இடுகைகள்

நரசிம்மராவ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நரசிம்மராவ் இந்தியாவை நிறையவே மாற்றியுள்ளார்! பிரகாஷ் ஜா - திரைப்பட இயக்குநர்

படம்
  பிரகாஷ் ஜா  இந்தி சினிமா இயக்குநர்  பிரகாஷ் ஜா, ஓடிடி தளத்திற்காக ஆஷ்ரம் தொடரை எடுத்து வருகிறார்.  ஆஷ்ரம் தொடரின் மூன்றாவது பகுதியை எடுத்து வருகிறீர்கள். அந்த அனுபவம் எப்படி இருக்கிறது? நான் ஆஷ்ரம் தொடரை எழுதுவது தொடங்கி  அதனை படமாக்குவது, அதன் இறுதிகட்டப் பணிகள் வரை அனுபவித்துத் தான் செய்கிறேன். நான் எப்போதும் ஆஷ்ரம் தொடரின் மையக்கருத்து பற்றி மிகவும் ஆராய்ந்து கொண்டிருக்கவில்லை. அப்படி செய்தால், இத்தொடரை உருவாக்கியிருக்க முடியாது. அப்படியே அந்த சிந்தனையில் சிக்கிக் கொண்டிருப்பேன். ஆஷ்ரம் தொடர் வேடிக்கையான ஒன்று. இதில் வரும் பாபாவின் பக்தர்கள் கூடுவார்கள். அவரைச் சேர்ந்த குழுவினர் அதிகரிப்பார்கள். இந்த நேரத்தில் மெல்ல அவரின் வீழ்ச்சி நடைபெறுகிறது. அதுதான் மூன்றாம் பாகத்தின் மையம்.  கடந்த ஆண்டு போபாலில் நீங்கள் படப்பிடிப்பு நடத்தியபோது, பஜ்ரங்தள் அமைப்பினரால் தாக்கப்பட்டீர்கள். அந்த நிகழ்ச்சிக்குப் பிறகு நீங்கள் உங்கள் கதைகளை தணிக்கை செய்துதான் எடுக்கிறீர்களா? தணிக்கையெல்லாம் செய்யவில்லை. மேற்படி நீங்கள் சொன்ன தாக்குதல் நடந்தபிறகு படப்பிடிப்பை முடித்துக்கொண்டோம். என்னுடைய கதைகளை நான்

நரசிம்மராவின் நூற்றாண்டு விழா மறக்கப்பட்டுவிட்டதா?

படம்
  முன்னாள் பிரதமர் நரசிம்மராவ் நூற்றாண்டு பற்றி காங்கிரஸ் பெரிதாக கண்டுகொள்ளவில்லை.அவர்களுக்கு நரசிம்மராவ் பற்றி நினைக்கும்போது பாபர் மசூதி இடிப்பு நினைவுக்கு வந்திருக்கலாம். காங்கிரஸின் பின்னாளைய தோல்விகளுக்கும், பாஜகவின் எழுச்சிக்கும் பாபர் மசூதி அளவுக்கு வேறெந்த விஷயமும் உதவியிருக்காது என்பதே உண்மை. நரசிம்மராவை கொண்டாடும் விதமாக பிரதமர் நரேந்திர மோடி , ஆந்திர, தெலுங்கானா அரசுகள் பல்வேறு விஷயங்களை செய்து வருகின்றன.  இந்தியா அந்நிய செலவாணி பிரச்னையில் தவித்த போது 1991ஆம் ஆண்டு ஜூன் மாதம் நரசிம்மராவ் ஆட்சிக்கு வந்தார். இந்தியாவை கடன் பிரச்னையிலிருந்து மீட்க அவர் செய்த பொருளாதார சீர்திருத்தங்கள் இன்றுவரை நாட்டிற்கு உதவி வருகின்றன. தங்களிடமிருந்த  தங்கத்தை உலக வங்கியில் அடமானம் வைத்து 200 மில்லியன் டாலர்களை திரட்ட இந்தியா திணறி வந்தது. நரசிம்மராவ் 2004இல் காலமானபோது, நாட்டில் 140 பில்லியன் டாலர்கள் அந்நியசெலவாணி இருப்பில் இருந்தது. இதனை அவர் எளிதாக சாதித்து விடவில்லை. டாக்டர் மன்மோகனை நிதியமைச்சராக நியமிக்க பல்வேறு அழுத்தங்கள் கொடுக்கப்பட்டதாக கூறுவார்கள். மன்மோகனை நிதியமைச்சராக நியமித்த

1991 பொருளாதார சீர்திருத்தங்களுக்கு வயது 30!

