இடுகைகள்

தையல்கலை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தலைமுறைகளை காப்பாற்றும் கலை ஐடியா!- துணிக்கழிவுகளிலிருந்து கலைப்பொருட்கள் தயாரிக்கும் பெண்மணி!

படம்
  2017ஆம் ஆண்டு ஸ்ரீநிதி உமாநாதன் திருச்சியில் உள்ள பெல் நிறுவனத்திற்கு சுற்றுப்பயணமாக சென்றார். போகும் வழியில் மேல காலகண்டர் கோட்டை அருகே நிறைய கழிவுகள் கிடப்பதைப் பார்த்தார். அவற்றில் பெரும்பாலானவை துணிக்கழிவுகள்தான்.  அப்போது பட்டப்படிப்பு படித்துக்கொண்டிருந்த 23 வயது பெண்தான் அவர். அப்போதே முடிவு செய்துவிட்டார். இனி பேஷன் டிசைனராக மாறினாலும் கூட கழிவுகளை முடிந்தளவு அதிகரிக்காமல் பார்த்துக்கொள்ளவேண்டும் என முடிவு செய்துகொண்டார். இப்போதுவரை துணிகளை மறுசுழற்சி செய்வது பற்றியும், சூழலுக்கு ஆபத்தில்லாமல் வாழ்வதும் பற்றியும் பிரசாரம் செய்.து வருகிறார்.  இரண்டாவது ஆண்டு படிப்பின்போது, ரீடெய்லர்ஸ் என்ற நிறுவனத்தை தொடங்கினார். அதில் பயன்படுத்திய துணிவகைகளைப் பயன்படுத்தி பைகள், தலையணை உறைகள், ஸ்க்ரீன்கள், சிறு பைகள், கால் மிதியடிகள் என நிறைய பொருட்களை தயாரிக்கத் தொடங்கினார். மாற்றுத்திறனாளியான தனது சகோதரரிடமிருந்து, துணிகளை எப்படி கலைப்பொருளாக மாற்றவேண்டும் என்பதைக் கொஞ்சம் கொஞ்சமாக கற்றுக்கொண்டார். பிறகு இப்படி தயாரித்த பொருட்களை திருச்சியில் உள்ள என்எஸ்பி சாலையில் உள்ள கடைகளில் விற்பனைக்கு