மருத்துவத்துறை மற்றும் அறிவுசார் சொத்துரிமை என அனைத்துமே உடைந்துபோய்விட்டது! - தாஹிர் அமின்

 

 

 

 

 


 

 

 

 

தாஹிர் அமின்


அறிவுசார் சொத்துரிமை வழக்குரைஞர்


கொரோனா காலம், அறிவுசார் சொத்துரிமையில் என்ன விளைவுகளை ஏற்படுத்தியுள்ளது?


தனியார் மருத்துவதுறை மற்றும் அறிவுசார் சொத்துரிமை ஆகிய விஷயங்கள் பொதுமக்கள் நன்மைக்கு பெரியளவு பயன்படவில்லை. அந்த அமைப்பு முறை உடைந்துபோனதாக கருதப்படுகிறது.


இந்தியாவில் ஏற்பட்ட கொரோனா பாதிப்பிற்கு மருந்துகளை சரியான நேரத்தில் ஆர்டர் கொடுத்து வாங்கவில்லை என்று கூறப்படுகிறது. இந்த விவகாரத்தில் அறிவுசார் சொத்துரிமை பேசப்படவில்லை. உங்களுடைய கருத்து என்ன?


நான் இதைப்பற்றி கேள்விப்பட்டேன். தடுப்பூசிகளை வாங்குவதற்கு என்ன முறைகளை அரசு பின்பற்றுகிறது என்று எனக்குத் தெரியவில்லை. நடப்பு ஆண்டில் தயாரிக்கப்படும் தடுப்பூசிகளில் ஐம்பது சதவீதம் வளர்ந்த நாடுகளுக்கானது. நாம் உள்நாட்டிலேயே அதிகளவு மருந்துகளை தயாரித்தால் தட்டுப்பாடு ஏற்படாது. சீரம் இன்ஸ்டிடியூட் கோவாக்ஸ் திட்டம் மூலம் தடுப்பூசிகளை வழங்கி வருகிறது. இதைப்போலவே இன்னும் தடுப்பூசிகளை தயாரிக்க முன்வைத்தால் பற்றாக்குறை தீரும். இதில் அறிவுசார் சொத்துரிமையும் ஒரு அங்கம் என்று கூறலாம்.


மருந்து நிறுவனங்கள் தடுப்பூசி விவகாரத்தில் தங்களது கண்டுபிடிப்பு மக்களுக்கு வழங்காமல் ஆராய்ச்சிக்கு செலவழித்துள்ளோம். இலவசமாக கொடுத்தால் ஆராய்ச்சிக்கான செலவை ஈடுகட்ட முடியாது என ஒரே மாதிரி கூறுகிறார்களே?


கொரோனவைத் தடுக்க அமெரிக்கா, இங்கிலாந்து, ஜெர்மனி ஆகிய நாடுகளில் பெரும் மருந்து கம்பெனிகளுக்கு ஏராளமான டாலர்களை வழங்கி ஆராய்ச்சியை ஊக்குவித்து வருகின்றனர். ஆபத்து என வரும்போது அது சமூகத்திற்கு, ஆனால் லாபம் மட்டும் தனக்கு என முடிவெடுத்து பைசர், மாடர்னா ஆகிய நிறுவனங்கள் ஏராளமான டாலர்களை லாபம் பார்த்துள்ளன. இந்த நேரத்தில் அறிவுசார் சொத்துரிமையை காரணம் காட்டுகிறார்கள். தொற்றுநோய்கள், தொற்றா நோய்கள் என பலவுக்கும் அரசு பல நூறு கோடி ரூபாய்களை எப்போது ஒதுக்கி வருகிறது. ஆனால் மருத்துவத்துறை நிறுவனங்கள் இதனை ஊடகங்களில் மறைத்து பொய் பேசி வருகின்றன. அவர்கள் கூறுவதில் உண்மை இல்லை.


இந்தியா, தென் ஆப்பிரிக்கா ஆகிய நாடுகள் தங்களின் காப்புரிமையை விட்டு்க்கொடுத்துள்ளன என்பதை அமெரிக்க அதிபர் பைடன் வரவேற்றுள்ளார். இதனால் என்ன மாற்றங்கள் நடைபெறும்.


காப்புரிமை பிரச்னைகள் இல்லையென்றால் இந்தியாவில் தடுப்பூசிகளை தயாரிக்கமுடியும். அறிவுசார் சொத்துரிமையில் உலக வர்த்தக கழகத்தின் அனுமதியும் தேவை. ஒருவகையில் தேவையான வேலைகள் தொடங்கியுள்ளன என்று கூட கூறலாம்.




டைம்ஸ் ஆப் இந்தியா


நீலம் ராஜ்




கருத்துகள்