சமூகத்திலிருந்து ஒருவர் தனிமைப்படுவதற்கான காரணம்!
பல்வேறு விழாக்கள், கலந்துரையாடல், நிகழ்ச்சிகள் என்று செல்லும்போது வயிற்றுக்குள் வெடிகுண்டு வெடிக்கிறதா? தலை கிறுகிறுவென வருகிறதா அத்தனைக்கும் அடிப்படைக் காரணம் சமூக பற்றிய பதற்றம்தான். இது அனைவருக்கும் என்று கூற முடியாது. சிலருக்கு இதுபோல பதற்றம் இருக்கும்.
மது அருந்துபவர்கள், வேலையில் மன அழுத்தம் உள்ளவர்கள் ஆகியோருக்கு சமூக நிகழ்வுகளில் பங்கேற்பது கடினமாகவே இருக்கும். இவர்கள் பெரும்பாலான கூட்ட நிகழ்வுகளை தவிர்த்து விடுவார்கள். பொதுவாக வேட்டையாடி பிழைக்கும் காலத்தில் மனிதர்கள் ஒன்றாக குழுவாக வாழ்ந்தார்கள். அவர்கள் யாருக்கு யார் என்பது சமூக அந்தஸ்து அடிப்படையில் தெளிவாக தெரியும். ஆனால் இன்று குழப்பாக சூழல் நிலவுகிறது. மக்கள் தனியாக வசிக்கிறார்கள். வாழ்கிறார்கள். எனவே அவர்களை ஒன்றாக இணைக்கும்போது பிறரைப் பற்றிய பயம் ஏற்படுகிறது.
பதற்றத்தைக் குறைக்க பெரிய விழாக்களில் பிறரை வரவேற்பது, நண்பர்களுடன் பேசுவது என நிதானமாக இருந்தாலே போதும். அதில் அணியும் ஆடையைக் கூட ஒத்திகை பார்த்து கொள்ளலாம். தன்னைப்பற்றிய கவனம், பதற்றம் இல்லாமல் இருக்க விழாவில் நடந்துகொள்ளும் முறையை கூட மனதில் உருவாக்கிப் பார்த்துக்கொள்ளலாம். பெற்றோரால் அதிகம் கட்டுப்படுத்தப்படக் கூடியவர்கள், பள்ளிகளில் கேலி, கிண்டல் செய்யப்படுபவர்களுக்கு மனப்பதற்றம் ஏற்படுவதால் பிற்காலத்தில் அவர்களால் சமூகத்தில் இணைய முடியாமல் போகிறது.
பிபிசி
சாரா நிவென்
கருத்துகள்
கருத்துரையிடுக