ரோபோட்டுகளால் மனிதர்களுக்கு வேலையிழப்பு ஏற்படாது! - டாக்டர் கேட் டார்லிங்
டாக்டர் கேட் டார்லிங்
செயற்கை நுண்ணறிவு ஆராய்ச்சியாளர்
நாம் ரோபோக்களைப் பற்றி யோசிப்பதில் தவறு ஏதேனும் உள்ளதா?
நாம் எப்போது் மனிதர்கள், செயற்கை நுண்ணறிவை ஒரே தட்டில் வைத்து சோதித்து வருகிறோம். இந்த ஒப்பீடு, நமது கற்பனையை கட்டுப்படுத்துகிறது.
இதில் விலங்குகள் எப்படி தொடர்புடையவையாக உள்ளன?
நாம் வீடுகளில் வளர்க்கும் விலங்குகள் நமக்கு பயன்பாடு உள்ளவை. இவற்றையும் ரோபோக்களையும் தொடர்புடையதாக கூற முடியாது. ஆனால் மனிதர்கள் ரோபோக்களுக்குமான தொடர்பில் விலங்குகள் முக்கியமானவை. இவற்றின் உடல் அசைவுகள் ஆராய்ச்சிக்கு முக்கியமானவை.
பெரும்பாலான நிறுவனங்கள் மனிதர்கள் இல்லாமல் செயல்படக்கூடிய இயந்திரங்களைதயதாரித்து வருகிறார்கள் உதாரணத்திற்கு தானியங்கி கார், ட்ரோன் டெலிவரி என. இதில் விலங்குகளின் தன்மைகளில் உருவாக்கப்படும் ரோபோக்கள், ஆராய்ச்சி மனிதர்களுக்கு உதவுமா?
மனிதர்களின் வேலைக்கு பாதிப்பு உள்ளது உண்மைதான். ஆனால் அது ரோபோட்டுகளால் உருவாக்கப்படவில்லை. அதை தயாரிக்கும் நிறுவனங்கள் செய்யும் அரசியல், பொருளாதார விஷயங்களால் ஏற்படுவது இந்த பாதிப்பு. ஒருவகையில் இதனை முதலாளித்துவத்தின் விளைவு எனலாம். விலங்குகளின் திறன்களை நாம் பயன்படுத்திக்கொள்ளும்போது அது மனிதர்களுக்கு உதவியாக அமையவே வாய்ப்பு அதிகம்.
சமூக உளவியலாளர் ஷெர்ரி டர்கில் போன்றோர் வேலைகளில் ரோபோட்டுகளை ஈடுபடுத்துவது மனித உறவுகளை மாற்றிவிடும் என்கிறார்களே?
இப்படி நினைப்பதற்கு எந்த அடிப்படையும் கிடையாது. மனிதர்கள் தங்கள் வாழ்நிலையைப் பொறுத்தளவில் பிற மனிதர்கள், விலங்குகள் ஆகியவற்றுடன் உறவுகளைக் கொண்டுதான் உள்ளனர். ரோபோட்டுகள் வேலை செய்யும் சூழலில் கூட பெரிய மாற்றம் வந்துவிடாது.
இதில் விலங்குகள் என்றால் ரகசியம் காப்பதில் பிரச்னை கிடையாது. ஆனால் ரோபோக்களிடம் பிரைவசி இருக்குமா?
பெருநிறுவனங்களின் தகவல்களை பாதுகாப்பது அவர்களுக்கே சிரமமானதுதான். இனரீதியாக, பாலியல் ரீதியாக பல்வேறு பிரச்னைகளை நாம் மென்பொருட்களின் வடிவமைப்பில், அல்காரித வடிவமைப்பில் பார்க்கிறோம். இது எல்லாமே நிறுவனத்திலுள்ள சிக்கல்கள்தான். அனைத்து சமூக பிரச்னைகளுக்கும் பெரு நிறுவனங்களிடம் தீர்வு தேடுவதால் அவர்கள் மனிதர்களை கூடுதலாக விஷயங்களாகவே எண்ணுகிறார்கள்
ரோபோட்டுகளுக்கு உரிமைகளை கொடுக்க வேண்டுமா?
அறிவியல் நாவல்களைப் படித்ததால் இப்படி கேள்வி வருகிறது என நினைக்கிறேன். எதிர்காலத்தில் அப்படி உரிமைகளைக் கொடுப்பது பற்றி பேசலாம். இப்போதைக்கு விலங்குகளை கவனமாக பராமரித்து பாதுகாப்பது முக்கியம்.
மனிதர்களைப் போன்ற ரோபோட்டுகளில் தேவை இருக்கிறதா?
இதை எப்போது நிறுத்தப்போகிறோம் என்று தெரியவில்லை. ஆனால் மனிதர்களின் உருவத்தில் செய்யப்பட்ட ரோபோட்டுகள்தான் அதிகம் தயாரிக்கப்படுவதோடு, அதிகமும் பயன்பாட்டில் உள்ளன.
தி கார்டியன் வீக்லி
ஜோ கார்பைன்
கருத்துகள்
கருத்துரையிடுக