இந்திராகாந்தி சொன்னவை....
இந்திராகாந்தி சொன்னவை.... 1.சுதந்திரமடைந்த நாட்டிற்கு ஜவஹர்லால் நேரு பதினேழு ஆண்டுகள் பிரதமராக இருந்தார். அப்போது நாட்டின் ஒற்றுமை, பன்மைத் தன்மையிலான மதம், இனக்குழு, மொழி ஆகியவற்றோடு ஜனநாயகம் அப்போதுதான் பிறந்து அதன் வேரும் வளர்ந்து வந்தது. 2.இந்தியா, ஒடுக்கப்பட்ட மக்களின் விடுதலைக்காக எப்போதும் குரல் கொடுத்து வந்திருக்கிறது. உலகம் முழுக்க உள்ள பல்வேறு பாதிக்கப்பட்ட மக்கள் பிரிவினருக்கு நம்பிக்கையும், தைரியத்தையும் அளித்து வந்துள்ளது. 3.மக்கள் மீது வரம்பற்ற நம்பிக்கை கொண்டுள்ள பாரம்பரியத்தை மகாத்மா காந்தி மற்றும் என்னுடைய தந்தை அடையாளம் காட்டியுள்ளனர். அந்த வழியில், இந்திய மக்கள் எனக்கு வலிமை, நம்பிக்கையைத் தருகிறார்கள். 4.நம் முன் உள்ள சவால்களை நேரடியாக எதிர்கொள்வோம். நாம் செய்த தவறுகளில் இருந்து பாடங்களைக் கற்றுக்கொண்டு சிக்கல்களைத் தீர்ப்போம். 5.வேளாண்மை துறையில் அதிக உற்பத்தி மட்டுமே நமது நாட்டின் உணவு பிரச்னையைத் தீர்க்க முடியும். 6. கண்டுபிடிப்பு, மேம்பாடு, சூழலுக்கு பொருத்தம், பாதுகாப்பு ஆகியவற்றை அடிப்படையாக கொண்டே நமது நாட்டின் வளர்ச்சி அமையும். 7.அடிப்படை தொ...