இடுகைகள்

தேசிய விருது லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வீடு என்பது நம் அனைவருக்கும் முக்கியமானது! - விஷால் பரத்வாஜ், இந்தி சினிமா இயக்குநர்

படம்
  விஷால் பரத்வாஜ்  இந்தி சினிமா இயக்குநர் மாரேங்கே டு வாஹின் ஜாகர் என்ற பாடலுக்காக விஷாலுக்கு, தேசிய விருது கிடைத்துள்ளது.  உங்களுக்கு முன்னரே தேசியவிருது கிடைத்துள்ளது. இப்போது கிடைத்த விருது எந்த வகையில் முக்கியமாகிறது? பெருந்தொற்று காலகட்ட அவலத்தைச் சொல்லும் ஆவணப்படத்திற்கான பாடல் இது. நமக்கு பெருந்தொற்று காலத்தில் பிழைப்புக்கான பிரச்னை எழவில்லை. ஆனால், தினசரி வேலைக்குச் செல்லும் தொழிலாளர்கள் பாதிக்கப்பட்டனர். இவர்கள் தான் தங்கள் வீட்டை எட்ட பல கி.மீ. நடக்க நேரிட்டது.இவர்களைப் பார்க்கும்போது எனது பிள்ளைகள், மனைவியோடு வீட்டில் பாதுகாப்பாக இருந்தது கடும் குற்றவுணர்ச்சியை அளித்தது.  இதனால்தான் ஆவணப்படத்தை இயக்கி அதற்கென பாடலை உருவாக்கினேன்.  நெட்பிளிக்ஸிற்காக கூஃபியா என்ற திரில்லர் படத்தை உருவாக்கியுள்ளீர்கள். இது சவாலைக் கொடுத்ததா? இல்லை. இப்படி இயங்குவது எனக்கு விருந்து சாப்பிடுவது போலத்தான். இந்த வாய்ப்பு எனக்குள்ளிருந்து குழந்தையை வெளியே கொண்டு வருவது போல இருந்தது. நான் சாகச நாவல்கள், உளவு நாவல்களை விரும்பி படிப்பவன்.  குட்டே என்ற படத்தை உங்கள் மகன் இயக்கியுள்ளார். நவம்பரில் வெளியா

பால் புதுமையினர் பற்றிய பயம் திரைப்படத்துறையினருக்கு உள்ளது! - இயக்குநர் ஒனீர்

படம்
  2005ஆம் ஆண்டு ஓனீரின் மை பிரதர் நிகில் என்ற படம் வெளியானது. இது, இந்தியாவின் முதல் ஹெச்ஐவி நோயாளியான டொமினிக் டி சூசா என்பவரின் வாழ்க்கையை தழுவியது. பிறகு ஒனீர் எடுத்த படம், ஐ யம் -2010. இந்த படம் இந்திப்படத்திற்கான தேசிய விருதைப் பெற்றது. மாற்றுப்பாலினத்தவர்களின் குரல்களை ஒலிக்கும் இயக்குநர் ஓனீர் தனது சுயசரிதையை ஐ யம் ஓனீர் அண்ட் ஐ யம் கே என்ற நூலை எழுதியுள்ளார்.  திரைப்பட இயக்குநராக உங்களது பயணம், இத்துறையில் வெளியில் உள்ள நபராக அனுபவங்கள் என இரு பகுதிகளாக நூல் எழுதப்பட்டுள்ளது என கேள்விப்பட்டோம்.  திரைப்படங்களை உருவாக்கும் இயக்குநர், எனது பாலின அடையாளம் என இரண்டுமே எனக்கு முக்கியமாக உள்ளது. நான் வாழும் காலத்தில் தன் பாலினச்சேர்க்கை குற்றமாக கருதப்பட்டு பிறகு அக்குற்றம் குற்றமல்ல என மாறியது. பொது இடத்தில் நான் எப்போதுமே பேசி வந்திருக்கிறேன். இளைஞர்களுக்கு அவர்களை வெளிப்படுத்த குரல் தேவைப்படுகிறது. என்னுடைய கதை அவர்களுக்கு உதவும்.  பள்ளி, கல்லூரி என பார்த்தாலும் எனக்கான முன்மாதிரிகள் வேறுபட்டவை.  நீங்கள் கொல்கத்தாவில் ஜாதவ்பூர் பல்கலைக்கழகத்தில் படித்தபோது மை பியூட்டிபுல் லாண்ட்ரெட

