இடுகைகள்

மார்வெல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வாங்கினா ஏமாந்துருவீங்க- மயிலாப்பூர் டைம்ஸ்

படம்
மயிலாப்பூர் டைம்ஸ் எப்படியும் ஏமாத்துவோம்... அண்மையில் அலுவலகம் அருகே உள்ள அரசு நடத்தும் காமதேனு கடைக்கு சென்றேன். சுற்றுமுற்றும் உள்ள ஜியோ மார்ட், ஸ்பென்சர், ஷோபிகா, நீல்கிரிஸ் என எல்லா கடைகளையும் விட இங்கு கொஞ்சம் பொருட்களின் விலையைக் குறைத்துக் கொடுக்கின்றனர். அதாவது ஆஃபர் அப்புறம் வந்து வாங்கிக்கோங்க என்று சொல்லாமலேயே பில்லிலேயே விலையைக் குறைத்துக் கொடுக்கிறார்கள்.  அங்கு எப்போதும் போல போகும்போது செய்த தவறு, முத்ரா என்ற பிராண்டை வாங்கியது. அப்போது அம்பிகா பருப்பு பொடி தீர்ந்து போயிருந்தது. அதனை இப்போது பெயர் கூட மாற்றிவிட்டார்கள். அம்பிகா நெய் பருப்புப்பொடி. இதுதான் பருப்பு பொடிகளில் உருப்படியானது. நானும் சக்தி, ஆச்சி, 777 என நிறைய பருப்பு பொடிகளை வாங்கிப் பார்த்து வயிறு பிரச்னையானதுதான் மிச்சம். முத்ரா பிராண்டு இந்த பிரச்னைகளை செய்யவே இல்லை. 42க்கு ஒரு ரூபாய் குறைக்காமல் வாங்கினேன்.  இரண்டு வாரம் கழித்து சாப்பிட எடுத்தேன். அப்போதும் கூட அம்பிகா பருப்பு பொடி தீர்ந்துவிட்டதால்தான் அந்த சூழ்நிலை வந்தது. எடுத்து சோற்றில் போட்டு, இதயம் நல்லெண்ணெய் ஊற்றி பிசைந்தால் எந்த ருசியும் இல்லை.

மார்வெல் மகத்தான மனிதர் ஸ்டான் லீ பிறந்த தினம் இன்று!

படம்
giphy ஸ்டான் லீ பிறந்த தினம் இன்று.. மார்வெல் யுனிவர்ஸின் தலைவர். ஃபென்டாஸ்டிக் ஃபோர், எக்ஸ்மேன், அமேசிங் ஸ்பைடர்மேன் உள்ளிட்ட கதாபாத்திரங்களை வடிவமைத்தவர். இன்றும் மார்வெல் நிறுவனங்களின் அட்டகாசமான பொழுதுபோக்கு கதாபாத்திரங்களின் அடிப்படையை உருவாக்கியவர் ஸ்டான் லீதான். திரைப்படங்களாக வெளிவந்தபோது அதில் சிறிய காட்சிகளில் நடிப்பது இவரின் வழக்கம். 1922ஆம்ஆண்டு டிசம்பர் 28ஆம் தேதி பிறந்தவர் ஸ்டான் லீ. இவர் வேலை செய்த காமிக்ஸ் புக் நிறுவனம்தான் பின்னாளில் மார்வெல் காமிக்ஸாக மாறியது. ஓவியர் ஜேம்ஸ் கிர்பியுடன் இவர் இணைந்து டாக்டர் ஸ்ட்ரேஞ்ச், எக்ஸ்மேன், ஃபென்டாஸ்டிக் ஃபோர் உள்ளிட்ட எண்ணற்ற கதாபாத்திரங்களை உருவாக்கினார். அமெரிக்காவின் நியூயார்க் நகரில் செலியா, ஜேக் லெய்பர் தம்பதிக்கு மகனாக பிறந்தார். அவர் பிறந்த சமயம், உலகமே போர் பிரச்னையால் பொருளாதார மந்த நிலையில் தடுமாறியது. வறுமையில் இவரது குடும்பம் திகைத்து நின்றது. ஸ்டான் லீயின் முழுப்பெயர் ஸ்டான்லி மார்ட்டின் லெய்பர். இப்பெயரை முழுதாக சொன்னாலே மூச்சு வாங்கும் என்பதை விரைவில் உணர்ந்து, ஸ்டான் லீ என்று பெயர் மாற்றிக்கொ