வங்கி லாபத்தை பெருமளவு உயர்த்திய பெண்மணி! - சாந்தி ஏகாம்பரம், சங்கீதா பெண்டுர்கர், ஸ்மிதா ஜதியா
சாதனைப் பெண்கள்
சங்கீதா பெண்டுர்கர்
இயக்குநர், பேண்டலூன், ஆதித்ய பிர்லா பேஷன் ரீடெய்ல் நிறுவனம்
சங்கீதா இதுவரை ஐந்து நிறுவனங்களில் பணியாற்றியுள்ளார். அனைத்துமே ஒன்றுக்கொன்று தொடர்பில்லாதவை. மருந்து, வங்கி, உணவு என பல்வேறு துறைகளில் பணியாற்றியவர், இப்போது பேஷன் துறையில் பணியாற்றுகிறார். இதற்காக இவரது திறமையை சற்றும் குறைத்து மதிப்பிட முடியாது. எட்டாயிரம் பேர் உள்ள நிறுவனத்தை 6 சதவீத வளர்ச்சியுடன் நடத்திச்செல்கிறார். 2012 இல் ப்யூச்சர் நிறுவனத்திடமிருந்து ்பே்ண்டலூன் நிறுவனத்தை ஆதித்ய பிர்லா வாங்கியது. அப்போது அவர்களுக்கு ஏராளமான போட்டியாளர்கள் இருந்தனர். இன்று தங்களை தனித்துவமாக காட்டுவதற்கு சில நிறுவனங்களை வாங்கியது சங்கீதாவின் ஐடியாதான்.
நிறுவனத்தில் பணிபுரியும் ஊழியர்கள் தங்கள் கருத்துகளை வெளிப்படையாக சொல்லுவதற்கு வாய்ப்பளிப்பது முக்கியம். அப்போதுதான் நிறுவனத்தை வெற்றிகரமாக நடத்த முடியும் என்பவர், வெளிப்படைத்தன்மையையும், சோதனை முயற்சியையும் விடவே கூடாது என்று கூறுகிறார்.
சாந்தி ஏகாம்பரம்
குழும தலைவர், கோடக் மகிந்திரா வாடிக்கையாளர் சேவை
பொதுமுடக்க காலத்திலும் கூட வங்கிக் கிளைகளை 95 சதவீதம் திறந்து வைத்திருந்த நிறுவனம் இவருடைது. முக்கியமான சாதனையாக எண்பதாயிரம் கோடி இருப்பை கொண்டுள்ள வங்கி இது. சேமிப்பு, நடப்பு கணக்குக்கு குறைந்த வட்டியைக் கொடுத்து காசா சதவீதத்தை ஐம்பத்தாறு சதவீதமாக வைத்திருக்கும் சிறப்பான வங்கி இது. பொதுவாக எந்த வங்கியும் சேமிப்புக் கணக்கிற்கான வட்டியை மூன்று முதல் நா்ன்கு சதவீத த்திற்கும் குறைவாக கொடுப்பதில்லை. ஆனால் தரமான சேவை மூலம் மகிந்திரா வங்கி இந்த சாதனையை செய்துள்ளது.
கோடக் வங்கி இப்போது முழுக்க சேமிப்பு கணக்குகளை டிஜிட்டல் வழியில் தொடங்கி வருகிறது. இதனால் வாடிக்கையாளர்களுக்கு நோய்த்தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பு குறைவு. மேலும் நிறுவனம் டிஜிட்டல் வழியில் செல்வதற்கான வாய்ப்பும் கூடுதலாக உள்ளது.
பர்கர் ராணி
ஹார்ட்காஸ்டில் உணவகம், நிர்வாகத் தலைவர்.
