மொழியைக் கற்க, டைப் அடிப்பதை வேகமாக்க, கலரிஸ்டாக பயிற்சிபெற உதவும் புதிய ஆப்ஸ்கள்!

 

 

 

 

 https://1z1euk35x7oy36s8we4dr6lo-wpengine.netdna-ssl.com/wp-content/uploads/2020/10/Screen-Shot-2020-10-27-at-16.39.22.jpg

 

 

புதிய ஆப்ஸ்கள்


புதிய ஆப்ஸ்கள்தான். ஆனால் அத்தனையும் பயன்படும் என்று சொல்லமுடியாது. சுமாரானவை மிகச்சுமாரானவை என்று கூட எடுத்து எழுதிவிடுகிறார்கள். எனவே படித்து நீங்களே தெரிந்துகொள்ளுங்கள்.


ரீகலர் தி ரீப்


ஆப்போ நிறுவனம் நிதியளித்து உருவாக்கி ஆப். பயன் என்று பெரிதாக ஒன்றுமில்லை. இதனை டவுன்லோடு செய்து போனில் வைத்துக்கொண்டு பவளப்பாறைகளைப் பார்க்கலாம். இதனை அதிகளவு டவுன்லோடு செய்தால், கிடைக்கும் நிதி பவளப்பாறைகளை காப்பாற்ற பயன்படுத்தப்படுமாம். இதற்காக எத்தனைபேர் இதனை டவுன்லோடு செய்வார்கள் என்று தெரியவில்லை.


ராக் ஐடென்டிபையர்


நாம் வாழும் இடத்தில் பல்வேறு தன்மையிலான கற்கள் கிடைக்கும். ஆனால் அதன் வகைகளைப் பற்றி நாம் பெரிதாக அறிந்திருக்க மாட்டோம். ஆனால் அப்படி அறிந்துகொண்டால் நன்றாக இருக்கும்தானே? அதற்குத்தான் இ்ந்த ராக் ஐடென்டிபைர் உதவுகிறது. பெரும்பாலான பாறைகளின் பெயர்களையும், அதன் சிறப்புகளையும் கூறுகிறது. சிலசமயங்களில் புகைப்படங்களை தவறாகவும் அடையாளம் காட்டுகிறது. கற்கள் பற்றி அறிந்துகொள்ள விரும்புபவர்களுக்கான ஆப் இது.


பிட்வார்டன்


பாஸ்வேர்டுகளை இன்று ஒருவர் மறந்துவிட்டால் அவரது வாழ்க்கையே கையைவிட்டு போய்விடும். தனிப்பட்ட கணினி முதல் அலுவலக கணினி, வங்கிக்கணக்கில் பணம் எடுப்பது, அரசு வலைத்தளங்கள் என அனைத்திலும் பாஸ்வேர்டுகள் உள்ளன. இவற்றை 

 

நினைவில் கொள்வது ்கடினம். இதனால்தான் பெரும்பாலானவர்கள் ஒன் டூ த்ரீ என எளிமையாக பாஸ்வேர்டுகளை செட் செய்து மாட்டிக்கொள்கின்றனர். இவற்றை சேமித்து பாதுகாப்பாக பயன்படுத்த பிட்வார்டன் உதவுகிறது. இந்த ஆப் இலவசம் என்றாலும் இதனை காசு கொடுத்து வாங்கி பயன்படுத்தினால் நிறைய ஆப்சன்களை சுதந்திரமாக பயன்படுத்த முடியும்.






லேக் கலரிங் புக்ஸ்


சிறுவயதில் பல சித்திரங்களுக்கு வண்ணம் தீட்டி அடுத்த பக்கம் வரை கலர் வந்திருக்கும். இதுபோல காமெடிகளை இனிமேல் காகிதத்தில் செய்யவேண்டியதில்லை. அனைத்தும் டிஜிட்டலில் வந்துவிட்டது. எனவே, நீங்கள் இதில் ஏராளமான நிறங்களை பயன்படுத்தி படங்களை பந்தாவாக காட்டலாம். இதில் உங்களுக்கு திறமை இருந்தால் படங்களை வரைந்து பல்வேறு ஷேடுகளை கொடுக்க முடியும். காசுக்கு விற்கும் தரத்திலும் தயாரிக்க முடியும் என்றாலும் இதற்கு உங்களின் திறன் தேவை. படங்களுக்கு தேவையான வண்ணங்களைத் தேர்ந்தெடுக்க நினைப்பவர்களுக்கு வல்லுநர்களுக்கும் உதவும் கருவி இது.


டைப்வைஸ் கஸ்டம் கீபோர்டு


போன், டேப்லட்டில் கூட வேலைபார்ப்பவர்களுக்கு இந்த கீபோர்டு உதவும். இதில் கொடுக்கப்படும் விளையாட்டை விளையாடினால் கீபோர்டைப் பற்றி முழுமையாக தெரிந்துகொள்ள முடியும். இதில் பயிற்சி செய்தால் வேகமாக டைப் செய்துவிடலாம் என சத்தியம் செய்கிறார்கள். சாத்தியமாக என்பதை டவுன்லோடு செய்து பயன்படுத்திவிட்டு சொல்லுங்கள்.


டிராப்ஸ் லாங்குவேஜ் லேர்னிங் ஆப்


இந்தியோ, மலையாளமோ, தமிழோ, தெலுங்கோ மொழி என்று தெரிந்தால் நல்லதுதானே? இந்த ஆப்பில் தென்னிந்திய மொழிகள் கிடையாது. ஆனால் பிற நாட்டு மொழிகள் உள்ளது. ஆங்கிலத்திற்கும் குறிப்பிட்ட மொழிக்கும் பொதுவான நிறைய சொற்களை கற்கலாம். முழுமையாக இதனை வைத்து சமாளிக்க முடியாது. ஆனால் தொடக்க நிலைக்கு இது நன்றாகவே இருக்கிறது.


டெக் லைப் ஆஸ்திரேலியா



கருத்துகள்

பிரபலமான இடுகைகள்