பழக்க வழக்கங்களை நல்லது, கெட்டது என பிரிப்பது எப்படி?
பழக்க வழக்கங்களில் நல்லது எது கெட்டது எது?
பழக்கவழங்கங்களை ஆராய்வது என்பது உயிரியலில் முக்கியமானது. ஒரு பழக்கத்தை ஒருவர் கற்றுக்கொள்ள முக்கியமானது, அதற்கு கிடைக்கும் பரிசுதான். இந்த பரிசு கிடைப்பது உறுதியானால் மூளை அதற்கு பழகி விடும். எனவே, பரிசு பற்றி யோசிக்கும் நேரம் அதற்கு மிச்சமாகும். காலையில் உடற்பயிற்சி செய்துவிட்டு அதற்காக உங்களுக்கு நீங்களே ஒரு பரிசு அளித்துக்கொள்கிறீர்கள் என்றால், அதற்கேற்ப மூளை அந்த பழக்கத்தை தொடர்ச்சியாக செய்யச் சொல்லும்.
காய்கறிகளை உணவில் சேர்த்து சாப்பிடுவது என்பது அனைவருக்கும் பிடித்தமானது கிடையாது. இந்த செயல்பா்டை சுவாரசியமாக்குவதற்கு அவசியமில்லை. சிறுவயதில் இதனை சாப்பிடக் கொடுத்துவிட்டால் எப்படி சாப்பிடுவீர்களோ பிடித்திருந்தால் சாப்பிடு, இல்லையெனில் கடித்து விழுங்க வேண்டியதுதான். சமூக வலைத்தளங்களை எப்போதும் சோதிக்கும் விஷயம், மோசமான பழக்கவழக்கங்களில் சேரும். நண்பர்களுடன் பிரைடு சிக்கனை பக்கெட்டாக வாங்கி, நீங்கள் மட்டுமே அதிக பீஸ்களை லபக்குவது எல்லாம் மோசமான பழக்கத்தில் சேர்த்திதான். இதனை தொடங்கிவிட்டால் இயல்பாகவே இந்த பழக்கம் அப்படியே தொடரும்.
மூளையில் இரண்டு முரண்பாடுகளைக் கொண்ட அமைப்புகள் உள்ளன. ஒன்று, சிஸ்டம் ஒன், இரண்டு, சிஸ்டம் டூ என்பது என பொருளாதார அறிஞர் டேனியல் கானெமன் கூறுகிறார்.
சிஸ்டம் ஒன் என்ற அமைப்பானது, உணர்ச்சிகளால் வழிநடத்தப்படுகிறது. பார்க்கும் காட்சிகள் ஒருவரை எப்படி செய்ய வலியுறுத்துகிறதோ அதனை அப்படியே செய்வது இதன் அடிப்படை. இதில் மூளைக்கு அதிக வேலை இல்லை. எதனால் அப்படி? யோசிப்பதற்கு ஏதுமில்லை. குழாயில் நீர் கொட்டினால் உடனே அதைப் பார்த்தவுடன் மூடுகிறோம் அல்லவா? அதனை அப்படியே விடுவதற்கு வேறு வாய்ப்புகள் காரணங்கள் இல்லை. ஒரே நேரத்தில் நிறைய விஷயங்களை இதில் செய்ய முடியும்.
அடுத்து கொஞ்சம் மெதுவாக செய்யும் விஷயங்கள். இதைப் பொறுத்தவரை லாஜிக்காக நடக்கும் விஷயங்கள் என யோசித்து செய்வது என புரிந்துகொள்ளலாம். இதனை அந்த சமயத்தில் ஒருவர் ஒன்றை மட்டுமே செய்ய முடியும். அதற்காகவே ஒருவரின் முழுக் கவனமும் தேவைப்படும். பெரும்பாலும் நாம் செய்யும் பழக்கங்கள் 40 முதல் 95 சதவீதம் மூளையில் யோசிக்காமல் பழக்கத்தின் காரணமாக அப்படியே தானியங்கி முறையில் செய்வதுதான்.
கம்ப்யூட்டர் கேம்களை தயாரித்து விற்பவர்கள் மனதின் உளவியலைப் புரிந்துகொண்டுவிட்டார்கள். இதனால்தான் விளையாட்டை மூன்று பாகமாக வடிவமைக்கிறார்கள். ட்ரிக்கர் , ரிவார்ட், ரிப்பீட் என்பதுதான் அந்த மூன்று விஷயங்கள். விளையாட்டில் வரும் அரக்கனை அரும்பாடுபட்டு, மூக்கில் ரத்தம் வந்தவுடன் கோபம் வந்து அடித்து வீழ்த்தினால் உங்களுக்கு பரிசு கிடைக்கும். இப்படி அதனை திரும்பி செய்தால் பரிசுகள் கிடைத்துக்கொண்டே இருக்கும். இப்படி ஒரு விளையாட்டு இருந்தால் அதனை விளையாடாமல் இருப்பீர்களா?
2012இல் கேண்டி கிரஷ் என்ற விளையாட்டு அறிமுகமாகி இன்று மாதம்தோறும் 270 மில்லியன் மக்களால் லாகின் செய்து விளையாடப்பட்டு வருகிறது. மக்களில் பலர் காசு கட்டி தேவையான விஷயங்களை வாங்கி விளையாட்டில் பங்கேற்று களிக்கிறார்கள். 2018இல் மட்டும் இப்படி நிறுவனத்திற்கு கிடைத்த தொகை 909 மில்லியன் டாலர்கள். இந்த விளையாட்டில் மொத்தம் 5 ஆயிரம் நிலைகள் உள்ளன. இதில் கிடைக்கும் பரிசுகள் அப்படிய கிடைத்துக்கொண்டே இருக்காது. இரண்டு மாதங்களுக்குப் பிறகு பரிசுகள் குறையும் அல்லது நிறுத்தப்படும். கேண்டி கிரஷ் விளையாட்டு இலவசமாக விளையாட வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது.
பிபிசி
கருத்துகள்
கருத்துரையிடுக