத்தில் பெரிதாக கவிதைக்கு இடமில்லை. ஆனால் இந்தப் பெயர்களை பயன்படுத்தியதால் இளைஞர்கள் இக்கவிஞர்களைப் பற்றி அறிந்துகொள்ள வாய்ப்புள்ளது. ஆசிஷ் பாத்திரம் பீகார் அல்லது ஜார்க்கண்ட் மாநிலத்தைச் சேர்ந்த தொழிலாளி பாத்திரம். இவர் தொழிற்சங்க தலைவராக இருப்பார். இதற்கான நடிகர் தேர்வில் முகம் பழகியது போல இருக்கவேண்டும் என நினைத்தோம். ஆனால் இந்த பெயர் கொண்ட கவிஞரின் கவிதைகள் பலருக்கு்ம தெரிந்ததாக இருக்கவில்லை.


உங்கள் படத்தில் வரும் லாரிகள் கூட வண்ணமயமாக இல்லாததன் காரணம் என்ன?


படத்தில் வரும் காலிப்பின் பாத்திரம் எதிலும் ஒட்டாமல் தனியாக வாழ்பவன். பெரும்பாலும் லாரியிலேயே வாழ்பவன். அவனுக்கு இதுபோன்ற லாரிகளை அலங்காரப்படுத்துவது எப்படி பிடித்திருக்க முடியும்? நான் இந்தி திரைப்பட உலகத்தில் மகிழ்ச்சி,் கொண்டாட்டம், அழகு போன்றவற்றை வெளிப்படுத்த விரும்பவில்லை. அவர்கள் வண்ணமயமான அழகான லாரியை படங்களில் பயன்படுத்துவார்கள்.




நீங்கள் உங்கள் படத்தில் முதலாளித்துவத்தை கேள்வி கேட்கிறீர்களா? கிராமத்திலிருந்து நகருக்கு இடம்பெயரும் தொழிலாளர்கள் பற்றி படம் பேசுகிறது.


போக்குவரத்து பொருளாதாரத்தின் முதுகெலும்பே லாரி ஓட்டுநர்கள்தான். இவர்கள்தான் அந்த வணிகத்தை செய்ய உதவுகிறார்கள். ஆனால் அவர்களே இந்த முதலாளித்துவ அமைப்பில் பாதிக்கப்படுகிறார்கள். இந்த உண்மையை அவர்கள் மிக தாமதமாகவே தெரிந்துகொள்கிறார்கள். படத்தில் காலிப் பாத்திரம், போர்ட்டர்களின் வேலைநிறுத்தம் காரணமாக வேலை இழக்கிறான். பின்னர் வேலை செய்யாத லிப்டை சரி பார்க்கும் பணியாளாகிறான். அடுத்து எரிவாயு உருளைகளை விநியோகம் செய்கிறான். இங்கு ஒருங்கே அநீதியும், பதற்றமும் ஏற்படுகிறது. நான் இப்படி பார்த்த விஷயங்களை அனுபவங்களை பார்வையாளர்களிடம் காட்ட நினைத்தேன்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்


ஏக்தா மாலிக்.



 

 

 

கருத்துகள்