தொடக்கப்பள்ளி மாணவர்களுக்காக தன்னை அர்ப்பணித்த ஆசிரியை! - தேசியளவில் சிறந்த ஆசிரியர் - ஜூலியானா உட்ருபே

 

 

 

 

 

 


 

மாற்றம் தரும் ஆசிரியர்


கடந்த இரு ஆண்டுகளாக கல்வி என்பது மாணவர்களுக்கு வகுப்பறையில் கற்றுத்தரும் வழக்கம் குறைந்துவிட்டது. அதற்கான காலம் கூடிவரவில்லை. நோய்த்தொற்று பாதிப்பால் கல்வித்தளம் என்பது முழுக்க இணையம் சார்ந்ததாக மாறிவிட்டது. இந்த சூழ்நிலையில் ஆசிரியர்கள் இதைப்பற்றி என்ன பேசுவார்கள் என்பது முக்கியம்தானே? நடப்பு ஆண்டிற்கான தேசிய ஆசிரியர் பரிசை ஜூலியானா உட்ருபே பெற்றுள்ளார். இனிக் கல்விமுறையில் தனித்தனி மாணவர்களுக்கான திறனைப் பொறுத்தே அவர்களுக்கு கல்வி கற்பிப்பது சிறந்தது. கல்விமுறையையும் வேறுபட்டு சிந்திக்கும், செயல்படும் மாணவர்களுக்கானதாகவே மாறும் என்றார் உட்ருபே. இவரை கவுன்சில் ஆப் சீப் ஸ்டேட் ஸ்கூல் ஆபீசர்ஸ்அமைப்பு சிறந்த ஆசிரியராக தேர்ந்தெடுத்துள்ளது.


உட்ருபே போன்ற அர்ப்பணிப்பான ஆசிரியர்கள், புதுமைத்திறன் ஆகியவை இனக்குழு சார்ந்த மக்களின் கல்வி முன்னேற்றத்திற்கு உதவுவார்கள் என்றார் கவுன்சிலின் இயக்குநரான காரிசா மொஃபாட் மில்லர். 2005ஆம் ஆண்டு தொடங்கி இன்றுவரை சிறந்த ஆசிரியர் விருது பெற்றவர்களில் உட்ருபே மட்டும்தான் லத்தீன் பகுதியைச் சேர்ந்தவர் என்று கூறப்பட்டுள்ளது. தொடக்கப்பள்ளி ஆசிரியராக கடந்த 11 ஆண்டுகளாக பணியாற்றிவருகிறார். குழந்தைகள் கல்வி கற்கத் தொடங்கும் பருவத்தில் அவர்களின் குணம், பழக்கவழக்கங்கள் ஆகியவற்றை இவர் கண்காணித்து கற்றும் பெற்றும் வந்திருக்கிறார்.


சிந்திப்பதும் செயல்படுவதும் மாறுபட்ட குழந்தைகளுக்குஅதற்கான கல்வியை வழங்க முடிவெடுத்தேன். இதனை படிப்படியாக செய்தேன் என்று கூறும் உட்ருபே, கொலம்பியாவிலிருந்து அமெரிக்காவிற்கு வந்து குடியேறியவர். குழந்தைகளுக்கு கல்வி கற்பிப்பதில் பள்ளியை விட வீடு முக்கியத்துவமானது என்கிறார். இவர் பள்ளியில் வகுப்பறையைவிட்டு மாணவர்களை வெளியே கொண்டுவந்து பாடங்களை நடத்தினார். தோட்டத்தில் நடத்தப்பட்ட வகுப்பறை ஜினோமிஸ் என்று பெயர் சூட்டப்பட்டது. இதில் மாணவர்களே வளர்த்த செடிகளும் உண்டு. அதனை பிறருக்கு விற்பதையும் குழந்தைகள் செய்தனர். குழந்தைகள் வகுப்பறைக்கு வெளியே உள்ள உலகை தெரிந்துகொள்ள இது நல்ல வாய்ப்பு என்று நினைத்தேன் என்றார் உட்ருபே.


இந்தியன் எக்ஸ்பிரஸ்



கருத்துகள்