இடுகைகள்

மார்க் வால்பெர்க் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சோதா பயல்கள் ஹீரோ ஆகும் கதை - தி அதர் கைஸ்!

படம்
தி அதர் கைஸ் இயக்கம் - ஆடம் மேக்கே ஒளிப்பதிவு - ஆலிவர் வுட் இசை - ஜான் பிரியன் சாகச வீர ர்களாக சிலர் ஆபீசில் இருப்பார்கள். சிலர் வாய்ப்பே இன்றி டெஸ்கில் சிஸ்டன் தட்டிக்கொண்டு இருப்பார்கள். இந்த இரு பிரிவுக்கும் இடையே சண்டை வந்தால் என்னாகும்? ஆலன்,டெடி என்ற இருவருமே சொந்த வாழ்க்கையில் சில சிக்கல்களுக்கு உள்ளாகி டெஸ்கில் டாக்குமெண்டுகளை தட்டி வருகின்றனர். இதனால் சக ஆபீஸ் வாசிகள் கடுமையாக கிண்டல் செய்கின்றனர். இதனால் எரிமலை ஆகும் டெரி, ஆலனை தன் சகாவாக இணைத்துக்கொண்டு முதலீடு தொடர்பான வழக்கு ஒன்றை துப்பறிவு செய்ய இறங்குகிறார். இதில் நடக்கும் காமெடி களேபரங்கள்தான் கதை. வில் ஃபெரல் படத்தின் நாயகன். கிளாமரான மனைவியை வைத்துக்கொண்டு தன் நண்பன் அவளோடு நட்புகொள்வதை தடுப்பது, முன்னாள் காதலியின் கோபத்தை சமாளிப்பது, திடீரென கிளம்பும் அசாதாரண கோபம், கல்லூரி வாழ்க்கையில் மாணிக் பாட்சாவாக பெண்களை எப்படி கையாண்டார், தொழில் செய்தார் என சொல்லும் போர்ஷன்கள் என சிரிப்பை வாரி இறைக்கிறார். மார்க வால்பர்க், இவருக்கு சரியான ஜோடி. நிறைய இடங்களில் கோப ப்பட்டு அதனால் துறைரீதியான நடவடி

குற்றத்தை துணிந்துசெய்! - டூ கன்ஸ் சொல்லும் பாடம் இது!

படம்
சினிமா விமர்சனம் மார்க் வால்பெர்க் ஸ்பெஷல்! டூ கன்ஸ்!( 2013) இயக்கம் பால்டாஸ்கார் கோர்முகார் திரைக்கதை - பிளாக் மாஸ்டர்ஸ் இசை கிளிண்டன் சார்டர் ஒளிப்பதிவு - ஆலிவர் வுட் ராபர் பாபி பீன்ஸ், டிஇஏ துறை அதிகாரி. அவர் ஸ்டிக்மன் என்பவருடன் சேர்ந்து கொள்ளை, வழிப்பறி செய்து வருகிறார். இவர் போலீஸ் என்பது ஸ்டிக்மனுக்கு தெரியாது. பாபியின் நோக்கம், மெக்சிகோவைச் சேர்ந்த பாபி கிரிகோவை போதைப்பொருள் சகிதமாக போலீசில் சிக்க வைக்கவேண்டும் என்பதுதான் பிளான். அதற்கான முயற்சி சொதப்புகிறது. இதனால், வங்கியிலிருந்த பணத்தை திருடி அந்தப்பழியை கிரிகோ மீது போடுகிறார்கள். அப்போது ஸ்டிக்மனுக்கு பாபி போலீஸ் என்பது தெரிய வருகிறது. உடனே அவரைக் காயப்படுத்திவிட்டு பணத்தை திருடிச்செல்கிறார். அப்போதுதான் ஒரு ட்விஸ்ட். ஸ்டிக்மனும் சீல் படை அதிகாரி என்பது பாபிக்கு தெரியவருகிறது. அவருடைய மேலதிகாரி சொல்படி பணத்தை வங்கியில் கொள்ளையடித்து சில முயற்சிகளுக்கு பயன்படுத்த நினைக்கிறார்கள். இதனால் கிரிகோ, சிஐஏ ஆகியோரினால் துரத்தப்படுகிறார்கள். பாபி, ஸ்டிக்மனை மன்னித்தாரா, இருவரும் ஒன்றாகி எதி

குற்றம் செய்ய கனவு காணுங்கள்! - வலி இல்லைன்னா லைஃப் இல்லை!

படம்
சினிமா விமர்சனம் பெய்ன் அண்ட் கெய்ன் (2013) இயக்கம், தயாரிப்பு - மைக்கேல் பே திரைக்கதை - கிரிஸ்டோபர் மார்க்கஸ், ஸ்டீபன் மெக்ப்ளை ஒளிப்பதிவு -பென் செரிசின் இசை - ஸ்டீவ் ஜப்லான்ஸ்கி  பீட்டே கோலின்ஸ் எழுதிய பெய்ன் அண்ட் கெய்ன் என்ற கட்டுரை நூலைத் தழுவிய படம்.  சன் ஜிம்மில் அதன் உறுப்பினர் எண்ணிக்கையை  300 சதவீதம் உயர்த்துவதாக சூடம் அணைத்து சத்தியம் செய்து வேலையில் சேருகிறார் லூகோ. அங்குள்ள ஜிம் ட்ரெய்னருக்கு பண ஆசை காட்டி தனது க்ரைம் வேலைகளுக்கு அடியாளாக மாற்றுகிறார். லூகோவிற்கு டக்கென பணக்காரனாக வேண்டும். பெண்களுடன் உல்லாசமாக வாழ வேண்டும் என்பதுதான் கனவு. அதற்காக தனது ஜிம்மிற்கு வரும் பணக்காரர் ஒருவரை கடத்துகிறார். அமெச்சூர் தனமாக செய்யும் கடத்தல் பணியில் அவரது சொத்துக்களை ஜிம் ஓனரும் லூகோவும் ஆட்டையப்போடுகிறார்கள். ஆனால் ஒரே ஒரு தப்பைச் செய்கிறார்கள். அவரை உயிருடன் விடுகிறார்கள். அதன் விளைவாக லூகோ மற்றும் அவரது இரு நண்பர்களுக்கு நடக்கும் பிரச்னைகள்தான் படம். மார்க் வால்பெர்க் படம் நெடுக்க பின்னியிருக்கிறார். இவருக்கு லொள்ளு மனோகர், யோகிபாபு போல டிவைன் ஜான்ச