பாரத ரத்னா விருது பெற்ற சாதனைப் பாடகி! - லதா மங்கேஷ்கர்

படம்
  லதா மங்கேஷ்கர்  லதா மங்கேஷ்கர்  பாடகி இந்தி சினிமாவில் முக்கியமான பாடகி என்று சொன்னால் பலரும் அடிக்க வருவார்கள். இவரை யாருக்குத்தான் தெரியாமல் இருக்கும்? இந்திய இசைப்பாடல்களை கேட்பவர்களுக்கு லதாவின் குரல் நிச்சயம் அறிமுகமாகியிருக்கும்.  இந்திய சினிமாவில் அறுபது ஆண்டுகளாக ஆயிரத்திற்கும் மேற்பட்ட படங்களில் பாடியிருக்கிறார் லதா.  1929ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் தேதி மத்தியப் பிரதேசத்தில் பிறந்தவர்.  இவரது பெற்றோர் சேவந்தி மங்கேஷ்கர், தினாநாத் மங்கேஷ்வர். லதாவின் தந்தை நாடக நடிகர் என்பதோடு இந்துஸ்தானி பாடகரும் கூட.  லதாவுக்கு அவரது தந்தை ஐந்து வயதிலிருந்து பாடகியாக பயிற்சி கொடுத்து வருகிறார். இவர் உஸ்தாத் அமான் அலி கான், உஸ்தாத் அமாநாத் கான் ஆகியோரின் கீழ் பயிற்சி எடுத்துள்ளார்.  1942ஆம் ஆண்டு லதாவுக்கு பனிரெண்டு வயதாகும்போது அவரது தந்தை காலமானார். இந்த நேரத்தில் குடும்பத்திற்கு பொருளாதார ரீதியாக உதவி செய்யும் கட்டாயம் லதாவுக்கு இருந்தது. இவரது முதல் வெற்றி மகால் என்ற படத்தின் மூலம் கிடைத்தது. 1949ஆம் ஆண்டு வெளியான ஆயேகா ஆனேவாலா என்ற பாடல் மிகப்பெரிய வெற்றி பெற, அடுத்தடுத்து பாடல் பாடுவதற

பிறர் என்ன சொல்வார்களோ என்று எனது தலித் அடையாளத்தை மறைத்து வைத்தேன்! - நீரஜ் கெய்வான்

படம்
              நீரஜ் கெய்வான் இந்தி திரைப்பட இயக்குநர் கீலி புச்சி எனும் கதை உங்களுடைய தேசிய விருது வென்ற படமாக மாசானில் இடம்பெற்றதுதான் . அதனை சிறிய படமாக எப்படி உருவாக்கத் தோன்றியது ? வருண் குரோவரோடு கதையை எழுதும்போது , மேற்சொன்ன கதை மாசான் படத்திற்கு அதிக கனம் கொண்டதாக தோன்றியது . தர்மேட்டிக் எண்டர்டெயின்மென்ட் நிறுவனத்திற்கு இந்த கதையை உருவாக்கினோம் . இதில் நாயகர்கள் , எதிர்மறை நாயகர்கள் என யாரும் கிடையாது . ஒருவரின் குணநலன்களேதான இதில் எதிர்மறையாக பலவீனமாக மாறும் . சிறுபான்மை சமூகம் இன்றும் தங்களது வேலை , வாழ்க்கைக்காக போராடி வருகிறது . இதனை நாம் சற்று தனிமைப்படுத்தி பார்க்கவேண்டும் . சாதி வேறுபாடுகளை எப்படி வேறுபடுத்தி காட்டினீர்கள் ? இந்த விவகாரம் பற்றி நமக்கு முழுமையாக தெரியவில்லை என்பதை ஒப்புக்கொள்ள வேண்டும் . நான் பெண்களைப்பற்றி பேசினாலும் கூட ஆண்களால் அவர்களின் மாதவிடாய் வலியை உணர முடியாது என்பதே உண்மை . இதைப்போலத்தான் குழந்தைப் பிறப்பும் , பணியிடம் சார்ந்த தீண்டாமையும் கூட . இந்த ஐடியாவை நாங்கள் சிறுபான்மை சமூகத்துடன் இணைத்து எழுதினோம் . மெனோ