நான்சென்ஸ் இலக்கிய எழுத்தாளர் லூயிஸ் கரோல்- 190qsa

 











ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் நாவல் எழுதிய எழுத்தாளர்தான் லூயிஸ் கரோல். இவர் தன்னுடைய இலக்கியப் படைப்பை நான்சென்ஸ் இலக்கியம் என்றுதான் கூறினார். 1832ஆம் ஆண்டு ஜனவரி 27 அன்று சேஷையர் நகரில் இங்கிலாந்து நாட்டில் பிறந்தார். 

படிப்பு, வகுப்பில் முதலிடம் என்ற விஷயங்கள் எல்லாம் லூயிஸ் கரோலுக்கு இயல்பாகவே கைவந்த திறன். இவரின் இயற்பெயர், சார்லஸ் லுட்விட்ஜ் டாட்ஜ்சன். இலக்கியப் படைப்புகளை எழுத தேர்ந்தெடுத்த புனைப்பெயர்தான் லூயிஸ் கரோல். 

1852ஆம் ஆண்டு கணிதப் படிப்பில் பட்டம் பெற்றார். அதிலும் கல்லூரியில் முதல் மாணவராக தேர்ச்சி பெற்றார். கவிஞர், எழுத்தாளர், புகைப்படக்காரர், கண்டுபிடிப்பாளர் என பல்வேறு விஷயங்கள் சார்லஸிடம் உண்டு. 

1862ஆம் ஆண்டு ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் கதைகளை தனது நண்பர்களிடமும், குழந்தைகளிடமும் சொல்லி சந்தோஷப்படுத்தினார் சார்லஸ். பலருக்கும் அக்கதைகள் பிடித்திருக்க அக்கதைகளை தொகுத்து நூலாக எழுதினார். எழுதிய ஆண்டு 1865. உடனே இக்கதைகள் மக்களிடையே பரவலாக வாசிக்கப்பட்டன. எழுத்தாளர் லூயிசும் பிரபலமானார். இக்கதைகளை இங்கிலாந்து ராணி விக்டோரியாவும் படித்து பரவசப்பட்டார். 

வெற்றி பெற்றாலும் கூட ஆலிஸ் கதைகளை லூயிஸ் தொடரவில்லை. அடுத்து இவர் எழுதிய சில்வி அண்ட் ப்ரூனோ நூல் வர்த்தக ரீதியாக தோல்வியைத் தழுவியது. பிறகு, லூயிஸ் தினசரி வாழ்க்கைக்கு பயன்படும் சாதனங்களை கண்டுபிடிக்கும் ஆராய்ச்சியில் மூழ்கினார். புகைப்படக்கலை, கணிதம் ஆகியவற்றில் பல்வேறு ஆய்வுகளை செய்தார். 1989ஆம் ஆண்டு ஜனவரி 14    ஆம் தேதி லூயிஸ் கரோல் காலமானார். அப்போது இவரின் ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் நூல் இங்கிலாந்தில் மிக பிரபலமாக இருந்தது. 1932இல் லூயிஸ் கரோலின் இந்த நூல் அளவுக்கு உலகளவில் பிரபலமான குழந்தைகள் நூல் வேறெதுவும் இல்லை. 

எதற்கு இவ்வளவு தூரம் வளர்த்தி இதைப்பற்றி பேசுகிறோம் என நினைக்கிறீர்களா? ஆலிஸ் இன் ஒண்டர்லேண்ட் நூலை எழுதிய லூயிசுக்கு இது 190ஆவது பிறந்த தின ஆண்டு. அவரது நூலைப் படித்து அவரைக் கொண்டாடுவோம் வாருங்கள்! 

டெல் மீ வொய் இதழ் 





கருத்துகள்

பிரபலமான இடுகைகள்