போரில் அடிபட்டு வீழ்ந்து பத்தாயிரம் ஆண்டுகளுக்கு பிறகு மீண்டெழும் மாவீரன்!
வாரியர் ஃபிரம் ஸ்கை
சீனமொழித் திரைப்படம்
ஐக்யூயி ஆப்
பனி சூழ்ந்த பகுதி. அங்கு ஒருவர் தூண்டில் போட்டுக்கொண்டு அமர்ந்திருக்கிறார். அங்கிருந்து வீரன் ஒருவன் வெளியே வருகிறான். அவனுக்கு தான் யார், தன் பெயர் என ஏதும் நினைவில் இல்லை. அதை அறிய முயல்கிறான். அந்த முயற்சியில் தீய சக்தியை எதிர்கொண்டு வெல்கிறான். இதுதான் படத்தின் கதை.
சொர்க்கத்தில் போரிட்ட வீரன், எதிர்பாராதவிதமாக அடிபட்டு கீழே விழுந்துவிடுகிறான். ஏறத்தாழ பத்தாயிரம் ஆண்டுகள் கழித்து விழிக்கிறான். அவனது சக்தி, பூட்டப்பட்டு உள்ளது. பயன்படுத்திய ஆயுதங்கள் காணவில்லை. தான் யார் என்பதைக் கண்டுபிடிக்க முயல்கிறான்.
படத்தின் தொடக்கத்தில் துறவி ஒருவருடன் சண்டை போடுகிறான். அவர், அவனின் நான்கு பிறவிகளை தனது சக்தி மூலம் தெரிந்துகொண்டு விடைபெற்று போய்விடுகிறார். போகும்போது, அவனை பூமிக்கு தள்ளிவிட்டு செல்கிறார். நேரே அவன் குளம் ஒன்றில் விழுகிறான். அங்கு சூ நாட்டு இளவரசி குளித்துக்கொண்டிருக்கிறாள். பிறகு என்ன, அவனைப் பிடித்து கட்டிவைத்து உதைக்கிறார்கள். ஆனால் சென் சான் எனும் அவனுக்கு தலையும் புரியவில்லை வாலும் புரியவில்லை. தான் எங்கு எந்த காலத்தில் இருக்கிறோம் என்றே அவனுக்கு தெரியவில்லை.
இளவரசிக்கு நாயகனை கட்டிவைத்து சித்திரவதை செய்ய ஆசையிருக்கிறது. எனவே, அவள் கையைக் கட்டி குதிரையில் பிணைத்து வேகமாக செல்கிறான். அவன் குதிரையோடு வேகமாக ஓடும் நிலை. இந்த நிலையில் கூலிக்கொலைகாரர்கள் இளவரசியைத் தாக்குகிறார்கள். அப்போது, ஆன்ம ஆற்றல் விழித்தெழுந்த நாயகன் தேவ வில்லை எடுத்து அம்பு தொடுத்து எதிரிகளை விரட்டுகிறான். பிறகு அந்த சக்தியின் பின்விளைவால் மயங்கி விழுகிறான்.
இளவரசியின் தோழியை சூ சாட்டின் பிரதமர் தத்தெடுத்து வளர்க்கிறார். வளர்ப்பு பிள்ளையாக இருந்தாலும் அவளைக் கேட்காமல், அகங்காரம் பிடித்த வீரன் ஒருவனுக்கு மணம் செய்ய முடிவெடுக்கிறார். சொர்கத்தில் இருந்து பூமிக்கு வந்த வீரன், தொடக்கத்தில் இருந்தே இளவரசியின் தோழியை விரும்புகிறான். ஏனெனில் அவள் சொர்க்கத்தில் இருந்த அவனது காதலியின் சாயலைக் கொண்டிருக்கிறாள்.
ஆதரவில்லாத பிரதமரின் வளர்ப்பு மகள், தனக்கு திருமணம் பிடிக்கவில்லை. ஆனால் தந்தை தன்னை வளர்த்த கடனுக்காக தன்னையே விலையாக வைக்கத் துணிகிறாள். இதை நாயகன் தவறு என்கிறான். அவள் கேட்பதில்லை. வேறு வழியில்லை என முடிவெடுத்த நாயகன், தானே சென்று நாயகியை திருமண கோலத்தில் மீட்கிறான். அவளை மணம் செய்ய நினைத்தவனை அங்கேயே அடித்துக்கொல்கிறான். எதிர்க்கும் வளர்ப்புத் தந்தை, நாயகனின் ஆற்றலை உறிஞ்சிக்கொள்ள முயல்கிறார். அவரை படுகாயப்படுத்திவிட்டு அங்கிருந்து வெளியேறுகிறான். இதற்கடுத்ததாக நாயகன், நாயகியின் வளர்ப்பு தந்தைக்கு பின்னால் உள்ள தீயசக்தியுடன் மோதுகிறான். இதில் தனது ஆன்ம ஆற்றலைப் பறிகொடுக்கிறான். பிறகும் தீய சக்தியுடன் மோதி வெல்கிறான்.
படத்தில் கிராபிக்ஸ் காட்சிகள் அந்தளவு நேர்த்தியாக வரவில்லை. ஆனாலும் நாயகன் பார்க்க கம்பீரமாக இருக்கிறார். அவருக்கு சிறையில் டிராகன் வம்சாவளி நண்பன் பழக்கமாகிறான். இருவரும் தீயசக்தியை வீழ்த்தியபிறகு ஒன்றாக சேர்ந்து பயணிக்கிறார்கள். கூடவே நாயகனின் காதலியும் உடன் வருகிறாள். புதிதாக டிராகனுடன் இளவரசியும் சேர்ந்துகொள்ள வேறு இடத்திற்கு செல்வதோடு படம் நிறைவுபெறுகிறது.
வில்லனுக்கு பெரிய அரியணை லட்சியம் ஏதுமில்லை. வலிமையாக வேண்டும். அதற்கு குறுகிய வழியாக, ஆன்ம ஆற்றல் உள்ளவர்களிடமிருந்து அதை பறித்துக்கொள்ள நினைக்கிறான். அதை நாயகன் புரிந்துகொண்டு தாக்குகிறான். டிராகன் நண்பனின் உதவியும். கூடவே சொர்க்கத்திலிருந்து அவனுக்கு ஆன்ம ஆற்றலும் கிடைக்க இறுதி சண்டையில் வெற்றி பெறுகிறான்.
கோமாளிமேடை டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக