இடுகைகள்

கோழி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புரதச்சத்தை உடலுக்கு பெறும் ஒரே வழி - கறி சாப்பிடுவதுதான்!

படம்
                        finger licking good -Meat இப்படி நிறையப் பேர் சொல்லுவார்கள். புரத தேவைக்கு ஒரே எளிதான வழி இறைச்சி என பலரும் முடிவுக்கு வந்துவிட்டார்கள்.  ஆனால் இதில் எந்த உண்மையும் இல்லை. காய்கறிகள், பிற தானியங்கள் என பல்வேறு உணவுப்பொருட்களிலும் புரதம் உள்ளது. இறைச்சியை பட்டினி கிடந்தவர்கள் சாப்பிடுவது போல சாப்பிட்டால், உடல் கெட்டுவிடும். இதயம்., நுரையீரல் சார்ந்த பிரச்னைகள் உறுதியாக ஏற்படும் என்பதை மறந்துவிடாதீர்கள். ஆதிக்காலத்தில் நாம் இறைச்சியைத்தான் சாப்பிட்டோம் என ஐந்துவீட்டு சாமி துணை பக்தர்கள் கொந்தளிக்கலாம். ஆனால் அன்று உணவுக்கு வேட்டையாடி சாப்பிடும் தேவை இருந்தது. பயிர் விளைவித்து சாப்பிடும் புத்தி உருவாகவில்லை. அப்படி ஒரு ஒப்பீட்டை எடுத்தாலும் கூட இன்று ஆண்டுக்கு ஒருவர் சாப்பிடும் இறைச்சி அளவு அதிகம். புரதம். விலை குறைவு என நிறைய காரணங்களை லாஜிக்காக சொல்லலாம். இதனை நாம் மறுக்கவில்லை. இறைச்சியில் எளிதாக நுண்ணுயிரிகள் தொற்றிக்கொள்வதால், அதனை சாப்பிடுபவர்களுக்கு எளிதாக வயிறு தொடர்பான பிரச்னைகள் ஏற்படும். இறைச்சிக்கு மாற்றாக என்ன சாப்பிடுவது? அவகாடோ, தேங்காய், பருப்பு வகை

சிறப்பு அங்காடிகளில் முட்டை குஞ்சு பொரித்து வருவது உண்டா?

படம்
giphy மிஸ்டர் ரோனி சூப்பர் மார்க்கெட் முட்டையில் கோழிக்குஞ்சு வருமா? அதற்கு வாய்ப்பு லேது பாவா. காரணம்,  கோழிகளின் பண்ணையில் பெரும்பாலும் இருப்பது பெண் கோழிகள்தான். அதுதான் பெயரிலே கோழிப்பண்ணை என்று இருக்கிறதே என கடிஜோக் சொல்லாதீர்கள். சேவல்களின் தேவை இன்று கிடையாது. இனப்பெருக்கம் செய்விப்பதற்கான பலவழிகளை அறிவியல் கூறியுள்ளது. எனவே கோழி முட்டையில் குஞ்சு பொரிப்பதற்கான வாய்ப்பு கிடையாது. வாத்துப்பண்ணைகளில் ஆண், பெண் என இரு வாத்துகளும் ஒன்றாக சுற்றித்திரிவதால் அவற்றின் முட்டைகள் சூப்பர் மார்க்கெட்டில் குஞ்சு பொரித்த செய்திகள் வந்திருக்கின்றன. நன்றி - பிபிசி

தலையில்லாத கோழி வாழுமா?

படம்
பிபிசி ஏன்?எதற்கு?எப்படி?  மிஸ்டர் ரோனி கோழி தலையில்லாமல் எத்தனை நாட்கள் வாழும்? 1940 ஆம் ஆண்டு அமெரிக்காவில், மைக் என்ற கோழி தலையின்றி பதினெட்டு மாதங்கள் உயிர் வாழ்ந்தது. கோடாரியால் தலை வெட்டப்பட்ட  கோழி இது. தாய்லாந்தில் மார்ச் 2018 ஆம் ஆண்டு, இதுபோல கோழி ஒன்று வாழ்வதாக பதிவு உள்ளது. இதுகுறித்த வீடியோவும் இணையத்தில் உண்டு. தலையில்லாமல் வாழ்வது பெரும்பாலும் கடினம். ஏனெனில் தலை வெட்டப்பட்டபிறகு ரத்தம் அதிகம் வீணாகி விடும். எனவே கோழி உயிர்பிழைப்பது மிக கடினம். பாதுகாக்கப்பட்ட சூழலில் இது சாத்தியமாகும். எடுத்துக்காட்டாக ஆய்வகம்.

கோயிலுக்கு போனால் ஆன்மிகவாதி ஆக முடியுமா?

படம்
http://balamurugan1977.tumblr.com மிஸஸ் டக்ளஸ் டிக்டிக்டிக் உன் எண்ணங்கள் குறித்து கவனமாக இரு.  அவை எந்த விநாடியும் வார்த்தைகளாக வெளிவரக்கூடும். விழுங்கள் தப்பில்லை கீழே விழுவதில் அவமானம் ஏதுமில்லை. அருவியைப் பாருங்கள். என்னவொரு குதூகலப் பேரிரைச்சல். கோழியா? முட்டையாழ கோழி முதலில் வந்த தா? அல்லது முட்டை முதலில் வந்ததா? என்னவொரு முட்டாள்தனமான கேள்வி. கோழிதான். முட்டை முதலில் வந்திருந்தால் அதனை யார் அடைகாத்திருக்க முடியும். ஆன்மிகம் கோயிலுக்கு போவதால் ஒருவன் ஆன்மிகவாதி ஆகிவிட முடியாது. வொர்க்ஷாப்புக்கு போவதால் மெக்கானிக் ஆகிவிட முடியுமா? நன்றி: ஆனந்த விகடன்