இடுகைகள்

நாகலட்சுமி சண்முகம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

புதிர்ப்பாதையிலிருந்து நம்பிக்கை பெற்று தப்பி வாழ்க்கையை அடைய கற்றுத்தரும் நூல்! - ஸ்பென்சர் ஜான்சன் (தமிழில் நாகலட்சுமி சண்முகம்)

படம்
  புதிர்ப்பாதையிலிருந்து தப்பித்து வெளியேறுதல்  ஸ்பென்சர் ஜான்சன் தமிழில் நாகலட்சுமி சண்முகம்  மின்னூல்  என் சீஸை நகர்த்தியது யார் என்ற நூலின் இரண்டாம் பகுதி. நூல் சிறியதுதான். வேகமாக படித்துவிடலாம்.  நாம் நம்புகின்ற நம்பிக்கை தவறாக இருக்கும்போது, அது நம்மை தொழில் வாழ்க்கையில் தனிப்பட்ட வாழ்க்கை சார்ந்து துன்பத்திற்குள்ளாக்குவதை எழுத்தாளர் வலுவாக சொல்ல நினைத்துள்ளார். அதற்குத்தான் புதிர்ப்பாதையில் சீஸ் தேடும் கதை கூறப்படுகிறது. இதில் ஜெம், ஜா, ஹோம் மற்றும் இரு சுண்டெலிகள் உள்ளன.  சுண்டெலிகளும், ஜாவும் புதிர்ப்பாதையில் இருந்த சீஸ்களைத் தேடி கண்டுபிடிக்க கிளம்புகின்றனர். ஆனால் ஜெம், இன்று இல்லாவிட்டால் என்ன நாளை இதே இடத்தில் சீஸ் கிடைக்கும் என காத்திருக்கிறான். பாறையின் புதிர்ப்பாதையில் யார் சீஸை வைப்பது, அதற்கான ஆதாரம் பற்றி அவன் ஏதும் கவலைப்படுவதில்லை. இதனால் நாளுக்குநாள் அவனுக்கு உணவு கிடைக்கவில்லை. ஆளும் மெலிய நம்பிக்கையும் மெலிகிறது. அப்போது ஹோம் என்ற சிறு குள்ளப் பெண் அவனுக்கு ஆப்பிள் தந்து உதவுகிறாள். ஜெம்முக்கு அது ஆப்பிள் என்பது கூட தெரிவதில்லை. சீஸ் தவிர ஏதும் சாப்பிடமாட்டேன்

திருமண உறவுகளைக் காப்பாற்ற பேச வேண்டிய காதலின் மொழிகள் !

படம்
  காதல் மொழிகள் ஐந்து  கிரேக் சேப்மன்  தமிழில் நாகலட்சுமி சண்முகம்  மின்னூல் ஒருவர் திருமண வாழ்க்கை, நட்பு, உறவுகளைக் காப்பாற்ற என்ன செய்யவேண்டுமென கிரேக் சேப்மன் சொல்லித் தருகிறார். முக்கியமாக காதல் மற்றும் திருமண வாழ்க்கை. பரிசு, பாராட்டு, பிரத்யேக நேரம், ஸ்பரிசம், பணிவிடை ஆகியவற்றை முதல் அத்தியாயத்தில் எழுத்தாளர் சொல்லிவிடுகிறார்.  அடுத்து வரும் அத்தியாயங்களில் இந்த ஐந்து விஷயங்களுக்குமான எடுத்துக்காட்டுக்களை சொல்லி விளக்குகிறார். பெரும்பாலும் எழுத்தாளர் வாழ்க்கை பயிற்சிக்கான பயிலரங்கு நடத்துபவர் என்பதால் அதில் கண்ட அனுபவங்களைத்தான் பகிர்கிறார்.  இதில் சில அனுபவங்களை அவர் பார்த்து, அதன் காரணம் என்ன என்பதை அறிகிறார். குறிப்பாக, அதிசயம் என யாராவது ஒரு தம்பதியினர் சொல்லிவிட்டால், அந்த அதிசயத்தை அறியாமல் சேப்மன் விடமாட்டார். அதை வைத்து பயிலரங்கு நடத்தலாமே? பிறகு அனுபவங்களைத் திரட்டி நூலாகவும் எழுதி விற்கலாம்.  மனித உறவுகள் எளிதாக உடையும் இயல்பு கொண்டவை. அதை எப்படி காப்பாற்றுவது என்பதற்கு தனது சொந்த வாழ்க்கை எடுத்துக்காட்டுகளையும் எழுத்தாளர் சொல்லுகிறார். அதுதான் நூலில் முக்கியமானது. அதை

வெற்றிக்கொள்கைகள் 25- நம்பிக்கை ஊற்றை பெருக வைக்கும் நூல்!

