மக்களை விலைக்கு விற்கும் பச்சோந்தி அரசியல்வாதிகள்













பசுமைக்கட்சி, அணு ஆயுதங்களை, ராணுவ நடவடிக்கைகளை, போரை எதிர்க்கிறது. ஆனால் கூட்டாட்சி முறையில் பல்வேறு சமரசங்களை செய்ய வேண்டியிருக்கிறது. பாசிச ஆட்சிக்கு எதிராக சமரசமே செய்யமுடியாது. முழுக்க போராடி வெல்லவேண்டும் என்று கூறுவது முன்னோர் வாக்கு. ஆனால் ஆட்சி அமைத்து நிர்வாகத்தில் பங்கேற்ற பசுமைக்கட்சியினர், பல்வேறு நாடுகளில் சூழல் மீதான கவனத்தைக் கொண்டு வந்தாலும் பெரும்பான்மை பலமில்லாத நிலையில் அடிப்படை கருத்துகளை முழுக்க செயல்பாட்டிற்கு கொண்டுவரமுடியவில்லை.




பசுமைக்கட்சியினருக்கு மாற்றம் என்பது எளிதாக நடைபெறக்கூடியது அல்ல, எளிதாகவும் நிறைவேறாது என்று தெரிந்திருக்கிறது. மாறுதலுக்கு காலமும் குறைந்துகொண்டிருக்கிறது. குறிப்பிட்ட காலத்தில் செயல்ளை மறுபரிசீலனை செய்து மாற்றிக்கொள்ளாவிட்டால் எதையும் மாற்றிக்கொள்ளமுடியாது என்ற நிலை கூட வரலாம்.




வன்முறையைப் பயன்படுத்தி, லஞ்சம் கொடுத்து எதிர்பார்த்த மாற்றங்களை கொண்டு வருவது அசாத்தியம். அதை நிலைக்கும் என்று கூட கூறமுடியாது. கட்சி தொடங்கி, கொள்கைகளை பிரசாரம் செய்து மக்களை ஈர்த்து அரசியல் அதிகாரத்தைப் பெற்று தேர்தலில் வென்று மக்களின் பிரதிநிதிகளாகி கொள்கைகளை அமல்படுத்துவதை பசுமைக்கட்சியினர் செய்து வருகிறார்கள். இதில் பின்னடைவுகளும் உள்ளது. வெற்றிகளும் உள்ளது. இதில் விதிவிலக்கான தன்னுடைய லட்சியத்தையே மறந்துபோன அரசியல்வாதிகளும் உண்டு. அவர்களில் ஒருவர், பீட்டே காரட். 



இவர் அணு ஆயுதத்திற்கு எதிராக பாடல்களை பாடி மக்களை ஈர்த்தவர். பிறகு, அணுஆயுதங்களுக்கு எதிராக கட்சி ஒன்றைத் தொடங்கினார். அரசியலில் இறங்கினார். வென்றவர், தொழிலாளர் கட்சி அமைத்த அரசில் கேபினட் அமைச்சரானார். அதுவரை தான் வந்த பாதையை மறந்தே போனார். சூழல் அமைச்சரானவர், யுரேனிய சுரங்கத்தை அகழ்ந்தெடுத்த அனுமதி வழங்கினார். இத்தனைக்கும் அந்த சுரங்கத்தால் ஏராளமான மாசுபடுத்தல், அணுஆயுத தயாரிப்பு உள்ளது என முந்தைய ஆண்டுகளில் எதிர்த்து வந்தவர், பீட்டே காரட்தான்.




முன்னர் இருந்தவர் போராளி. அடுத்து மாறிய உருவம் அரசியல்வாதி. எனவே, பீட்டே செய்ததில் பெரிய ஆச்சரியமில்லை. அவரைப் போலவே நிறைய அரசியல்கட்சிகள் சடாரென தங்களுடைய செயல்பாடுகளை போருக்கு ஆதரவாக, அணு ஆயுதங்களுக்கு சார்பாக மாற்றிக்கொண்டதுண்டு. சூழல் சார்ந்த மாற்றங்களை மக்களை திசைதிருப்பும் தந்திரங்களில் ஒன்றாகவே அரசியல்வாதிகள், அரசும் கையாள்கிறது. பெரும்பாலும் இடதுசாரிகள் சூழல் சார்ந்த அரசியலை, கவனத்தை உருவாக்குகிறார்கள். ஆனால் அரசியலின் அதிகார வேட்கையில் அவர்கள் புறக்கணிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்டு போகின்றனர்.




