நம் வாழ்வில் பெரும் மாற்றங்களை ஏற்படுத்தும் பழக்கங்கள் என்னென்ன?

 

 

 

https://andreabeaman.com/wp-content/uploads/2014/06/Hungry-woman-with-bread.jpg

 

 

 

 

சிறிய பழக்கம் பெரிய மாற்றங்கள்


தாகசாந்தி செய்யுங்கள்!


அலுவலகங்களில் வேலை செய்யும்போது ஏசி ஓடிக்கொண்டே இருப்பதால் பெரும்பாலானோர்க்கு நீர் தேவை இருக்கிறதா இல்லையா என்றே தெரியாது. தண்ணீரை அதிகம் குடிக்காவிட்டால் உடலில் இயக்கம் குளறுபடியாகிவிடும். எலும்புகளின் இணைப்பிற்கு உயவு எண்ணெய் போல நீர் பயன்படுகிறது. உடலின் வெப்பநிலையை கட்டுப்பாடு செய்வதற்கும், செரிமானத்திற்கு்ம் உதவுகிறது. அடிக்கடி கடி நீர் குடிப்பதை மறந்தால் உடல், மனம் என இணைத்தும் ஒத்திசைவாக இயங்காது. நீண்டகால நோக்கிலும் உடலுக்கு பாதிப்பு ஏற்படும்.


இனிமேல் அலுவலகத்தில் பரபரப்பாக இயங்கினால் கூட அதற்கேற்ப போனில் அலாரம் வைத்துக்கூட நீரை நேரத்திற்கு குடிக்கலாம். இதில் ஒன்றும் வெட்கப்படவேண்டியதில்லை. நீரை அதிகமாக குடிக்கமுடியவில்லை என்றால் பழரசம் அல்லது மூலிகை தேநீர் போன்றவற்றை அருந்தலாம்.


நேரமே எழுங்கள்


இது கடைபிடிப்பதற்கு கடினமான பழக்கம். இரவில் தாமதமாக படுப்பவர்கள் எப்படி சூரிய உதயம் பார்க்கமுடியும்? தினசரி நடவடிக்கைகளை சரியானபடி அமைத்துக்கொண்டவர்களுக்கு பெரிய பிரச்னை இல்லை. இரவில் நேரமே சாப்பிடுபவர்கள் பத்து மணிக்குள் தூங்கிவிட முடியும். அப்படி தூங்கினால்தான் காலையில் ஐந்துமணிக்கு எழ முடியும். இதுபோல பழக்கத்தை மேற்கொண்டால் பணி ரீதியாக கூடுதலாக ஒரு மணி நேரம் கிடைக்கும். அல்லது அந்த நேரத்தை நீங்கள் உடற்பயிற்சி செய்ய, அல்லது அன்றைய நாளை எப்படி திட்டமிடுவது என தீர்மானித்துக்கொள்ளலாம்.

https://www.humnutrition.com/blog/wp-content/uploads/2020/11/Does-Exercise-Boost-the-Immune-System-The-Wellnest-by-HUM-Nutrition.jpg

சோறுதான் எல்லாம்!


தென்னிந்தியர்களுக்கு கொதிப்பு தரும் சோறு என்றால் வட இந்தியாவுக்கு கொழுப்பு ஏற்றும் வெரைட்டிகள் உண்டு. ஆக மொத்தம் காலையில் சாப்பிடும் பழக்கத்தை கைவிடாமல் பழங்கள், காய்கறிகள், பருப்புகள், யோகர்ட் என கலவையாக சாப்பிடுவது உடல்நலத்திற்கு நல்லது. இதனால் நேரங்கெட்ட நேரத்தில் லேஸ், பிங்கோ என கடைகளைத் துரத்திக்கொண்டு ஓட வேண்டியிருக்காது.


உணவுப்பழக்கத்தை உங்களுக்கு கற்றுத்தர ஏராளமான நூல்கள், டயட் அறிவுறுத்தல்கள் இணையமெங்கும் உண்டு. ஆனால் இதிலும் உங்கள் உடலுக்கு எது பொருத்தமானது என நீங்கள்தான் தேர்ந்தெடுக்க வேண்டும். இதில் சொதப்பினால் முதலில் உடல்நலம் கெடும். பின்னாளில் மனநலமும் பின்னாலேயே கெட்டுவிடும்.