படம்
வெற்றிக்கொள்கைகள் 25 ஜாக் கேன் ஃபீல்டு தமிழில் - நாகலட்சுமி சண்முகம். சுயமுன்னேற்ற நூல்தான். ஆனால் இதில் வெற்றியாளர்களின் கதைகள் நிறைந்துள்ளன. பொதுவாக வெற்றி, ஏதாவது செய்யுங்கள் என்று வம்படியாக பேசாமல், இதைச்செய்தால் இந்த விளைவு. நீங்கள் உங்கள் சூழலில் இதை செயல்படுத்திப் பாருங்கள் என்று ஜாக் சொல்வது புதுமை. இருபத்தைந்து கொள்கைகளைக் கடைபிடிக்க வேண்டுமா என மலைக்காதீர்கள். இதில் எதைக் கடைபிடித்தாலும் உங்களுக்கு அதற்கான விளைவுகள் கிடைக்கும். காரணம், இவர் காட்டும் உதாரணங்கள். இதில் நிறைய மேற்கத்திய உதாரணங்கள் இருப்பதால் முதலில் புரியாதது போல தோன்றலாம். ஆனால் நாகலட்சுமி சண்முகம் ஜாக் கேன் ஃபீல்டிடம் நேரடியாக பயிற்சி  பெற்றவர் என்பதால், நிறைய விஷயங்களை பிரமாதமாக நமது குடும்ப உறுப்பினர் போல உரையாடலில் கூறுகிறார். அதுவும் நன்றாகவே இருக்கிறது. வெறும் வார்த்தைகளில் எதைச்சொன்னாலும் யாரும் நம்ப மாட்டார்கள்.இதனால் நூலிலுள்ள 285 பக்கங்களில் வெளி உதாரணங்களோடு தன் சொந்த அனுபவங்களையும் இணைத்தே பேசுகிறார். இதனால் கொள்கைகள் மீது படிக்கும் யாருக்கும் நம்பிக்கை பிறக்கும். பொதுவாக நூல

துரியோதனின் கதை! - கௌரவன் சொல்லும் தர்மத்தின் கதை!

படம்
கௌரவன் ஆனந்த் நீலகண்டன் எதிர்நாயகர்களைப் பற்றி கதைவரிசையில் ராவணனை அடுத்து கௌரவர்களில் ஒருவரான துரியோதனின் கதை. முதல்பாகத்தில் துரியோதனின் இளமைப் பருவம், பெற்றோரின் அன்பு கிடைக்காத வாழ்க்கையில் நண்பர்களே ஆதரவாக அமைகிறார்கள். ஏழைமக்கள் பற்றி கவலைப்படுபவனுக்கு பலராமனின் கதாயுதம் மூலம் கிடைக்கும் பலம், பீமனைப் பற்றிய பயத்தை நொறுக்குகிறது. இதன் விளைவாக பலம் பெறுபவன் சாதிமுறைக்கு எதிர்ப்பாக கர்ணன், அஸ்வத்தாமன், ஜயத்ரன் என நண்பர்களை சேர்த்து அஸ்தினாபுரத்தில் வாழ்கிறான். ஆனால் காந்தார இளவரசன் சகுனியில் மனதில் தன் பெற்றோரை பீஷ்மர் கொன்ற வன்மம் குறையாமல் உள்ளது. இதற்காக சிறு கொள்ளையனான துர்ஜயன் மற்றும் கட்டிடக் கலைஞனான ஊழல் மனிதர் புரோச்சனன் ஆகியோரைப் பயன்படுத்துகிறான். பரதகண்டம், தென்னக மன்னர்கள் கூட்டமைப்பு என சாதிமுறைகளால் பிளவுபட்டு கிடக்கிறது. இதற்கு பரசுராமன் காரணமாக இருக்கிறார். அவருடன் செய்யும் உடன்பாட்டை நினைத்து பீஷ்மர் மருகுகிறார். அதேசமயம் இவர் தன் இளம் வயதை துரியோதனுடன் ஒப்பிட்டு ஒன்றுபோலவே இருக்கிறது என ஆறுதல் கொள்கிறார். பட்டத்து இளவரசராக துரியோதனன் கவனமாக ச

எளிய அசுரனின் எழுச்சியும் வீழ்ச்சியும் - அசுரன்

படம்
புத்தக விமர்சனம் அசுரன் அரவிந்த் நீலகண்டன் தமிழில்: நாகலட்சுமி சண்முகம் மஞ்சுள் 622 பக்கங்கள் என்று எண்ணிப்பார்த்தால்தான் சற்றே அயருவீர்கள். அசுரன், ராவணனின் கதை.  அனைத்து சமூகத்தினருக்குமான ஆட்சியாக , மக்களுக்கு சமவாய்ப்பு கொடுப்பதாக அமைந்த இலங்கேஸ்வரனின் ரத்தமும் சதையுமான கதை. ராவணன், கீழ்நிலை அசுரர்களில் ஒருவரான பத்ரன் ஆகியோரின் பார்வையில் நாவல் நகர்கிறது. ஒன்று அரசரின் பார்வை. இன்னொன்று மக்களின் பார்வை. நாகலட்சுமி சண்முகத்தின் நெருடாத பிரமாதமான மொழிபெயர்ப்பு 622 பக்கங்களை மிக எளிதாக வாசிக்க உதவுகிறது. ராவணன் எப்படி அரசனாக உயர்கிறான் என்ற கதை எந்த ஜிம்மிக்ஸ் வேலைகளும் இன்றி இயல்பாக இருப்பது பருவம் பைரப்பாவை நினைவுபடுத்துகிறது. அரவிந்த் நீலகண்டனின் எழுத்துக்குச் சான்று, மகாபலியிடம் நான் எப்படிப்பட்ட அரசனாக இருப்பேன் என்று கூறி மகாபலி கடைபிடிக்க சொன்ன அத்தனையையும் மறுத்துப் பேசுவது. மண்டோதரி, இறுதியாக கணவனின் தவறுகளை வெடித்து பேசி சீதையை ராமனிடம் சேர்க்க கெஞ்சும் காட்சி. ஆகியவை படிக்கும் வாசகர்களுக்கு மறக்க முடியாத பகுதிகளாக இருக்கும். ராவணன்,