வங்கிப் பணத்தைப் பார்த்தால் உலகை மறந்துபோகும் நாயகன்!
வங்கிப் பணத்தைப் பார்த்தால் உலகை மறந்துபோகும் நாயகன்! ஜீப்ரா சத்யதேவ், பிபிஎஸ், சத்யா, தாலி தனஞ்செயா தெலுங்கு இதுவும் ஒரு வங்கியை ஏமாற்றும் அதிகாரியைப் பற்றிய கதை. அதாவது வங்கிக்குள்ளே இருந்துகொண்டே ஊழலை எளிதாக கண்டுபிடிக்காத வகையில் செய்கிறார். அப்படி செய்யும்போது, மாஃபியா டான் ஒருவரிடம் மாட்டிக்கொண்டு ஐந்து கோடியை நான்கு நாட்களில் திரட்டுமாறு மிரட்டப்படுகிறார். அதை நாயகன் எப்படி சமாளித்தார் என்பதே கதை. இயக்குநர் ஈஸ்வர கார்த்திக் நம்பிக்கையுடன் படத்தை எடுத்திருக்கிறார். வணிக ரீதியான குத்துப்பாட்டு உண்டு. நாயகி பவானியுடன் அடல்ஸ் ஒன்லி வசனங்களை வைத்தே காதலை சொல்லிவிட்டு அடுத்த விஷயத்திற்கு செல்கிறார்கள். பிரியா அக்கட தேசத்தில் காட்டும் தாராளம் பொறாமையாக உள்ளது. விஷாலுக்கு அம்மாவாக நடித்தே சாதனை செய்துவிட்டவரை என்ன சொல்வது? நாயகன் சூர்யா, அபார்ட்மென்ட் ஒன்றை காசுக்கு வாங்கி நீரிழிவு நோய் வந்த அம்மாவை குடிவைக்க ஆசைப்படுகிறார். அதேநேரம், இன்னொரு வங்கியில் வேலை செய்யும் காதலியைம் மணக்க நினைக்கிறார். அதற்கு காசு வேண்டுமே... அதற்கு வங்கியில் உள்ள சட்ட ...