இடுகைகள்

படைப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆட்டிச குழந்தைகளின் கலைத்திறனை அங்கீகரிக்கும் வலைத்தளங்கள்!

படம்
  சுவாமிநாதன் மணிவண்ணன் என்ற ஓவியக்கலைஞர் சென்னையில் உள்ளார். இவர் தனது ஏழு ஒவியங்களை 75 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை செய்துள்ளார். இவரின் கைவண்ணத்தில்தான் தனது லெட்டர்ஹெட்டை விஸ்வநாதன் ஆனந்த் வடிவமைத்துள்ளார். இத்தனைக்கும் சுவாமிநாதன் மணிவண்ணன், ஆட்டிஸ பாதிப்பு கொண்டவர்.  சுவாமியின் படைப்புகள் மாற்றுத்திறனாளிகளுக்காக திறக்கப்படவிருக்கும் அருங்காட்சியகத்தில் இடம்பிடிக்கவிருக்கிறது. 36 வயதான சுவாமியின் படைப்புகள் 2018ஆம் ஆண்டு கொச்சி பினாலே நிகழ்ச்சியில் முதன்முதலாக இடம்பெற்றது.இப்போது ஆன்லைன் தளங்கள் உருவாக்கப்பட்டுவிட்டதால் மாற்றுத்திறனாளிகளின் கலைப்படைப்புகள் எளிதாக வெளிச்சத்திற்கு வந்துள்ளன.  ஆட்டிஸ குழந்தைகள் தகவல் தொடர்பு கொள்வதில் தடுமாறினாலும் சரியான பயிற்சி கொடுத்தால், அவர்கள் கலை சார்ந்த விஷயங்களில் திறமையானவர்களாக வளருவார்கள் என்பதற்கு சுவாமி முக்கியமான உதாரணம்.  சோழமண்டலம் கலைஞர்கள் கிராமத்தில் சிறப்புக் குழந்தைகளுக்காக கலைகளை சொல்லித்தருவதற்காக திட்டங்கள் உள்ளன. 2016ஆம் ஆண்டு தொடங்கி, இங்கு மாலா சின்னப்பாவும் அவரின் குழுவும் உழைத்து வருகிறார்கள். எ பிரஷ் வித் ஆர்ட் என்பது இவர்

தனிமைப்படுத்தலால் பிரபலமான எழுத்தாளர்கள்!

படம்
giphy நோய் தாக்காமல் தனியாக இருக்கச்சொல்லி அரசு உத்தரவிட்டிருக்கிறது. உற்சாகமாக வேலை பார்க்கும் மனிதர்களையும் இந்த காலகட்டம் சோம்பேறிகளாக்கி விடக்கூடும். இதனால் இப்படி நோய் பரவிய,  போர் காலகட்டங்களில் சாதனைகள் படைத்த எழுத்தாளர்கள், விஞ்ஞானிகள் பற்றிய செய்திகள் இதோ.. ஷேக்ஸ்பியர் தனது கிங் லியர் எனும் படைப்பை எழுதும்போது நோய்களுக்கு பயந்து தனிமையில் இருந்தார். அப்போது வெளியில் பிளேக் நோய் வேகமாக பரவி வந்தது. அப்பாதிப்பிலிருந்து தப்பிக்க நினைத்தார் ஷேக்ஸ்பியர். அப்போது அரசு பொது இடங்கள் அனைத்தையும் மூடியிருந்தது. இதனால் இவர் பங்குதாரராகவும், எழுத்தாளராகவும் இருந்த கிங் நாடக கம்பெனியை நடத்த முடியவில்லை. இக்காலகட்டத்தில் கிங் லியர், மேக்பத், ஆன்டனி அண்ட் கிளியோபாட்ரா ஆகிய படைப்புகளை எழுதி முடித்தார். ஐசக் நியூட்டன்  இவர் ஷேக்ஸ்பியருக்கு பின்னர் இதே போல தனியாக இருந்து அறிவியல் சாதனைகளை செய்தார். 1665ஆம்ஆண்டு இங்கிலாந்தில் வாழ்ந்த ஐசக் நியூட்டனுக்கு சோதனை பிளேக் வடிவில் வந்தது. அப்போது அவருக்கு இருபது வயது. கேம்பிரிட்ஜ் பல்கலையில் வகுப்புகள் நிறுத்தப்பட்டன. அங்கிருந்த

கறுப்பின எழுத்தாளர்களுக்கு கௌரவம் தேடித்தந்த பெண்மணி!

படம்
ozy தாளின் வெற்றுப்பக்கத்தை ஜெர்கின்ஸ் பார்த்து டெட்லைன் ஆச்சே என்று பதற்றம் கொண்டதில்லை. இருபத்தாறு வயது என்றாலும் வார்த்தைகள் தாளில் கொட்டுகின்றன. அத்தனையும் எளிய மனிதர்களுக்கான சொற்கள். அப்படியிருக்க கவலை என்ன? படைப்பு என்பது கதையோ, கட்டுரையோ, நாவலோ உழைப்பு ஒன்றுதான். ஜெர்கின்ஸூம் கட்டுரை சரியாக வரவேண்டுமென பசியோடு உணவை மறுத்து கணினியோடு போராடியவர்தான்.  திஸ் வில் பி மை அன்டூயிங்: லிவிங் அட் தி இன்டர்செக்ஷன் ஆஃப் பிளாக், ஃபீமேல் அண்ட் ஃபெமினிஸ்ட் இன் (வொய்ட் ) அமெரிக்கா என்ற இவரின் நூல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் ஏழாவது இடம் பிடித்து சாதித்த நூல். நான் என் எழுத்தின் வழியே விவாதங்களை உருவாக்க விரும்புகிறேன்.  பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ரஷ்யன், ஜப்பானிய மொழி இலக்கியங்களைக் கற்றவர் ஜெர்கின்ஸ். கிரியேட்டிவ் எழுத்துபற்றிய படிப்பை பெனிங்டன் கல்லூரியில் படித்தவருக்கு ஆறு மொழிகளை பேசத்தெரியும். வகுப்பில் ஒரே கறுப்பினப் பெண் மாணவி இவர்தான்.  தன் பதினான்கு வயதிலிருந்து நாவல்களை எழுதி வருகிறார் ஜெர்கின்ஸ். தெற்கு நியூ ஜெர்சியில் வாழ்ந்து வந்தவர், பிலடெல்பியாவுக