இடுகைகள்

மனமறிந்து பழகு! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனநலனைக் கட்டுப்படுத்தும் உயிரிவேதியியல் மருந்துகள் - மனமறிந்து பழகு இறுதிப்பகுதி!

படம்
pixabay மனமறிந்து பழகு! - இறுதிப்பகுதி வேதிப்பொருட்களால் சிகிச்சை ஒருவருக்கு சூழல்களாலும் , தன்னுடைய குழந்தைப்பருவ வலி நிரம்பிய அனுபவங்களாலும் பாதிப்பு ஏற்படலாம் . அதன் காரணமாக ஏற்படும் பாதிப்புகள் இயல்பாக , பழக்கவழக்கமாக மாறிவிடுவதை தெரபிகளால் மட்டுமே குணப்படுத்திவிட முடியாது . அதற்காகவே வேதியியல்ரீதியான மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன . அமெரிக்காவில் 2017 ஆம் ஆண்டு எடுத்த ஆய்வுப்படி , அங்கு 1999 முதல் 2014 வரையிலான காலகட்டத்தில் மன அழுத்த மருந்துகளின் பயன்பாட்டு அளவு 95 சதவீதம் கூடியுள்ளது . இதற்கு முக்கியக் காரணம் , தொழில்துறை மாற்றங்கள் , பொறுப்புகள் கூடியுள்ளதும் , உறவு சார்ந்த சிக்கல்களும் முக்கிய காரணமாக உள்ளன . இவற்றுக்கு தெரபியோடு மூளையிலுள்ள செரடோனின் போன்ற மனநிலையை மாற்றும் சுரப்புகளைக் கட்டுப்படுத்த மருந்துகள் வழங்கப்படுகின்றன . இவற்றை மருத்துவரின் பரிந்துரைப்படி குறிப்பிட்ட அளவு மட்டுமே பயன்படுத்தவேண்டும் . இந்த மருந்துகளுக்கும் உடல் கட்டுப்பட மறுத்தால் , இறுதிக்கட்டமாக மூளையில் சிறிய அளவு மின்சாரம் செலுத்தப்படும் . இப்போது மனநல சிகிச்சைகளுக்குப் பயன்படும் மருந்த

குடும்பத்தில் ஏற்படும் உறவுச்சிக்கல்களைத் தீர்க்க உதவும் தெரபி முறைகள்!

படம்
pixabay இஎம்டிஆர் எந்த பணிகளையும் செய்வதற்கு நாம் வேறு சூழல்களால் தாக்கப்படாமல் இருக்கவேண்டும். பொதுவாக நாம் ஏதாவது பணியில் இருக்கும்போது நம்மை அதை செய்யவிடாமல் தடுப்பது, நமது கண்களும் காதுகளும். இந்த தெரபி முழுக்க கண்களுக்கானது. தெரபி வல்லுநர் தன் சுட்டு விரலைக் காட்டி குறிப்பிட நிகழ்ச்சியை நினைக்கச் சொல்லுவார். பொதுவாக நமக்கு மகிழ்ச்சியான நினைவுகளை விட துயரமான வேதனையான நிகழ்வுகள்தான் நினைவுக்கு வரும். அவற்றிலிருந்து ஒருவரின் மனதை திருப்பி அவர்களின் எண்ணங்களை நேர்மறையாக மாற்றுவதுதான் இஎம்டிஆர் தெரபி நோக்கம். ஆர்ட் தெரபி அனைவராலும் தன்னுடைய உணர்வுகளை பேசுவதன் மூலமாக வெளிப்படுத்திவிட முடியாது. அதற்காகவே ஒருவரின் மனதிலுள்ள எண்ணங்களை அவர்களது கலை வெளிப்பாட்டு வழியாக அறியும் தெரபி. ஓவியங்களை நாம் வெளிப்படையாக பிறருக்கு பார்வையிட அனுமதிப்பதன் மூலம் சுய விழிப்புணர்வும், விமர்சனங்களை ஏற்கும் மனநிலையும் ஏற்படுகிறது. ஓவியம் மட்டுமல்ல, இசை, எழுத்து ஆகியவையும் ஒருவருக்கு உதவலாம். இசை கேட்பது மட்டுமல்ல அதனை உருவாக்குவதும் மூளையிலுள்ள டோபமைன் சுரப்பில் மாறுதல்களை ஏற்படுத்துகின்றன. அனிமல்

ஆளுமைக் குறைபாடுகளை போக்கும் மனநல தெரபி முறைகள்!

