பாகிஸ்தானில் கல்வி கற்க போராடிய முஸ்லீம் எழுத்தாளரின் சுயசரிதை!
வார்த்தைகளில் ஒரு வாழ்க்கை இஸ்மத் சுக்தாய் மொழிபெயர்ப்பு சசிகலா பாபு எதிர் வெளியீடு பாகிஸ்தானில் பிறந்து வளர்ந்த எழுத்தாளர் இஸ்மத் சுக்தாய். அவரின் சுயசரிதைதான் வார்த்தைகளில் ஒரு வாழ்க்கையாக மாறியுள்ளது. இஸ்லாம் மதத்தை தழுவியவராக இருந்து கல்விக்காக பெருமுயற்சி செய்து படித்து பள்ளிகளில் தலைமை ஆசிரியையாக பணியாற்றி பிறகு எழுத்தாளராக மாறியவர் இஸ்மத் சுக்தாய். இஸ்மத்தின் குடும்பத்தில் மொத்தம் பத்து பிள்ளைகள். ஆறு ஆண்கள், நான்கு பெண்கள். அப்பா, ஆங்கிலேய அரசில் நீதிபதியாக இருந்தவர். இதனால், செல்வாக்காக வளர்ந்தவர். நூலில் முஸ்லீம் பெண்ணாக வளர்வது, கல்வி சார்ந்த முக்கியத்துவம் எப்படியுள்ளது, திருமணம், அதன் சடங்குகள், ஆண்களுக்கான சுதந்திரம், பெண்களுக்கான தடைகள், பெண்களை முடக்கும் மூடநம்பிக்கைகள், இந்துக்களின் தீட்டு, புராண பெருமைகள், போலியான புனித நடவடிக்கைகள் என அனைத்தையும் போட்டு உடைத்திருக்கிறார். இஸ்மத்தின் இயல்பே மனதில் பட்டதை பேசுவது என இருந்ததால், குடும்பம் உறவினர்கள், கதைகளை வாசித்தவர்கள், முற்போக்கு எழுத்தாளர்கள், பிற்போக்கான இஸ்லாமியர்கள், நாளித...