இடுகைகள்

நத்தை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உண்மையா? உடான்ஸா? - விமான எரிபொருளாக சமையல் எண்ணெய்யை பயன்படுத்தலாம்!

படம்
  உண்மையா? உடான்ஸா? சுவாசிக்கும்போது, ஒரு நேரத்தில் நாசித்துவாரங்களில் இரண்டில் ஒன்று மட்டுமே வேலை செய்யும்! உண்மை. மூச்சை இழுப்பதும், வெளியே விடுவதையும் சரியாக கவனித்துப் பார்த்தால் இந்த வேறுபாட்டை நீங்கள் உணர முடியும். குறிப்பிட்ட மணிநேரங்களுக்கு ஒருமுறை இப்படி மூச்சுத்துளைகளில் காற்று உள்ளிழுக்கப்படுவது இடது, வலது என மாறும். இந்த மாற்றம் உடலில் தன்னியல்பாக நடைபெறுகிறது.  பேக்கேஜிங்கில் பயன்படும் பபுள் ரேப், சுவர்களில் ஒட்டவே தயாரிக்கப்பட்டது! உண்மை. இதனை உருவாக்கியவர்கள் பொறியாளர் அல் ஃபீல்டிங், மார்க் சாவென்னஸ் ஆகியோர்தான். இவர்கள் இதனை சுவர்களில் தாள் போல அலங்காரமாக ஒட்டலாம் என நினைத்தனர். 1957ஆம் ஆண்டு,  தாம் தயாரித்த பபுள்ரேப், பொருட்களை உடையாமல் கொண்டு செல்ல பயன்படும் என்பதை நடைமுறைரீதியாக உணர்ந்தனர். அதனால்தான், அதனை நாம் இன்றுவரை பயன்படுத்தி வருகிறோம்.  நத்தைகளுக்கு கூர்மையான பற்கள் உண்டு!  உண்மை. நத்தை இனங்களில் சிலவற்றுக்கு ரிப்பன் போன்ற நாக்கும், சிறு பற்களும் கொண்ட தாடையும் உண்டு. இதற்கு ராடுலா (Radula) என்று பெயர். உணவுப்பொருட்களை குறிப்பிட்ட அளவில் கத்தரித்து சாப்பிட இப

நத்தையின் உணர்கொம்புகள், கோல்ப் பந்துகளிலுள்ள பள்ளங்கள்! - உண்மையா? உடான்ஸா?

படம்
  நத்தையின் உணர்கொம்புகளே அதன் மூக்கு! உண்மை. நத்தையின் (Slug)  உணர்கொம்புகளை (Tentacles) மனிதர்களின் மூக்கு போல என்று கூறலாம். நத்தையின் உடலில் இரண்டு ஜோடி உணர்கொம்புகள் உள்ளன. முதல் ஜோடி உணர்கொம்புகள் தலையின் மையப்பகுதியில் அமைந்துள்ளன. இவை சூழலில் உள்ள ஒளி, ஒலியை உணர உதவுகின்றன. தலையின் கீழ்ப்பகுதியில் உள்ள  இரண்டாவது ஜோடி உணர்கொம்புகள், வேதிப்பொருட்களை அறியவும், மனிதர்களின் மூக்கைப் போல சுவாசிக்கவும் உதவுகின்றன.  கோல்ஃப் பந்துகளில் உள்ள பள்ளங்கள் அழகுக்கானவை! உண்மையல்ல. கோல்ஃப் பந்துகளில் அதன் வடிவத்தைப் பொறுத்து 300 முதல் 500 வரையிலான  பள்ளங்கள் உருவாக்கப்படுகின்றன. பள்ளங்களின் வடிவமைப்பு, மட்டையால் அடிக்கப்பட்டவுடன் பந்து செல்லும் தொலைவை அதிகரிக்க உதவுகிறது. தொடக்கத்தில் கோல்ஃப் பந்து, பள்ளங்கள் இல்லாமல் தான் உருவாக்கப்பட்டது. ஆனால், இப்பந்தை தொடர்ந்து பயன்படுத்தும்போது, அது செல்லும் தொலைவு குறைந்தது.எனவே, இதற்கான தீர்வாக காற்றில் அதிக உராய்வின்றி பயணிக்க ஏதுவாக பந்தில் பள்ளங்களை உருவாக்கினர்.  https://www.womansday.com/life/entertainment/a37170576/fun-facts/ https://www.thedodo.

