இடுகைகள்

124ஏ ஐபிசி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

தேசதுரோக சட்டம் நீக்கப்பட வேண்டுமா, மாற்றப்பட வேண்டுமா? 124 A IPC

படம்
  ஆங்கிலேயர் காலத்தில் அவர்களின் ஆட்சிக்கு எதிராக பேசுபவர்களை ஒடுக்குவதற்காக தேச துரோக சட்டம் கொண்டுவரப்பட்டது. இந்த சட்டத்தின் கீழ் நாடு முழுக்க ஆங்கிலேயருக்கு எதிராக பேசிய, செயல்பட்ட, கலை வடிவங்களை உருவாக்கியவர்கள் சிறையில் பாரபட்சமின்றி அடைக்கப்பட்டனர். சித்திரவதை செய்யப்பட்டனர்.  124ஏ ஐபிசி என்ற சட்டம்தான் இன்று இந்தியாவில் அதிகமாக விவாதிக்கப்படும் சட்டம். இந்தியா, பாக். கிரிக்கெட் போட்டி, கார்ட்டூன், சமூக வலைத்தள பதிவுகள், அனுமன் ஜெயந்திக்கான கூச்சல்கள் என எவற்றையும் தேச துரோக சட்டம் விட்டுவைக்கவில்லை. அதைப்பற்றிய தகவல்களைப் பார்ப்போம்.  தேசதுரோகம் என்றால் என்ன? அரசுக்கு எதிரான பேச்சு, செயல்பாடு மற்றும் மக்களை அரசுக்கு எதிராக கிளர்ச்சிக்கு தூண்டுதல் என்பதை தேசதுரோகம் என ஆக்ஸ்ஃபோர்டு அகராதி கூறுகிறது.  வெறுப்பு, கண்டனம், விருப்பமின்மை ஆகியவற்றை வார்த்தை, செயல்பாடு மற்றும வேறெந்த வடிவத்தில் வெளிப்படுத்தினாலும் அது தேச துரோகம் என இந்திய சட்டம் 124 ஏ கூறுகிறது.  வன்முறை, பொது அமைதிக்கு குந்தகம் விளைவிப்பது தேச துரோகத்தில் உள்ளடங்கியது. அரசை விமர்சிப்பது இதில் சேராது என 1962ஆம் ஆண்டு ஐ