படம்
                  1991 சீர்திருத்தங்களுக்கு வயது 30 நரசிம்மராவ் தலைமையிலான ஆட்சியில் டாக்டர் மன்மோகன் நிதியமைச்சராக இருந்து கொண்டு வந்த தாராளமயமாக்கள் கொள்கைகள் செயல்பாட்டுக்கு வந்து நடப்பு ஆண்டோடு 30 ஆண்டுகள் ஆகின்றன . 3.5 சதவீத பொருளாதார வளர்ச்சியில் தடுமாறிய இந்தியா சீர்திருத்தங்களின் விளைவாக 6.5 சதவீத வளர்ச்சியை இருபத்தைந்து ஆண்டுகளில் பெற்றது மகத்தான சாதனை . உடனே நாம் சீனாவுடன் நம்மை இணைத்துப் பார்க்க கூடாது . அங்கு ஒரு கட்சி ஆட்சிமுறையோடு அரசியல் கொள்கையும் வலுவாக இருந்ததால் பொருளாதாரத்தில் இந்தியா எட்ட முடியாத உயரத்திற்கு சென்றுவிட்டார்கள் . உள்நாட்டிற்கான வணிகத்திலும் நிலையான இடத்தை பிடித்து பன்னாட்டு நிறுவனங்களுக்கு சவால் விடும்படி வளர்ந்துவிட்டார்கள் .    இந்திய முப்பது ஆண்டுகளுக்கு முன்னர் இருந்ததை விட ஐந்து மடங்கு பொருளாதார வளர்ச்சியை எட்டியுள்ளது . ஆனால் வறுமை ஒழிப்பில் பெரிதாக சாதிக்க முடியவில்லை . நடுத்தர வர்க்கத்திற்கும் கீழ் உள்ள வர்க்கத்தினரை பெரிதாக மேலே கொண்டு வர இயலவில்லை . ஆனாலும் சந்தையை விரிவாக்கியதில் இந்தியா முக்கியமான சாதனையை செய்துள்ளது

தேர்தலின் கதை 2 - தாமரை மலர உதவிய கை!

படம்
Telegraph India தேர்தலின் கதை 2 பதினேழாவது மக்களவைத் தேர்தல் வந்துவிட்டது. யார் ஆட்சிக்கு வருவார்கள்? மோடியா, ராகுலா என  விவாதங்கள் அனல் பறக்கின்றன. இதற்கு முன்னர் தேர்தலின் கதையில் மக்களவைத் தேர்தல் குறித்த வெற்றி, தோல்வி விவரங்களைப் பார்த்தோம். அதன் தொடர்ச்சி இதோ... 1989 பஞ்சாபில் தீவிரவாதத்தைத் தடுக்கும் முயற்சி, இலங்கையில் தமிழீழ விடுதலைப்புலிகள் விவகாரத்தை ராஜீவ் கையாண்ட விஷயங்கள் இத்தேர்தலின் போது பேசப்பட்டன. சோசலிஸ்டுகள் இம்முறையும் ஜனதா தள் கட்சியுடன் கூட்டணி அமைத்தனர். ஆனால் 143 சீட்டுகளை மட்டுமே பெற்றனர். விபி சிங்கின் தேசிய முன்னணி சிறுபான்மை அரசாக ஆட்சிக்கட்டிலில் ஏறியது. இடதுசாரிகளும் பாஜகவும் இந்த அரசுக்கு உதவியாக இருந்தன. ஆனால் ஓராண்டில் இந்த ஆட்சி கவிழ, சந்திரசேகர் காங்கிரஸ் கட்சியின் உதவியுடன் ஆட்சி அமைத்தார். 1991 இத்தேர்தலிலும் காங்கிரஸ் தன் பெரும்பான்மையை விட்டு கொடுத்துவிட்டது. இதனால் சிறுபான்மை அரசான காங்கிரஸ், நரசிம்மராவை ஆட்சித்தலைவராக கொண்டு ஆட்சி செய்தது. ஏறத்தாழ ஐந்து ஆண்டுகள் பெரும்பான்மை பலமின்றி சமாளித்தே ஆட்சி செய்தது சிரிக்காத