இடுகைகள்

நம்பிக்கை முயற்சி! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தானிய வங்கி அனாஜ்!

படம்
பசிதீர்க்கும் அனாஜ் வங்கி! உ.பியின் அலகாபாத் மாவட்டத்திலுள்ள கோரான், சங்கஹார் கிராமங்களிலுள்ள பழங்குடி மக்கள் ஆண்டின் பெரும்பாலான நாட்களில் சாப்பிட உணவின்றி பட்டினி கிடப்பது வாடிக்கை. இன்று அனாஜ் தானிய வங்கி, அவர்களுக்கு பசிபோக்கி பட்டினி அவலத்தை நீக்கியுள்ளது. ஜி.பி பன்ட் சமூக அறிவியல் கழகத்தின் பேராசிரியரான சுனித்சிங் என்பவரின் ஐடியாவை பிரகதி வாகினி எனும் சுய உதவிக்குழு 20 பழங்குடி கிராமங்களில் செயல்படுத்தி வெற்றி கண்டுள்ளது. 300 கி.கி கொள்ளளவுள்ள இரும்பு டிரம்மில் கிராம மக்கள் தம் இருப்பிலுள்ள தானியத்தை குறிப்பிட்டளவு டிரம்மில் கொட்டிவைக்க வேண்டும். தேவைப்படுபவர்கள் தானியத்தை எடுத்து பயன்படுத்திக்கொண்டு திரும்ப தானியத்தை டிரம்மில் நிரப்பவேண்டும். இதன் விளைவாக கிராமங்களிலுள்ள கொல், முசாஹர் பழங்குடி மக்களின் பட்டினி அவலம் ஒழிந்திருப்பதோடு 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் இத்திட்டங்களில் பயனடைந்துள்ளனர். “அனாஜ் வங்கி உறுப்பினர்கள் ஒரு கி.கி அரிசியை பிறருக்கு தானமளிக்கலாம். மேலும் கடனாக பெறும் ஐந்து கிலோ அரிசியை பதினைந்து நாட்களுக்குள் திருப்பித் தந்தால் போதும்.”