படம்
pixabay மையப்படுத்திய தெரபி இதில் உளவியலாளர் நோயாளியை சுதந்திரமாக பேச வைக்கிறார். இதன் காரணமாக அவர் தனது மனதிலுள்ள அனைத்து விஷயங்களையும் வெளிப்படுத்துகிறார். இவற்றில் உளவியலாளர் பங்கு நோயாளி சொல்வதை முழுமையாக கவனித்து உள்வாங்குவது மட்டுமே. இதனால் தான் செய்தது சரி, தவறு என வாதிடுவதை மெல்ல நோயாளி கைவிடும் வாய்ப்பு ஏற்படுகிறது. தன் செயல்சார்ந்து வளர்ச்சி, மேம்பாடு ஆகியவற்றை இந்த தெரபி ஒருவருக்கு வழங்குகிறது. தெரபி அளிப்பவர் நோயாளி மீதான கரிசனம், நேர்மறையான எண்ணதுடன் அவரை அணுகுகிறார். அவரின் கண்களின் வழியாக உலகைப் பார்ப்பதால் உளவியலாளருக்கும், நோயாளிக்கும் நம்பிக்கையான உறவு ஏற்படுகிறது. இதனால் சிகிச்சை சிறப்பாக பயனளிக்கும்   வாய்ப்பு பெருகிறது. ரியாலிட்டி தெரபி நோயாளிக்கு உறவுகளை பராமரிக்க பாதுகாக்க வளர்க்க தெரியாத சிக்கல் இருக்கும். இதனால் குறை, புகார், வசை பாடாமல் எப்படி உறவை வளர்ப்பது என இந்த தெரபி வழியாக உளவியலாளர் கற்றுத் தருகிறார். தன் வாழ்க்கையை நடத்துவதற்கான சுதந்திரம், பணி சார்ந்த அங்கீகாரம், குடும்பம், உறவுகள், நட்பு, உணவு உடை பாதுகாப்பு ஆகியவற்றை இந்த தெரபி உறுதி செய்க

நேர்மறையான செயல்பாடுகளை உருவாக்கும் பெர்மா மாடல்!

படம்
pixabay ஆக்ட் தெரபி ஒருவர் நான் நேர்மறையாக எதையும் செய்யமாட்டேன் என்று சொல்லிக்கொண்டிருப்பார். இத்தெரபி எனக்கு நேர்மறையாக எதுவும் செய்யவராது என்ற எண்ணம் தோன்றுகிறது என்று எண்ண வைக்கும். இதன்படி அவர்களுக்கு நேர்மறையாக சிந்திக்கவும், வாழவும் ஆலோசனைகளை உளவியலாளர்கள் வழங்குகின்றனர். ஆக்ட் மற்றும் டிபிடி தெரபி, நோயாளிகளுக்கு வழங்கப்படுகிறது. இதன் மூலம் நோயாளிகள் தம்மைத்தாமே காயப்படுத்திக்கொள்வது, தவறான எண்ணங்களின் பாதிப்பால் மது, போதைப்பொருட்களை பயன்படுத்தும் எண்ணம் கைவிடப்படுகிறது. நோயாளி தனக்கு ஏற்படும் எண்ணம் பற்றி அவர் ஒப்புக்கொள்வது சிகிச்சையை எளிதாக்கும். இதன் பின்னர் அவர் கடைபிடிக்கவேண்டிய பழக்கங்களை உளவியலாளர் அட்டவணைப்படுத்தி தருவார். அதனை அவர்கள் முழுமையாக கடைப்பிடிப்பது அவசியம். சுயமாக தனக்கு என்ன தேவை, என்ன பாதிப்பு ஏற்பட்டிருக்கிறது என்பதை அவர்கள் முழுமையாக உணர்வதற்கான பயிற்சிகள் வழங்கப்படுகின்றன. டிபிடி தெரபியில் முக்கியமான அம்சங்கள் இவைதான். இதில் ஒருவர் சொல்லுவதற்கு பதில் சொல்வதைவிட புரிந்துகொள்வது முக்கியம். எந்த சூழ்நிலையிலும் உணர்ச்சிகளால் எல்லைமீறி நடந்துகொள்