இடுகைகள்

வேலைவாய்ப்பு - ப்ரீலான்ஸ் வேலைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அதிகரிக்கும் ப்ரீலான்ஸர்கள்!

படம்
பகுதிநேர வேலைகள் போதும்! –- ச.அன்பரசு காலையில் அரக்க பரக்க எழுந்து அலாரத்தை நிறுத்திவிட்டு குளித்து முடித்து பறக்கும் ரயில் பிடித்து அலுவலகம் சென்று வேலைபார்த்து திரும்புவது பழைய கதை. இந்த திகுதிகு அவசரத்தை ஜென் இசட் இளசுகள் இம்மியளவும் விரும்பவில்லை. வாழ்க்கையை ரசனையாக அனுபவிக்க வேலையை பகுதிநேரமாக்கி கொண்டால் போதும் என்று ரிலாக்சாக வாழ்கின்றனர். இது அமெரிக்காவைப் பற்றிய செய்தி அல்ல; இந்தியாவில்   1.5 கோடிப்பேர்களாக ப்ரீலான்ஸ் பணியாளர்கள் அதிகரித்துள்ளனர். இது அமெரிக்காவை விட(5.3 கோடி) அதிகம் என்கிறது Kellyocg வேலைவாய்ப்பு நிறுவனத்தின் ஆய்வறிக்கை. பகுதிநேரப் பணியில் இளைஞர்கள் தினசரி டைம்டேபிள் போட்டு பல்வேறு வேலைகளை செய்வதோடு கணிசமான காசுடன் அனுபவங்களையும் சம்பாதித்து வருகின்றனர். இதில் தனியார் நிறுவனங்களுக்கு 20% செலவு குறைகிறது. இந்திய அரசு ஸ்வச் பாரத், டிஜிட்டல் இந்தியா, ஸ்மார்ட் சிட்டி திட்டங்களுக்கு பகுதிநேர ஊழியர்களையே நம்பிக்கையோடு நியமித்துள்ளது. “கடந்த மூன்று ஆண்டுகளாக இன்டர்நெட் ஸ்டார்ட்அப்கள் உருவானபின்பு பகுதிநேர பணியாளர்கள் அதிகரித்துள்ளனர்.