பிறர் என்ன சொல்வார்களோ என்று எனது தலித் அடையாளத்தை மறைத்து வைத்தேன்! - நீரஜ் கெய்வான்

 

 

 

 

 

 

 https://cdn.dnaindia.com/sites/default/files/styles/full/public/2016/05/04/456821-neeraj-ghaywan-gettyimages.jpg

நீரஜ் கெய்வான்

இந்தி திரைப்பட இயக்குநர்


கீலி புச்சி எனும் கதை உங்களுடைய தேசிய விருது வென்ற படமாக மாசானில் இடம்பெற்றதுதான். அதனை சிறிய படமாக எப்படி உருவாக்கத் தோன்றியது?


வருண் குரோவரோடு கதையை எழுதும்போது, மேற்சொன்ன கதை மாசான் படத்திற்கு அதிக கனம் கொண்டதாக தோன்றியது. தர்மேட்டிக் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு இந்த கதையை உருவாக்கினோம். இதில் நாயகர்கள், எதிர்மறை நாயகர்கள் என யாரும் கிடையாது. ஒருவரின் குணநலன்களேதான இதில் எதிர்மறையாக பலவீனமாக மாறும். சிறுபான்மை சமூகம் இன்றும் தங்களது வேலை, வாழ்க்கைக்காக போராடி வருகிறது. இதனை நாம் சற்று தனிமைப்படுத்தி பார்க்கவேண்டும்.


சாதி வேறுபாடுகளை எப்படி வேறுபடுத்தி காட்டினீர்கள்?


இந்த விவகாரம் பற்றி நமக்கு முழுமையாக தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும். நான் பெண்களைப்பற்றி பேசினாலும் கூட ஆண்களால் அவர்களின் மாதவிடாய் வலியை உணர முடியாது என்பதே உண்மை. இதைப்போலத்தான் குழந்தைப் பிறப்பும், பணியிடம் சார்ந்த தீண்டாமையும் கூட. இந்த ஐடியாவை நாங்கள் சிறுபான்மை சமூகத்துடன் இணைத்து எழுதினோம். மெனோபாஸ் விஷயங்களை பெண்கள் பாம்பே பேகம் பார்த்து எப்படி புரிந்துகொள்வார்கள் என்று எனக்கு தெரியவில்லை. ஆனால் இதுபோன்ற பார்வை பெண்களிடமிருந்துதான் வரும்

https://images.mid-day.com/images/images/2021/apr/Ajeeb-nineteen-april-a_d.jpg



கார்ப்பரேட் வேலையிலிருந்து சினிமா துறைக்கு வந்தது எப்படி?


நான் அப்போது டெல்லியில் வேலை செய்துகொண்டிருந்தேன். அப்போது இயக்குநர் அனுராக் மும்பையிலிருந்து அழைத்தார். பேஷன்பார்சினிமா.காம் என்ற வலைத்தளத்தை சுயாதீன இயக்குநர்கள் நடத்தி வந்தனர். இந்தக்குழுவில் விஷால் பரத்வாஜூம் உண்டு. இதில் நானும் கூட சில படங்களுக்கு விமர்சனங்களை எழுதியுள்ளேன்.


அதிக சம்பளம் வரும் வேலையை விட்டுவிட்டு மும்பைக்கு வர நினைத்தேன். ஆனால் இதுபற்றி வீட்டில் நான் ஏதும் கூறவில்லை. மும்பைக்கு வந்தும் கூட மார்க்கெட்டிங் தொடர்பான வேலையை செய்துகொண்டிருந்தேன். ஆனால் அது சரியானதுதானா என்று எனக்கு தெரியவில்லை. எனவே ஒருநாள் அனுராக்கை அழைத்து இதுபற்றி கூறினேன். அவர் அந்த வேலையைவிட்டு திரைப்படத்தை உருவாக்கும் பணியை செய்யச்சொன்னார். அப்போதே நான் எனது வேலையை கைவிட்டுவிட முடிவுசெய்தேன். அப்போது எனது முடிவை அப்பாவிடம் கூறினேன். அவர் எனக்கு திருமணம் செய்ய பெண் பார்த்திருந்தார். எனது முடிவைக் கேட்டு கோபமானவர், அடுத்து ஆறுமாதங்களுக்கு என்னுடன் பேசவே இல்லை.


உங்கள் படத்தை இயக்குவதற்கு முன்னர் காஷ்யப்புடன் பணிபுரிந்தீர்கள் அல்லவா?


