பழக்கங்களின் நதிமூலம், ரிஷி மூலம்! - நல்ல பழக்கங்களை எப்படி தொடர்வது?

 

 

 

 

 




பழக்கங்கள் எப்படி உருவாகின்றன?


குழந்தைகளாக இருக்கும் யாரும் பழக்கத்தை தானாக வே பழகுவதில்லை. கர்லான் மெத்தையில் குழந்தையை படுக்க வைத்திருக்கு்ம்போது கூட அதற்கு அதன் தேவை என்னவென்று முதலில் தெரியாது. ஆனால் தினசரி அதில் படுத்து தூங்குபவர்களுக்கு அதன் பயன்பாடு என்னவென்று தெரிந்துவிடும். பல்வேறு பழக்கங்களை குழந்தைகள் வீட்டில்தான் கற்கிறார்கள் இவற்றைக்கூட பெற்றோரைப் பார்த்துதான் கற்கிறார்கள். அதிலும் குழ்ந்தைப்பருவத்தில் கற்கும் பல்வேறு பழக்கங்களை அவர்கள் வயது முதிரும்போது கைவிடுகிறார்கள். அப்படியும் நல்ல பழக்கங்கள் நீடித்திருந்தால், பின்னாளில் அவை வாழ்க்கைக்கு உதவலாம்.


இப்போதும் கூட சிலர் குழந்தையாக இருக்கும்போது கற்ற கைவிரல்களை சூப்புவது, காது மடல்களை இழுத்துக்கொண்டே நடப்பது ஆகிய பழக்கங்களை சிலர் எப்போதும் செய்வார்கள். அனைத்து நல்ல பழக்கங்களுமே ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் சலிப்பை ஏற்படுத்தும்தான். இதனை புரிந்துகொண்டு அதற்கேற்ப மனவலிமையோடு பழக்கங்களை தொடர்ந்தால் மட்டுமே அதற்கான விளைவுகளைப் பெறமுடியும்.


நல்ல பழக்கங்களை தொடர்வதற்கு அதற்கான பரிசுகளை நமக்கு நாமே அளித்துக்கொள்வது முக்கியம். பழக்கங்களை தொடர்ச்சியாக செய்துவருவதற்கு நாம் சில உறுதிமொழிகளை எடுத்துக்கொள்ள வேண்டும். தினசரி உடற்பயிற்சி செய்யவேண்டும் என்பதை விட வாரத்திற்கு நான்கு நாட்கள் உடற்பயிற் செய்யவேண்டும் என்று கூறுவது சிறப்பானது. எடுத்தவுடனே பிரமாண்டமாக யோசித்தால் அந்த பிளான் உடனே தோல்வியடைந்துவிடும்.


எழுந்து ஐந்து நிமிடங்கள் உடற்பயிற்சி தொடங்குவது, காலையில் எழுந்தவுடனே நீரைக் குடிப்பது, வாக்கிங் செல்வது என அனைத்தையும் ஒருவர் திட்டமிட்டு செய்யலாம். ஆனால் இதனை அப்படியே பழக்கமாக தொடர்வது கடினம். இதற்கு நமக்கு நாமே சில பரிசுகளை வழங்கவேண்டும். அப்போதுதான், பழக்கத்தை செய்வதற்கான ஆர்வம் கிடைக்கும்.


பிபிசி


விக்டோரியா வில்லியம்ஸ்

அலிசியா ஹார்வே


கருத்துகள்