இடுகைகள்

லீகோ லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சூழலுக்கு இசைந்த விளையாட்டுப் பொருட்களை உற்பத்தி செய்வதில் தடுமாறும் லீகோ!

படம்
  லீகோ குழந்தைகளுக்கான விளையாட்டுப் பொருட்களை தயாரிக்கும் நிறுவனம் என்பதை அறிவீர்கள். இந்த நிறுவனம் தயாரிக்கும் பிளாஸ்டிக் பொருட்களுக்கான அடிப்படை ஆதாரம், கச்சா எண்ணெய்தான். ஆனால் சூழலியல் கட்டுப்பாடு, அதைப்பற்றிய அறிவு மக்களுக்கு அதிகரித்து வருவது நிறுவனத்திற்கு சங்கடமாகி வருகிறது.  எனவே லீகோ தனது உற்பத்தியை மாசுபாடு அதிகம் ஏற்படுத்தாத மறுசுழற்சி செய்யும் பொருட்களுக்கு மாற்றி வருகிறது. தற்போது அக்ரிலோனைட்ரில் பூட்டாடையின்  ஸ்டைரீன்  சுருக்கமாக ஏபிஎஸ் என்ற பொருளை பயன்படுத்தி வருகிறது. இதை மறுசுழற்சி செய்யலாம். உயிரியல் ரீதியாக மட்க கூடியது. ஆனால் அதற்கான காலம் அதிகம்.  தற்போது, லீகோ பிராண்டின் மதிப்பு ஏழு பில்லியன் டாலர்களாக உள்ளது. இந்த நிறுவனம் சூழலுக்கு உகந்த பொருளை கண்டுபிடித்து அதை உற்பத்திக்கு பயன்படுத்தினால் மட்டுமே வணிக வெற்றியை தக்க வைத்துக்கொள்ள முடியும், இரண்டு ஆண்டுகளுக்கு முன்னர் லீகோ நிறுவனம், ஆர்பெட் எனும் பிளாஸ்டிக்கை பற்றி பெருமையுடன் கூறியது. இதை பயன்படுத்தி மறுசுழற்சி செய்யும் பிளாஸ்டிக் பாட்டில்களை தயாரிக்கலாம் என்றது. ஆனால் இந்த வகை பிளாஸ்டிக்கும் கூட லீகோவிற்கு உத

சிறந்த கண்டுபிடிப்புகள் 2023!

படம்
  சிறந்த கண்டுபிடிப்புகள் 2023 ட்ரீ டேக்  காட்டுத்தீயால் அழியும் மரங்களை காப்பாற்றுவதற்கான முயற்சி. இதில், ட்ரீ டேக் என்பது ஏஐ, சென்சாரை அடிப்படையாக கொண்டு உருவாக்கப்படுகிறது. இதை மரத்தில் பதித்து வைக்க வேண்டும். ஒரு மரத்தின் அடிப்படையான தன்மைகள், நீரின் அளவு, ஒளிச்சேர்க்கை ஆகியவற்றைக் கணிக்கிறது. தகவல்களை சேமிக்கிறது. மரங்கள் பேசும் மொழியை ட்ரீடேக் மொழிபெயர்க்கிறது என்கிறார் ட்ரீடேக் நிறுவனத்தின் இயக்குநர் கிரகாம் ஹைன். உங்கள் வீட்டுத்தோட்டத்தில் உள்ள மரங்கள், செடிகளுக்கும் கூட இதை முயன்று பார்க்கலாம்.  பியானோ தரமான பியானோக்களைத் தயாரிக்கும் ரோலாண்ட் நிறுவனத்திற்கு வயது 50. எனவே, ஸ்பெஷலாக நான்கு பியானோக்களை தயாரித்து விற்பனைக்கு வைத்துள்ளனர். இதில் இசை ஏற்கெனவே பதிவாகியிருக்கும். 360 டிகிரியில் இசையைக் கேட்கலாம். இதை வைத்து மாணவர்களுக்கு இணையத்தில் பாடம் கூட எடுக்கலாம். வின்டேஜ் தன்மையில் கவனம் ஈர்க்கும் பியானோ. ஆர்க்  ப்ரௌசர்  இணையம் நிறைய மாறிவிட்டது. மாறாதது இணைய உலாவிகள்தான். அதாவது ப்ரௌசர்கள். அதை மாற்றவே ஆர்க் வந்துள்ளது. இதை ஏற்கெனவே டெக் வல்லுநர்கள் பயன்படுத்திவிட்டு ஆகா, ஓகோ