சேமிப்பு


பத்து ரூபாயைக் கொண்டு சென்றால் அதில் இரண்டு ரூபாயையேனும் மிச்சம் கொண்டு வரவேண்டும் என்று கூறுவார்கள். இதன் பொருள், அதனை சேமிக்க வேண்டும் என்பதுதான். எனவே செலவழிக்கும் பணத்தை முடிந்தளவு போனிலுள்ள ஆப்பில் அல்லது கையிலுள்ள நோட்டில் கூட குறித்து வைக்கலாம். அப்படி வைக்காதபோது நாம் எந்த ளவு செலவு செய்தோம் என்பதே தெரியாது. அதுவும் டிஜிட்டல் இந்தியாவில் வலுக்கட்டாயமாக உள்ளே இழுக்கப்பட்ட பிறகு, அனைத்து செலவுகளும் வாலட் அல்லது கடன் அட்டையிலிருந்து செல்லும்படி நிலைமை மாறிவிட்டது. அனைத்து பொருட்களையும் அமேசானில் அல்லது ஜியோமார்ட்டில் வாங்கும் நிலையில் ரொக்கமாக பொருட்களை வாங்குவது என்பது குறைந்துவிட்டது. இதனை நகரங்களை மையமாக வைத்து கூறலாம்.


வண்ணத்திரை வேண்டாம்!


இன்று பலரும் வீடுகளில அலுவலக வேலைகளை செய்து வருகிறார்கள். இதுபோக நெட்பிளிக்ஸ், அமேசான், ஆஹா என அனைத்து இணைய வெப் சீரிஸ் நிறுவனங்களிலும் பொழுதுபோக்கு அமைந்துவிட்டது. இதனால் ஒருவர் அதிகளவு நேரத்தை ஸ்மார்ட்போனில் செலவழிக்கும்படி உள்ளது. இதனை மாற்றுவதற்கு புத்தகங்களை படிக்கலாம். வீட்டில் ஏதாவது வேலைகள் செய்யலாம். தோட்டம் இருந்தால் அதில் ஏதேனும் செய்யலாம். இப்படி செய்தால் டிஜிட்டல் திரைகளில் கண்கள் சோர்ந்துபோவதை தடுக்கலாம்.









வசதியாக உட்காரு்ங்கள்


சேரில் அமரும்போது சரியான நிலையில் அமராதபோது உடல் வலி ஏற்படும். இதனால் பரபரப்பான ஆபீஸ் வேலைகள் இருந்தாலும் கூட சில மணி நேரங்களுக்கு ஒருமுறை அமரும் நிலையை மாற்றிக்கொள்வது முக்கியம். அப்போதுதான் உடலின் பல்வேறு பாகங்கள் சிறப்பாக இயங்கும். வலி உருவாகாது.


சரியான நாற்காலியைத் தேர்ந்தெடுத்து நிமிர்ந்த நிலையில் அமரவேண்டும். உங்களுக்கும் பணிபுரியும் கணினிக்குமான கோணம் முக்கியம். இது சரியாக அமையாதபோத கழுத்து, முதுகு வலிக்கு ஒத்தடம் கொடுக்க வேண்டியிருக்கும்.


உடற்பயிற்சிதான் எல்லாமே


உலகில் பதினைந்து சதவீதம் பேர் உட்கார்ந்தபடியே நாள்முழுக்க வேலை செய்கிறார்கள். இந்த நேரத்தைக் குறைத்து அடிக்கடி எழுந்து நடப்பது, டீ போடும் போது சில ஸ்குவாட் பயிற்சிகளை எடுப்பது ஆகியவற்றை செய்யலாம். உடலைத் தளர்த்திக்கொள்ளும் பயிற்சிகளைக் கூட மேற்கொள்ளலாம். உடற்பயிற்சியை பழக்கமாக்க இறக்குமதி ஷூக்கள், உடைகள், ஜிம் கூட தேவைப்படலாம். இல்லையெனில் ராமகிருஷ்ணா மடத்தில் விற்கும் யோகாசனா புத்தகத்தை வாங்கிப்படித்து விட்டு உடனே தொடங்கிவிடலாம். இவை உடல் உள்ளுறுப்புகளை பலமாக்குவதோடு, உடலை நெகிழ்வுத்தன்மையோடு வைத்திருக்கும். இவற்றோடு தினசரி குறிப்பிட்ட நேரத்திற்கு தூங்குவது முக்கியம். நல்ல நண்பர்களின் துணையைப் பெறவேண்டும். நச்சு விவகாரங்களை வெறுப்பை தூண்டும் நபர்களின் அருகாமை உங்ளள் ஆயுளைக் குறைத்துவிடும் என்பதை மறக்காதீர்கள்.


பிபிசி



கருத்துகள்