இடுகைகள்

இஸ்தான்புல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

வலி, வேதனையின் வரலாற்றை விவரிக்கும் நாவல் இஸ்தான்புல் - நிலவறைக் கைதிகளின் குறிப்புகள்

படம்
    இஸ்தான்புல்  புர்கான் சென்மெஸ் துருக்கி நாவல் தமிழில் முகமது குட்டி காலச்சுவடு இந்த நாவல் இஸ்தான்புல் நகரில் வாழும் மனிதர்களை அங்குள்ள அரசு கடத்தி சிறையில் அடைக்கிறது. அடைக்கப்படும் மனிதர்கள் யாவருமே சர்வாதிகார அரசுக்கு எதிரானவர்கள். அவர்களை அடித்து உதைத்து சித்திரவதை செய்து புரட்சி இயக்கத்தை அழிக்க அரசு நினைக்கிறது. அப்படியான முயற்சியில் கைதாகும் பல்வேறு மனிதர்களின் நினைவில்தான் கதையின் பாதை பயணிக்கிறது. கதையில் இஸ்தான்புல் நகரே ஒரு பாத்திரம் போல வருகிறது. அங்கு விற்கும் பல்வேறு உணவுகள், ஏழை மக்களின் வாழ்க்கை, அவர்களுக்கு நம்பிக்கை தரும் பல்வேறு கோஷங்கள் என கதை சுவாரசியமாக உள்ளது. நாவிதன் காமோ, திமிர்த்தோ, டாக்டர், குஹெய்லன் மாமா, மாமாவின் உறவினரான இளம்பெண் என கதை நெடுக வரும் பாத்திரங்கள் குறைவுதான். நிலவறை சிறையில் வாழும் மனிதர்கள் தங்களின் கடந்த கால வாழ்க்கையை நினைத்துப் பார்த்து தங்களின் கதையை வாசகர்களுக்கு முன்வைக்கிறார்கள். அவர்களுடைய வாழ்க்கை எப்படி இருந்தது, எதனால் சிறைக்கு பிடித்து வரப்பட்டார்கள், அவர்களை விட்டுச்சென்றவர்களின் வாழ்க்கை என கதை வேதனையான சித்திர