கிராமத்தின் மீது விண்கலம் விழுந்தால்....- ஸ்கைலேப் - தெலுங்கு 2022
ஸ்கைலேப்
தெலுங்கு
ஆந்திரத்திலுள்ள பழமையான நம்பிக்கைகள் மாறாத ஊர். அங்கு தீண்டாமை இருக்கிறது. பள்ளிக்கூடத்தை கூட அதற்காக பூட்டி வைத்துள்ளனர். தலித்துகளை கோவிலுக்குள் அனுமதிப்பதில்லை. அந்த இனத்திற்குள் யாராவது உடல்நலக்குறைவு வந்தால் கூட அவர்களை வைத்தியர் தொட்டு பார்ப்பதில்லை. இந்த நேரத்தில் அங்கு ஸ்கைலேப் என்ற விண்கலம் விழுவதாக செய்தி வருகிறது. மரண பயத்தில் உள்ள மக்களின் மனதில் என்னென்ன மாற்றங்கள் ஏற்படுகின்றன என்பதுதான் மையக் கதை.
இதில் முக்கியமான கதை கௌரி என்ற ஜமீன்தாரின் மகள், மருத்துவ உரிமம் தடை செய்யப்பட அதனை திரும்ப பெற 5 ஆயிரம் ரூபாய் பணத்தைப் பெற தாத்தாவைத் தேடி வரும் ஆனந்த் ஆகிய இருவரைச் பற்றியது.
இந்த படத்தை நித்யாமேனன் தயாரித்து நடித்திருக்கிறார். தனது பரம்பரை, சொத்து காரணமாக தான் மேதாவி என நினைத்துக்கொண்டு சிபாரிசில் ஹைதராபாத்தில் உள்ள பத்திரிக்கையில் வேலை செய்கிறார். ஆனால் இவரது கட்டுரை பிரசுரமானாலும் கூட இலக்கணமும், அதில் எழுதும் விஷயங்களும் சரியாக இருப்பதில்லை. இதை கௌரி பெரிதாக கண்டுகொள்வதில்லை. இதனை மெல்ல அவர் உணர்ந்துகொண்டு சிறந்த பத்திரிக்கையாளராக எப்படி மாறினார் என்பதுதான் காட்சிபடுத்தப்பட்டுள்ளது.
இவருக்கு அடுத்து ஆனந்த் (சத்யதேவ்). இவர் மருத்துவத்திற்கு படித்தவர். கிராமத்திற்கு வரவெல்லாம் விரும்பவிலை. ஆனால் மருத்துவராக வாங்கி உரிமம் தடைபட, அதனை மீட்க பணம் தேவைப்படுகிறது. அதை தாத்தாவிடம் தாஜா செய்து வாங்க கிராமத்திற்கு வருகிறான். அங்கு நடக்கும் விஷயங்கள் அவனது வாழ்க்கையை மாற்றிப் போடுகிறது.
படத்தின் தமிழ் டப்பில் தெலுங்கு படத்தை முழுமையாக தமிழ் படமாக்க மெனக்கெட்டிருக்கிறார்கள். ஆனால் அது அந்தளவு பலன் கொடுக்கவில்லை. இருந்தாலும் இறுதிப்பகுதியில் வரும் வசனத்திற்காக அதனை கொஞ்சமேனும் ஏற்கலாம்.
இறுதிக்காட்சியில் ஆனந்தின் மனமாற்றம் ஏற்படுவது சிறப்பான காட்சி. நிதானமாக பார்க்கவேண்டிய படம். படத்தைப் பற்றி குங்குமம் தலைமை உதவி ஆசிரியர் லாக்டௌன் நேரத்தில் கிடைத்த தேநீர் என ஃபேஸ்புக்கில் புகழ்ந்து எழுதியுள்ளார். உலக சினிமா பார்ப்பவரே இப்படி எழுதியிருக்கிறார் என்றால் வேறு என்ன வேண்டும்? எனவே வாய்ப்பு கிடைத்தால் படத்தைப் பார்த்து விடுங்கள்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக