2022 ஆம் ஆண்டு நடக்கவிருக்கும் முக்கியமான நிகழ்வுகள்!

நாம் இந்த ஆண்டு நடக்கும் நிகழ்ச்சிகள் என்று பட்டியல் போட்டாலும் இவை நடக்கும் என்பது வானிலை மையம் மழை வரும் என்று சொல்வது போலத்தான். வரலாம், வராமலே போகலாம். அனைத்து சம்பவங்களுக்கும் வாய்ப்புள்ளது. எனவே, இது பொதுவான நிகழ்ச்சிபற்றிய தொகுப்புதான். எனவே, நிகழ்ச்சிகள் நடந்தே ஆகவேண்டும் என மனதிற்குள் ஃபிக்ஸ் ஆகாதீர்கள். ஜனவரி 1 இனிமேல் இங்கிலாந்து ஐரோப்பிய யூனியனில் இல்லை. எனவே, இங்கிலாந்திற்குள் வரும் பொருட்கள் அனைத்தும் ஐரோப்பிய யூனியனின் கண்காணிப்புக்கு உட்பட்டே வரும். இதனால் நிறைய கட்டுப்பாடுகளை அந்த நாடு எதிர்கொள்ளவிருக்கிறது. இதனால் உணவுத்தட்டுப்பாடு நாட்டில் ஏற்பட வாய்ப்புள்ளது என வல்லுநர்கள் கூறி வருகிறார்கள். நடக்குமா இல்லையா என்று தெரியாது. இனிமேல் இங்கிலாந்து தனித்தே செயல்படவிருக்கும் நிலையில் இந்த ஆண்டு நிறைய சோதனைகளை எதிர்கொள்ளும்படி சூழல் அமையலாம். ஜனவரி 17-30 தேதி வரையில் ஆஸ்திரேலிய ஓப்பன் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. இந்தியாவில் குடியரசுத்தலைவரின் மாளிகை, இந்தியாவின் கேட் ஆகியவற்றை இணைக்கும் வகையில் சென்ட்ரல் விஸ்டா கட்டடம் கட்டப்பட்டு வருகிறது. இதனை குடியரசு தினத்தில் திறந்து வைக்க ஒன்றிய அரசு முடிவெடுத்துள்ளது. இதனை பாஜக அரசு தனது மகத்தான சாதனை என சொல்லிக்கொள்ளலாம். பிப்ரவரி பிப்ரவரி 4 அன்று சீனாவில் வின்டர் ஒலிம்பிக்ஸ் போட்டிகள் நடைபெறவிருக்கின்றன. பெய்ஜிங்கில் நடைபெறவிருக்கும் போட்டிகள் முழுக்க பசுமையான ஆற்றல் மூலம் நடத்தப்படுவதாக உலகிற்கு காட்ட, நிரூபிக்க சீனா முயன்று வருகிறது. இதனால் மாசுபாடுகளை உமிழும் தொழிற்சாலை உற்பத்தி, பாதியாக குறைக்கப்பட்டுள்ளது. கோவா, உத்தரகாண்ட், பஞ்சாப், உ.பி, மணிப்பூர் ஆகிய மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெறவுள்ளது. எனவே ஒன்றிய அரசு, பாஜக கட்சியை அனைத்து மாநிலங்களிலும் வெல்ல வைக்க வருமானவரித்துறையை தூண்டிவிட்டுள்ளது. அவர்களும் ரெய்டுக்கு சென்று வருகிறார்கள். எதிர்க்கட்சி தலைவர்களுக்கு இந்த வழிமுறை. மக்களுக்கு என்ன செய்வது? கலவரத்தை உருவாக்குவதுதான் என பாஜக ஐடி விங் செயல்பட்டு வருகிறது. நாசா விண்வெளி அமைப்பு, ஆர்டெமிஸ் விண்கலனை விண்ணில் ஏவ உள்ளது. மார்ச் காட்ஃபாதர் படம் வெளியாகி 50 ஆண்டுகள் ஆகிறது. இதனை 4கே தரத்தில் வெளியிட உள்ளனர். ஆஸ்திரேலியா கிரிக்கெட் அணி பாகிஸ்தானுக்கு 24 ஆண்டுகளுக்குப் பிறகு விளையாட செல்கிறது. பெண்கள் ஒருநாள் உலக கோப்பை போட்டி நியூசிலாந்தில் நடைபெறவுள்ளது. போட்டி மார்ச் 4 முதல் ஏப்ரல் 3 வரை நடைபெறும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஏப்ரல் இந்தியாவில் தொழிலாளர் விதிகள் மாற்றப்பட்டுள்ளன. இதனால் வாரத்திற்கு நான்கு நாட்கள் மட்டும் வேலை இருக்கும். படிக்க தொழிலாளர்களுக்கு சாதகமான சீர்திருத்தம் போல தெரிந்தாலும் சம்பளக்குறைவு, முதலாளிகளுக்கு ஆதரவான பல்வேறு பிரிவுகள் என ஒன்றிய அரசு தனது கருத்தில் மிகச்சரியாக செயல்பட்டுள்ளது. எனவே விரைவில் தொழிலாளர் போராட்டங்கள் தொடங்கலாம். இதற்கான தேதியை நாம் எழுத முடியாது. போராட்டக்குழுவே சொல்லுவார்கள். பிரெஞ்சு அதிபர் தேர்தல் தொடங்குகிறது. மே மே 27 அன்று அப்பா வாயேஜ் என்று இசைக்குழுவினரின் ரீயூனியன் விழா நடைபெறவுள்ளது. சாம்பியன் லீக் போட்டிகள்(இறுதிப்போட்டி ) ரஷ்யாவில் மே.28 அன்று நடைபெறவுள்ளது. ஜூன் இரண்டாம் எலிசபெத் ராணிக்கு வயது 70 ஆகிறது. பிரிட்டிஷ் வரலாற்றில் இப்படி ராணி மேற்படி வயதை எட்டிப்பிடிப்பது சாதனை. விழா எடுத்து கொண்டாடுவார்கள். மறக்காமல் பிபிசியில் பார்க்கலாம். விம்பிள்டன் டென்னிஸ் போட்டிகள் ஜூன் 27 தொடங்கி ஜூலை 10 வரை நடைபெறும். ஜூலை ஜூலையில் டூர் டே பிரான்ஸ் போட்டி நடைபெறவிருக்கிறது. இதில் முதல்முறையாக பெண்கள் பங்கேற்கவிருக்கிறார்கள். 1989ஆம் ஆண்டிலிருந்து போட்டி நடைபெற்று வருகிறது. இதில் இப்போதுதான் பெண்கள் இணைகிறார்கள். ஜூலை 24 -31 தேதி வரை போட்டி நடைபெறுகிறது. ஜூலை 28 இங்கிலாந்தின் பிர்மிங்காம் நகரில் காமன்வெல்த் போட்டிகள் தொடங்கி நடைபெறவிருக்கிறது. ஆகஸ்ட் ஆகஸ்ட் 15 அன்று இந்தியா தனது 75ஆவது சுதந்திர தினத்தை கொண்டாட உள்ளது. செப்டம்பர் எக்ஸோமார்ஸ் எனும் ரஷ்ய - ஐரோப்பிய நாடுகளின் திட்டம் தொடங்குகிறது. இந்தியாவின் சாலைகளிலும் டெஸ்லா கார்களைப் பார்க்கலாம். கார்களின் அறிமுகம் விரைவில் நடைபெற உள்ளது. அக்டோபர் பிரேசில் அதிபரின் தேர்தல் அக்.2 அன்று நடைபெறவிருக்கிறது. பெங்களூரு மைசூரு எக்ஸ்பிரஸ் வே திட்டம் தயாராகிவிடும். அதனை பெருமையுடன் இந்தியாவின் பிரதமர் நாட்டிற்கு அர்ப்பணிப்பார். நவம்பர் இமாச்சலப் பிரதேசத்தின் சட்டசபை தேர்தல் நடைபெறும். நவ. 7-18 தேதிகளில் எகிப்தின் சர்ம் எல் ஷேக் எனும் இடத்தில் உலக நாடுகளின் தலைவர்கள் தனி விமானங்களில் வந்து கலந்துகொண்டு பார்ட்டி செய்தபடியே கிடைக்கும் நேரத்தில் பல்குத்தியபடியே கார்பன் உமிழ்வு பற்றியும் பேசுவார்கள். நவ.8 அன்று அமெரிக்காவில் தேர்தல் நடைபெறும். ஃபிபா கால்பந்து போட்டி கத்தாரில் நடைபெறும். நவ.21 - டிச. 18 வரை போட்டிகளை கண்டு ரசிக்கலாம். கிராண்ட் எகிப்திய மியூசியம் திறக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது உலகின் மிகப்பெரிய அகழாய்வு அருங்காட்சியகம் ஆகும். டிசம்பர் குஜராத்தில் சட்டசபை தேர்தல் நடைபெறும். செனாப் பிரிட்ஜ் - ரயில்வே பாதைகளில் நீளமானது. இதனை திறந்து வைக்க இருக்கிறார்கள். டிச. 16 அன்று அவதார் 2 வெளியாகிறது. கவலைப்படாதீர்கள். இதனை குங்குமம் சக்திவேல் பார்த்துவிட்டு உங்களுக்காகவே சிறப்பு விமர்சனம் எழுதி அசத்துவார். புதியவை எவை ஆகாசா ஏர்லைன்ஸ் தொடங்கப்படவிருக்கிறது. ககன்யான் விண்வெளி வீரர்களை ஏற்றிக்கொண்டு விண்வெளிக்கு செல்லவிருக்கிறது. அனைத்து இந்தியர்களுக்கும் பூஸ்டர் தடுப்பூசிகள் கிடைத்துவிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. டைம்ஸ் ஆப் இந்தியா

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்