ஸ்மிதா ஜதியா, இந்தியாவில் மெக்டொனால்ட் நிறுவனத்தின் கபேக்களை நடத்துவதற்கான உரிமை பெற்றுள்ளார். அதற்காக அவரை இங்கு பாராட்டி எழுதவில்லை. பர்கர், பிரெஞ்ச் பிரையை மட்டுமே வைத்து சமாளித்து வந்த மெக் கபேக்களை சற்று உள்ளூர் ஐட்டங்களுக்கு ஏற்றபடி மாற்றி லாபம் பார்த்திருக்கிறார். பெல்ஜியம் வேபிள்ல்களை சாப்பிடுபவர்களுக்கு மசாலா தோசை பர்கரும் சாப்பிடக்கிடைக்கும். எப்படி இந்த யோசனை உங்களுக்கு வந்தது என்று கேட்டபோது, வாடிக்கையாளர்கள் காபி குடிக்க எங்கள் கடைக்கு வரமாட்டார்கள். அவர்கள் சாப்பிடுவதற்கு ஏதேனும் வேண்டும் என்று நினைத்தோம். வாடிக்கையாளர்களின் விருப்பங்கள் தினசரி மாறுகின்றன. உணவுகளும் அப்படி மாற வேண்டும் என்கிறார் ஸ்மிதா. இன்று இவர் மெக்டொனால்டு நிறுவனத்தின் இந்தியா பிரிவுக்கு செயல்தலைவராக நியமிக்கப்பட்டிருக்கிறார். இந்தியாவில் இவரது அதிகாரத்தின் கீழ் 223 கிளைகள் உள்ளன. இதில் 33 புதிதாக தொடங்கப்பட்டிருக்கின்றன.
தானியங்கி இயந்திரங்களை உருவாக்கும் பெண்!
சோனாலி குல்கர்னி
பனுக் நிறுவனத் தலைவர்
பனுக் என்பது ஜப்பானைச் சேர்ந்த தானியங்கி இயந்திரங்களை உருவாக்கும் நிறுவனம். இந்தியாவில் இந்த நிறுவனத்தின் தலைவர், இயக்குநர் ஒருவரே. அவர்தான் சோனாலி. இவர் இருபதாண்டுகளுக்கு முன்னர் ஜப்பான் சென்று பனுக் நிறுவனத்தில் வேலைக்கு சேர்ந்தார். பின்னர், 2006இல், இந்தியா திரும்பியவர் பனுக் நிறுவனத்தின் வளர்ச்சிக்காக உழைக்கத் தொடங்கினார். இவரது நிறுவனத்தில் முந்நூற்று ஐம்பது பேர் உள்ளனர். இவர்கள் நாட்டின் பல பகுதிகளிலும் சென்று தேவையான இயந்திரங்களை விற்க உதவுகின்றன. இந்தியாவின் பனுக்கின் கம்ப்யூட்டர் நியூமரல் கண்ட்ரோல் இயந்திரங்கள் ஒரு லட்சத்திற்கும் அதிகமாக விற்கப்பட்டுள்ளன. இந்தியாவில் தயாராகும் கார், பைக் ஆகியவற்றின் தயாரிப்பில் பனுக்கின் தானியங்கி இயந்திரங்கள்தான் பயன்படுகின்றன. ஏறத்தாழ தொழில்துறையை தானியங்கி மயமாக்கியதில் சோனாலிக்கு முக்கியப் பங்குண்டு.
துணிச்சலான இயக்குநர்
விபா படால்கர், ஹெச்டிஎப்சி காப்பீட்டு நிறுவன இயக்குநர்..
காப்பீட்டுத்துறையே பல்வேறு நெருக்கடியால் ஐம்பது சதவீத த்திற்கும் மேல் பாதிக்கப்பட்டபோது ஹெச்டிஎப்சி இருபத்தெட்டு சதவீத பாதிப்பை எதிர்கொண்டது. இன்று தனியார் துறையில் பெரிய நிறுவனமான இந்த நிறுவனமே வளர்ந்துள்ளது. 2019ஆம் ஆண்டை விட பாலிசி புதுப்பித்தல் கடந்த ஆண்டில் தொண்ணூறு சதவீதம் அதிகரித்துள்ளது. மேலும் பெருந்தொற்று காரணமாக அலுவலகங்களை மூடி டிஜிட்டல் வடிவில் காப்பிடுகளை விற்று வருகிறது ஹெச்டிஎப்சி. பிரிமீயம் மூலமான வருமானமும் கூட 17.5 லிருந்து 18.5 ஆக அதிகரித்துள்ளது. தொழிலை மேம்படுத்த தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யவும் விபா படால்கர் முடிவு செய்துள்ளார்.
பிஸினஸ் டுடே
தொகுப்பு கா.சி.வின்சென்ட்
கருத்துகள்
கருத்துரையிடுக