இடுகைகள்

உயிரி வேதியியல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காற்றிலுள்ள மீத்தேனைப் பயன்படுத்தி புரத உணவுகள்!

படம்
  எழில் சுப்பையன், ஸ்ட்ரிங் பயோ மீத்தேன் மூலம் உணவு தயாரிக்கலாம்! 2013ஆம் ஆண்டு எழில் சுப்பையன், அவரது கணவர் வினோத் குமார்  ஆகியோர் இணைந்து ஸ்ட்ரிங் பயோ என்ற நிறுவனத்தைத் தொடங்கினர். பெங்களூருவில் செயல்படும் இந்த நிறுவனம் மீத்தேன் வாயுவைப் பயன்படுத்தி, புரத உணவை உற்பத்தி செய்து வருகிறது. ஆசியாவிலேயே பதப்படுத்தும் முறையில் மீத்தேன் மூலம் புரதங்களை  உற்பத்தி செய்யும் முதல் ஸ்டார்ட்அப் நிறுவனம் ஸ்ட்ரிங் பயோ தான்.  ”எப்படி சர்க்கரையை ஈஸ்டாக மாற்றி மதுவை தயாரிக்கிறார்களோ அதை முறையைத் தான்  பின்பற்றுகிறோம். இதில் சற்றே மாறுபாடாக, நாங்கள் பயன்படுத்தும் பாக்டீரியா நுண்ணுயிரிகள் மீத்தேனை உண்டு அதனை புரதமாக மாற்றுகின்றன” என்றார் ஸ்ட்ரிங் பயோ துணை நிறுவனரான எழில் சுப்பையன். மீத்தேனை இயற்கை எரிவாயு, உணவுக்கழிவுகளிலிருந்து பெறுகின்றனர். மீத்தேனிலிருந்து உருவாக்கும் புரதத்தை, விலங்குகளுக்கான உணவாக மாற்றி விற்று வருகிறது ஸ்ட்ரிங் பயோ நிறுவனம்.  ”நாங்கள் குறைந்தளவு நீர், நிலம் ஆகியவற்றைப் பயன்படுத்தி விலங்குகளுக்கான உணவை உற்பத்தி செய்கிறோம். பிற தாவர, விலங்கு இறைச்சி வகைகள...