பொய் சொல்லி இளம்பெண்ணின் வீட்டுக்குள் நுழையும் பொறியாளன், எதிரியை அன்பால் வெல்லும் கதை! - பர்சனல் டேஸ்ட் 2010

 

 

 

http://www.kdramalove.com/myfavoriteshot.JPG

 

பர்சனல் டேஸ்ட் 

கொரிய தொடர்

தொடரை இலவசமாக யூட்யூபில் பார்க்கலாம். 

எழுத்து  கிம் ஹி ஜூ

இயக்கம் சன் ஹியூங் சுக், நோ ஜாங் சான் 


http://www.kdramalove.com/personaltastepose.jpg

கொரிய சூப்பர் ஸ்டார் லீ மின் ஹோ நடித்திருக்கிறார். தொடரில் முக்கியமான கதை,  லின் ஹோவின் எம் கட்டுமான நிறுவனத்திற்கும், மிராயே நிறுவனத்திற்கும் நடக்கும் தொழில்போட்டிதான் . லீ மின்ஹோவின் தந்தை மிராயேவில் வேலை செய்தாலும் கூட அவருக்கு அதற்கான அங்கீகாரம் கிடைக்கவில்லை. இதனால் அவர்கள் தங்கியிருந்த வீடு கூட துரோகம் செய்த நண்பரால் கைப்பற்றப்படுகிறது. அப்படி துரோகம் செய்தவர்தான் மிராயே கட்டுமான உரிமையாளர். அவரை பழிவாங்கவேண்டும் என துடிப்பாக இயங்கும் லின் ஹோவுக்கு சரியான வாய்ப்பாக டேம் ஆர்ட் கேலரி திட்டம் வருகிறது. அதில்  போட்டியிடுகிறார். 

அந்த நிறுவனத்தினர் சாஞ்ஜோ எனும் கட்டுமான அமைப்பின் படி கட்ட வேண்டுமென எதிர்பார்க்கிறார்கள் என்ற ரகசிய செய்தி லின் ஹோவிற்கு கிடைக்கிறது. அந்த அமைப்பைத் தெரிந்துகொள்ள வேண்டுமானால் பேராசிரியர் பார்க் என்ற கட்டுமானக் கலைஞரின் வீட்டுக்கு சென்று ப்ளூபிரிண்டுகளை பார்க்க வேண்டும். ஆனால் அவர் இங்கிலாந்தில் இருக்கிறார். கொரியாவில் அவரது பாசம் கிடைக்காமல் ஒதுக்கப்பட்ட மகள் பார்க் கே இன் மட்டுமே தங்கியிருக்கிறாள். இதனால் ப்ளூபிரிண்டுகளைப் பெற பார்க் கே இன்னின் வீட்டுக்கு செல்கிறான். அந்த சமயத்தில் நாற்காலிகளை வடிவமைக்கும் திறன் கொண்டவளான அவள், கடனில் சிக்கியிருக்கிறாள். எனவே அறை ஒன்றை வாடகைக்கு அவனுக்கு தருகிறாள். கூடவே வேலை செய்த நண்பன் அவளை ஏமாற்றி வீட்டின் பெயரில் கடன் வாங்கி வைத்துவிட்டு ஓடிவிடுகிறான். வீடு ஜப்தியாக நோட்டிசும் கூட ஒட்டப்படுகிறது. இதனை சமாளிக்க பணம் வேண்டுமென்றால் ஜின் ஹோவை வாடகைக்கு வீட்டில் தங்க வைக்கிறாள். அதேநேரம் அவளை காதலிப்பதாக செக்ஸ் சமாச்சாரத்திற்கு பயன்படுத்த நினைத்த சாங் ரியால் என்பவன், அவளை அவமானப்படுத்தி உன்னுடம் பிரேக் அப் என்று சொல்லிவிடுகிறான். அதேநேரம் பார்க் கே இன்னின் நெருங்கிய தோழி,  அவளுக்கே துரோகம் செய்து சாங் ரியாலை திருமணம் செய்துகொள்ள திட்டமிடுகிறாள்.சாங் ரியாலை உண்மையாக காதலித்த பெண் என்பதால் கே இன்னுக்கு அவனை மறக்க கடினமாக இருக்கிறது. அதோடு கடனும் தோளில் சுமையாகிறது. 