கானரி தீவில் நத்தைகள் பற்றி ஆராய்ந்தவர்! - மேரி ஹார்னர் லைல்

படம்
மேரி ஹார்னர் லைல் ( Mary horner Lyell ) 1808 - 1873 இங்கிலாந்தின் லண்டன் நகரைச் சேர்ந்தவர். சங்குகளைப் பற்றி ஆராய்ந்து வந்தார். இவர் புவியியலாளரும் கூட. மேரியின் தந்தை, லியோனார்ட் ஹார்னர், புவியியல் பேராசிரியர். இவர், தனது ஆறு பிள்ளைகளும் சிறப்பாக கல்வி கற்க வேண்டும் என நினைத்தார். இதனால், மேரி உள்ளிட்ட அனைவருக்குமே எளிதாக கல்வி கற்கும் சூழ்நிலை கிடைத்தது.1832ஆம் ஆண்டு புகழ்பெற்ற புவியியலாளரான சார்லஸ் லைல் என்பவரைத் திருமணம் செய்துகொண்டார். கணவரின் அனைத்து ஆய்வுகளுக்கும் உதவியாளர் மேரி தான்.  1854ஆம் ஆண்டு மேரி, ஸ்பெயின் நாட்டின் கானரி தீவில் நத்தைகள் பற்றி செய்த ஆய்வு, முக்கியமானது. இதனை காலபகோஸ் தீவில் பறவைகள், ஆமைகள் பற்றி ஆய்வு செய்த விஞ்ஞானி சார்லஸ் டார்வினின் ஆய்வோடு ஒப்பிட்டனர். பிரெஞ்சு, ஜெர்மன், ஸ்வீடிஷ், ஸ்பானிஷ் மொழிகளைக் கற்று கணவர் சார்லஸின் பணியில் உதவினார். அறிவியல், இலக்கியம் என பல்வேறு விஷயங்களையும் தம்பதியினர் ஒருவருக்கொருவர் பகிர்ந்துகொண்டனர். தென் அமெரிக்காவில் உள்ள பனிப்பாறை புவியியல் (Glacial geology ) பற்றிய ஆய்வறிக்கையை கல்வியாளர் எலிசபெத் அகாஸ்சிஸ்சுடன் சேர்ந்த

சமையல் எண்ணெய்யை விமான எரிபொருளாக பயன்படுத்தலாம்!

படம்
  சுவாசிக்கும்போது, ஒரு நேரத்தில் நாசித்துவாரங்களில் இரண்டில் ஒன்று மட்டுமே வேலை செய்யும்! உண்மை. மூச்சை இழுப்பதும், வெளியே விடுவதையும் சரியாக கவனித்துப் பார்த்தால் இந்த வேறுபாட்டை நீங்கள் உணர முடியும். குறிப்பிட்ட மணிநேரங்களுக்கு ஒருமுறை இப்படி மூச்சுத்துளைகளில் காற்று உள்ளிழுக்கப்படுவது இடது, வலது என மாறும். இந்த மாற்றம் உடலில் தன்னியல்பாக நடைபெறுகிறது.  பேக்கேஜிங்கில் பயன்படும் பபுள் ரேப், சுவர்களில் ஒட்டவே தயாரிக்கப்பட்டது! உண்மை. இதனை உருவாக்கியவர்கள் பொறியாளர் அல் ஃபீல்டிங், மார்க் சாவென்னஸ் ஆகியோர்தான். இவர்கள் இதனை சுவர்களில் தாள் போல அலங்காரமாக ஒட்டலாம் என நினைத்தனர். 1957ஆம் ஆண்டு,  தாம் தயாரித்த பபுள்ரேப், பொருட்களை உடையாமல் கொண்டு செல்ல பயன்படும் என்பதை நடைமுறைரீதியாக உணர்ந்தனர். அதனால்தான், அதனை நாம் இன்றுவரை பயன்படுத்தி வருகிறோம்.  நத்தைகளுக்கு கூர்மையான பற்கள் உண்டு!  ரியல் உண்மை. நத்தை இனங்களில் சிலவற்றுக்கு ரிப்பன் போன்ற நாக்கும், சிறு பற்களும் கொண்ட தாடையும் உண்டு. இதற்கு ராடுலா (Radula) என்று பெயர். உணவுப்பொருட்களை குறிப்பிட்ட அளவில் கத்தரித்து சாப்பிட இப்பற்களின் அம