முதியவர்களைப் பார்த்துக்கொள்ள மருத்துவமனை தொடங்கிய மருத்துவர்! - மருத்துவர் மகாலஷ்மி



மருத்துவர் மகாலஷ்மி




 மகாலஷ்மிக்கு அப்போது 30 வயது. அந்த நேரத்தில்தான் தனது பெற்றோரை இழந்தார். அவர்களது இறப்பிற்கு பிறகு, சிறிது காலத்தில் அவரது மாமனார், மாமியார் ஆகியோரையும் இழந்தார். இதெல்லாம் அவரை அடுத்து செய்யவிருந்த மருத்துவமனை பணிகளைத் தடுக்கவில்லை. 

அதுவரை சம்பாதித்த பணத்தையும், வங்கி கடன்களையும் இணைத்து பாலாஜி மல்டிஸ்பெசாலிட்டி மருத்துவமனையை உருவாக்கினார். இதுகூட வயதானவர்களை வேலை காரணமாக சரியாக கவனித்துக்கொள்ள முடிவதில்லை. வயதான காலத்தில் நோயும் சேர்ந்துகொள்ள அவர்களை பார்த்துக்கொள்ள மருத்துவமனை உதவியாக இருக்கும் என்றே மருத்துவமனையை உருவாக்கியுள்ளார். 

மருத்துவர் மகாலஷ்மி, பாலாஜி ஹெல்த்கேர்






நாம் எல்லோரும் பிறக்கிறோம், வளர்கிறோம், வேலைக்கு போகிறோம், திருமணம் செய்து குழந்தைகளைப் பெறுகிறோம். நான் இதைத் தாண்டி ஏதேனும் ஒன்றை செய்ய நினைத்தேன் என தனது செயல்பாட்டை விளக்குகிறார் மகாலஷ்மி. 2011 ஆம் ஆண்டு மும்பைக்கு வெளியே பாட்ஷா ஆற்றுப் புறத்தில் தொடங்கிய மருத்துவமனையில் முதலில் நான்கு பேர் நோயாளிகளாக இருந்தனர். இப்போது 74 பேர் இங்கு தங்கி சிகிச்சை பெற்று வருகிறார்கள். ஷிசோபெரேனியா, டிமென்ஷியா, பார்க்கின்சன், ஹெமிபிளேகியா ஆகிய நோய்களுக்கு உள்ளானவர்கள் இங்கு சிகிச்சை பெறுகிறார்கள். 

மருத்துவ உதவிகளுக்கு தேவையான உதவிகளை செய்பவர்கள் அனைவரும் மருத்துவமனை வளாகத்திலேயே தங்கியுள்ளனர். ஏன் மகாலஷ்மியும் தனது மருத்துவக் கணவரோடு இங்கேயேதான் உள்ளார். முதியவர்களைப் பார்த்துக்கொள்ளும் மருத்துவமனைதான் என்றாலும் இது தொண்டு நிறுவனம் போல அல்ல. இங்கு குறைந்தபட்ச தொகையை பெற்றுக்கொண்டு சிகிச்சை அளிக்கிறார்கள். 

நாட்டில் உள்ள 97 ஆயிரம் முதியவர்களுக்கு 1,150 சிகிச்சை மையங்கள்தான் உள்ளன என பல்வேறு ஆய்வு அமைப்புகளின் மூலம் தெரியவந்துள்ளது. 

முதியவர்களோடு பழகும்போது நீங்கள் கடைபிடிக்க வேண்டியது உணர்வு ரீதியாக அவர்களுடன் ஒன்றிவிடக் கூடாது. அது ஆபத்து என எச்சரிக்கிறார் மகாலஷ்மி. மருத்துவமனைக்கான பணியாளர்கள் அனைவரும் அருகில் சுற்றுப்புறம் இருக்கும் மக்கள்தான். அவர்களின் குடும்பங்களுக்கு பல்வேறு அடிப்படை உதவிகளை மகாலஷ்மி செய்துகொடுத்து வருகிறார். குறிப்பாக கல்வி சார்ந்த உதவிகள். எனவே, மருத்துவமனை எந்த சிக்கலும் இல்லாமல் நடைபெற்று வருகிறது. 

மருத்துவர் மகாலஷ்மி இப்போதுதான் நேரம் கிடைக்க நீச்சலடிக்கவும், சைக்கிள் ஓட்டிப் பழகவும் கற்று வருகிறார். மருத்துவ சிகிச்சை காரணமாக அவரது மகளுக்கு செலவிட குறைந்த நேரமே கிடைக்கிறது. அதைப்பற்றி கவலைப்பட ஏதுமில்லை. நான் செய்யும் பணியை இதே முறையில் தொடர நினைக்கிறேன் என்கிறார் மகாலஷ்மி. 

ரீடர்ஸ் டைஜெஸ்ட்

சரிதா சந்தோஷி




கருத்துகள்