 

இந்த நேரத்தில் லின் ஹோ அவளைத் தேற்றுகிறான். அவளது பிரச்னைகளை தீர்க்க தன்னால் முடிந்த விஷயங்களை செய்கிறான். இதனால் மெல்ல கே இன்னுக்கு அவன் மேல் ஈர்ப்பு உருவாகிறது. ஆனால் எதிர்பாராதவிதமாக அவனது அலுவலக மேனேஜரின் உட்டாலக்கடி பேச்சால் அவனை ஓரினச் சேர்க்கையாளன்  என கே இன் புரிந்துகொள்கிறாள். அவளுக்கு சோகமாக நேரத்தில் யங் சியோன் என்ற தோழியும், லின் ஹோவும் துணையாக இருக்கின்றனர். சாங் ரியோல் , துரோக தோழி கிம் இன் ஹீ திருமணம் நடக்கிறது. அங்கு செல்வதற்கான இன்விடேஷன் கே  இன்னுக்கு கிடைக்க கோபத்தில் உச்சமாகிறாள். உடனே தன்னை கைவிட்டு யாரை அப்படி அவன் மணக்கிறான் என பார்க்க கே இன் கல்யாண மண்டபத்திற்கு சென்று கலாட்டா செய்ய கல்யாணம் நின்றுபோகிறது. இந்த நிகழ்ச்சியின்போதுதான்  கே இன்னை முதல்முறையாக லின் ஹோ, டேம் ஆர்ட் கேலரி தலைவர் சோய் ஆகியோர் பார்க்கின்றனர். 

சாங் ரியோல், லின் ஹோ, பார்க் கே இன், கிம் இன் ஹீ ஆகியோரின் வாழ்க்கை எப்படி மாறுகிறது? லின் ஹோ பார்க் கே இன்னை காதலிக்க தொடங்கினானா, பழிவாங்கும் திட்டத்தை செயல்படுத்தினானா  என்பதுதான் மீதிக்கதை. 

தொடரின் இறுதிப்பகுதி அற்புதமாக எடுக்கப்பட்டிருக்கிறது. எதிர்மறையான மனிதர்கள் என்றாலும் கூட அவர்களை திறமை மூலம் வெல்லுவதை காட்டியிருக்கிறார்கள். அனைவரையும் அரவணைத்து செல்லும் பாத்திரமாக லின் ஹோ பாத்திரத்தில்  லீ மின் ஹோ பிரமாதப்படுத்தியிருக்கிறார். பார்க் கே இன்னுக்கு மாதவிடாய் வர, அவளுக்கு சானிடரி நாப்கின் வாங்குவது, சூப் வைத்துக்கொடுப்பது, வலி நிவாரணியை வீடு போய் வந்து  கொடுப்பது என அசத்தலாக நடித்திருக்கிறார். தன்பாலின ஈர்ப்பாளர்களை கிண்டல் செய்வது போல காட்சி வைக்கப்பட்டிருந்தாலும், சோய் பாத்திரம் மூலம் கண்ணியமான மனிதராக நடந்துகொள்ள முடியும், வாழ்க்கையிலும் உயரமுடியும் என்பதை காட்டிவிட்டார்க்கள்.  லின் ஹோ வின் பாத்திரம் சுயநலம் கொண்டது என்றாலும் கூட உணர்ச்சிகளை வைத்து விளையாடுவதில்லை. சோயிடம் அவர் சங்கடப்படுகிறார் என்பதற்காக தன்னைப் பற்றிய பொய்யை உண்மையாக சொன்னாலும் இறுதியில் தனது தவறை நேர்மையாக ஒப்புக்கொண்டு விடுகிறார்.  சாஞ்ஜோவில் வாழ்ந்தாலும் கூட வீட்டை தான் பார்த்த வித த்தில் வரைகிறார். ஒருகட்டத்தில் கே இன்னின் மேல் காதல் கொண்ட பிறகு, அந்த வீட்டின் ப்ளூ பிரிண்டை தேடுவதை கைவிடுகிறார். வேறு ஏதாவது முயற்சிக்கலாம் என நினைக்கிறார். இதற்குள் கே இன்னின் ஆளுமையை மாற்ற முயல்கிறார். அவரின் அண்மையால் கே இன்னும் நிறைய மாற்றங்களை தனக்குள் ஏற்கிறாள். கூடவே அவன் மீதான அன்பும் வளர்கிறது.  ஆனால் அதற்குள் அவர் நினைக்க கூடாத விஷயம் நடக்க, பார்க் கே இன்னின் வாழ்க்கையிலிருந்து வெளியேறும்படி ஆகிறது. அதற்காக அவளை ஏமாற்றினேன் என்று கண்கலங்க அவளது கண்களைப் பார்த்து பேசுவது நெஞ்சுருக வைக்கிறது.  குடிபோதையில் உள்ள பார்க் கே இன்னை வீட்டுக்கு கொண்டு போய் விட்டபிறகு பேராசிரியர் பார்க்குடன் சண்டை போடும் காட்சி பிரமாதமாக எடுக்கப்பட்டிருக்கிறது. 