கல்வியாக இடதுசாரி தத்துவம் கற்பது, அதை நடைமுறைப்படுத்தும்போது ஏற்படும் இடர்ப்பாடுகளை தீர்க்க உதவுகிறது. கற்பதும், செயல்படுத்துவதும் தன்னகத்தே சில வேறுபாடுகளைக் கொண்டுள்ளது உண்மை. ஆனால், முற்றிலும் வேறானது அல்ல என்பதை மனதில் கொள்ளவேண்டும். ஒருவரின் வாழ்க்கைமுறை மாறுவது மாசுபாட்டை முற்றிலும் குறைக்காது. அவர் பின்பற்றும் அரசியல் மாறவேண்டும். பிளாஸ்டிக் தயாரிப்பை குறைக்காமல், அதை பயன்படுத்துவதை தவிர்க்க மக்களைக் கேட்டுக்கொள்வது அதன் செயல்பாட்டிலேயே முரண்பாட்டைக் கொண்டுள்ளது அல்லவா? கட்டற்ற லாபம், இயற்கை வளச்சுரண்டல் இரண்டையும் இருகையில் வைத்துக்கொண்டு சமமாக பார்க்க முடியாது.




பழங்குடிகளை மிரட்டி கொலை செய்து நிலங்களை பெருநிறுவனங்கள் பிடுங்கிக்கொண்டு இயற்கை வளங்களை சுரண்டுகின்றன. இதை உலகின் கண்களிலிருந்து மறைக்க கல்வி, மருத்துவம் சார்ந்து உதவி என மாய வித்தைகளை விளம்பரம் செய்கிறார்கள். இயற்கைச் சூழலை காப்பதில் சமூக நீதியும், மனித உரிமை மீறல்களும் இணைந்தே உள்ளன. பெரு நாட்டில் மழைக்காடுகளை பாதுகாக்க முயன்ற பழங்குடிகள் வெற்றி பெற்றனர். அவர்களைக் கொன்ற அரச பயங்கரவாதிகள் பற்றிய செய்த செய்தி உலகம் முழுக்க சென்றது. எனவே, இங்கிலாந்தில் பெரு நாட்டு தூதரகத்தின் முன்னர் மக்கள் திரண்டு போராடினர். பத்திரிகையாளர்கள், வலைப்பூ எழுதுபவர்கள் அனைவருமே இணையத்தில் பழங்குடிகள் கொல்லப்பட்டது பற்றிய செய்திக் கட்டுரைகளை எழுதினர்.




மழைக்காடுகள் அழிவது காலநிலை மாற்றத்தை தீவிரப்படுத்தும். இப்படி பெறப்படும் கரிம எரிபொருட்கள் எரிக்கப்படுவது, பூமியை அதிகளவு வெப்பத்தில் தள்ளும். சூழலைக் காக்க குப்பைகளை அள்ளுவதை புகைப்படம் எடுத்து சமூக வலைத்தளத்தில் பதிவிடுவது தீர்வாகாது. கரிம எரிபொருட்களை அகழ்ந்தெடுப்பதை முற்றாக நிறுத்த வேண்டும். உள்ளுர் வளங்களை, அப்பகுதி சார்ந்த மக்களே சேதப்படுத்தப்படாமல் இருக்க காக்க முயற்சிக்க வேண்டும். பெரு பழங்குடி மக்கள் அரச வன்முறைக்கு பயப்படாமல் சிறப்பாக செயல்பட்டு தங்கள் செயல்பாட்டை உலகிற்கு வெளிக்கொண்டு வந்தனர். இந்தப் போராட்டத்தை கனடா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, லத்தீன் அமெரிக்கா சார்ந்த சூழல் போராட்டக்காரர்கள் ஆதரித்தனர். அதன் முக்கியம் பற்றி மக்களுக்கு பிரசாரம் செய்தனர்.


Peter Robert Garrett AM (born 16 April 1953) is an Australian musician, environmentalist, activist and former politician. In 1973, Garrett became the lead singer of the Australian rock band Midnight Oil. As a performer he is known for his signature bald head, his eccentric dance style, and ... Wikipedia







கருத்துகள்