எனக்கு முதலில் அவர் உடான் படத்தை திரையிட்டு காட்டினார். அப்போதே நான் வேலையை விட்டது தவறு இல்லை என்று தோன்றியது. பின்னர் அவரின் கேங் ஆப் வாசிப்பூர் படத்தின் இரு பாகங்களிலும் பணிபுரிந்தேன். நான் மார்க்கெட்டிங் பிரிவுகளிலுள்ள அனைத்து அம்சங்களிலும் வேலைபார்த்துவிட்டேன். சோர் என்ற குறும்படத்தை எடுத்தேன். பிறகு எபிபேனி என்ற குறும்படத்தை எடுத்தேன். இதனைப் பார்த்த அனுராக் உங்களுக்கு அசலான குரல் உள்ளது என்றார். பிறகுதான் மாசான் படத்திற்கான ஐடியா உருவானது. வருண் குரோவருக்கு வாரணாசி பற்றி நிறைய விஷயங்கள் தெரியும என்பதால் அவரும் படத்திற்குள் வந்தார்.

https://s4.scoopwhoop.com/anj/ghaywan/491340840.jpg

உங்களது சாதி பற்றிய அடையாளம் தெரிந்ததால்தான், படத்தின் கதைகளில் அதனை கொண்டு வர முடிந்ததா?


நான் தலித் என்பதை பள்ளி, கல்லூரி என செல்லுமிடங்களில் எல்லாம் மறைத்துத்தான் வந்திருக்கிறேன். அதனை வெளிப்படுத்தினால் என்னை சுற்றியுள்ளவர்கள் எப்படி நடந்துகொள்வார்களோ என்ற பயம் எனக்கு இருந்தது. வாரணாசியில் மாசான் படம் எடுக்கும்போதும் கூட எனது அடையாளத்தை வெளிப்படுத்தினால் உதவிகள் எளிதாக கிடைத்திருக்கலாம். பார்ப்பனர்கள் அதனை எப்படி எடுத்துக்கொள்வார்கள் என்ற பயம் இருந்தது. இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் எழுத்தாளர் வருண் குரோவரிடம் எனது அடையாளத்தை வெளிப்படுத்தினேன். அவரோடு சேர்ந்த எனது நண்பர்கள் கொடுத்த நம்பிக்கையால் அடையாளம் பற்றிய பயத்தை கடந்துவந்தேன்.


சமூகவலைத்தளத்தை எப்படி பார்க்கிறீர்கள்?


நான் அதனை தொடக்கத்தில் அதிகம் பயன்படுத்தினேன். நான் இரண்டாவது படத்தை உருவாக்க முயன்றபோது, அதில் உள்ள அசிங்கமான பல்வேறு விஷயங்கள் தெரிய வந்தது. எனவே, நான் அதனை கவனித்து வந்தால் போதும் என்று தோன்றியது. எனவே குறிப்பிட்ட விஷயம் பற்றி பேசவேண்டுமெனில் மட்டுமே அதனை பயன்படுத்துகிறேன். நான் சமூக வலைத்தளங்களில் எழுதி வெளியிடுவதற்காக நிறைய எழுதியுள்ளேன். ஆனால் அவற்றை இதுவரை வெளியிடுவதில்லை. அதற்கான காலம் வரும்போது அவற்றை வெளியிடுவேன் என்று நினைக்கிறேன்.


உங்களது படங்கள் அரசியல் சமூக கருத்துகள் வெளியிடப்படுவதாக நினைக்கிறேன். இந்த நிலை எதிர்காலத்திலும் தொடருமா?


மக்கள் தங்களை அரசியல் நிலைப்பாடு கொண்டவராக, அப்படி இல்லாதவராக காட்டிக்கொள்ளலாம். நான் தேர்தல் அரசியலை வைத்து படம் எடுக்கவில்லை. மக்கள் ஒடுக்கப்பட்ட அல்லது சிறுபான்மை சமூகம் சார்ந்தவர்களாக நெருக்கடிக்கு உட்படுத்தப்படலாம். இங்கு அனைத்துமே தொடர்புகளைக் கொண்டுள்ளது. மக்கள் இங்கு தனிமைப்படுத்தலிருந்து தப்பி பிழைத்து உயிர்வாழ்வது கடினம். நான் இங்கு அனைத்து புள்ளிகளும் ஒரு கோட்டில் இணைவதைக் குறிப்பிடுகிறேன்.


இந்தியன் எக்ஸ்பிரஸ்


அலகா சகானி



கருத்துகள்