Personal taste- 이민호's best drama | Lee min ho, Kdrama ...

பார்க் கே இன்னாக நடித்துள்ள சன்  யே ஜின்னின் நடிப்புதான் தொடரின் ஆதாரமே. கோபம், விரக்தியுடன் அங்கீகாரமின்றி அனைவராலும் ஊதாசீனப்படுத்தப்ட்டு மெல்ல மனவலிமை பெறுகிற பாத்திரம் இது. பெற்ற அப்பாவே மகளை பார்க்காமல் தவிர்க்க, மகள் அன்பு கிடைத்துவிடாத என கிடைக்கும் இடங்களிலெல்லாம் தேடுகிறாள். எது பொய், உண்மை என்று கூட அவளுக்கு தெரியாதபடி அப்பாவியான குணம். கட்டுமானக் கலைஞரான அப்பாவின் பாராட்டு வாங்க  கே இன்னின் செய்யும் முயற்சிகளும், அவளை முழுமையாக பெண்ணாகவில்லை என காதலன் கைவிடும்போது மனமுடைந்து குடித்துவிட்டு புலம்புவதும், லின் ஹோவை தன் பாலின ஈர்ப்பாளனாக நினைத்துக்கொண்டு அவன் மேல் காதல் வருகிறதே என பதறுவதும் தொடர் முழுக்க முகம், உடல் என தாழ்வுணர்ச்சி கொண்ட பெண்ணாக பிரமாதப் படுத்தியிருக்கிறார் சன் யே ஜின்.  பிறருக்கு குற்றவுணர்ச்சியை உண்டாக்குவது போல இந்த பாத்திரத்தில் இருக்கும் வெள்ளந்தித்தனம் தொடருக்கு மெருகூட்டுகிறது. 


Personal Taste: Episode 16 (Final) » Dramabeans Korean ... 

டேம் ஆர்ட் காலரி இயக்குநர் சோய், தன்பாலின ஈர்ப்பாளராக தெரிய வருவது தொடரில் முக்கியமான திருப்புமுனை. இறுக்கமான உடல்மொழியால் தனது உணர்வுகளை வெளிக்காட்டாமல் லின் ஹோவிற்கு உதவி செய்வதும். அவர் தன்பாலினத்தவர் இல்லையென தெரிந்து காதலையும் தவிர்க்க முடியாமல் தவிப்பதும் அவரின் பாத்திரத்தை உயர்வாக நினைக்க வைக்கிறது.நான் தனியாக இருப்பதாக தோன்றினால் உன்னை அழைப்பேன் என்று லின் கோவிடம் சொல்லுவதும் அதற்கு அவர் பதில் சொல்லுவதும் அருமை. 

 

என்னை மாற்றும் காதலே....

 

கோமாளிமேடை டீம் 


















 

 

 

 

 

 

கருத்துகள்