இடுகைகள்

அனெக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

இந்தியர்கள் என ஒவ்வொருமுறையும் நிரூபிக்கும் நிலையிலுள்ள வடகிழக்கு மக்கள்! அனெக் - அனுபவ் சின்கா

படம்
  அனெக்  ஆயுஷ்மான் குரானா இயக்கம் - அனுபவ் சின்கா பாடல்கள் -அனுராக் சைகியா வடகிழக்கு இந்தியாவில் நடைபெறும் ஆயுதக்குழுக்களுக்கு இடையிலான சண்டையும், அதில் தலையிட்டு ஆதாயம் தேடும் இந்திய அரசு பற்றியும் படம் தீவிரமாக விவாதிக்கிறது.  யார் இந்தியர், இந்தியராக இருக்க என்ன செய்யவேண்டும், இந்தியர் அல்லாதவர் யார் என பல்வேறு கேள்விகளை காட்சிரீதியாகவும், உரையாடல்களாகவும் படம் நெடுக இயக்குநர் கேட்கிறார். இறுதிக்காட்சியில், சிறுவர்களை எதற்கு கொல்ல உத்தரவிட்டீர்கள் என ஜோஸ்வா தனது உயரதிகாரியைக் கேட்கும் காட்சி முக்கியமானது.  வடகிழக்கு இந்தியாவை இந்தியாவுடன் இணைப்பது மேற்கு வங்கம்தான். அதற்கு பின்புறம்தான் வடகிழக்கு மாநிலங்கள் அமைந்துள்ளன. இவர்களின் உருவ அமைப்பு பிற பகுதியுள்ளவர்களை விட மாறுபட்டது. இதனால் இந்தியாவில் குறிப்பாக டெல்லியில் உள்ளவர்கள் இவர்கள் வேலைக்கு, கல்விக்காக வரும்போது சிங்கிஸ், நேபாளமாக, சீனா நாட்டுக்காரர்கள்  என கேலி கிண்டல் செய்கிறார்கள். எனவே,  வடகிழக்கினர் நாங்கள் இந்தியாவுடன் எதற்கு இணைய வேண்டும் என எதிர்ப்பு தெரிவிப்பதோடு அவர்கள் தங்களுக்கென தனி கொடி, அரசியலமைப்புச் சட்டம் கேட்

வடகிழக்கு பெண் என்பதால் எனது மொழி உச்சரிப்பை கிண்டல் செய்தனர்! - ஆண்ட்ரியா கெவிசூசா

படம்
  ஆண்ட்ரியா கெவிசூசா இந்தி சினிமா நடிகை - அனெக் திரைப்படம் ஆண்ட்ரியா கெவிசூசா உங்கள் பின்னணி பற்றி சொல்லுங்கள்? நான் கோகிமாவில் பிறந்து வளர்ந்தவள். எனக்கு ஐந்து சகோதரிகள் உண்டு. அதில் இளையவள் நான். எனது அப்பா அங்காமி பழங்குடியைச் சேர்ந்தவர். அம்மா ஆவோ பழங்குடியைச் சேர்ந்தவள். அப்பா காலமாகிவிட்டார். பெண்களான எங்களுக்கு எதை செய்யவேண்டும், செய்யக்கூடாது என பெரிய லிஸ்ட்டே உண்டு. பெற்றோர் நிறைய கண்டிப்புடன் வளர்த்தார்கள். பத்தாம் வகுப்பு வரை லிட்டில் பிளவர் பள்ளியில் பத்தாவது வரை படித்தேன். அதற்கு முன்னர் கத்தோலிக்க பெண்கள் பள்ளியில் படித்தேன். பிறகு மேகாலயாவின் சில்லாங்கிற்கு இடம்பெயர்ந்தோம். பிறகு படிப்பு அங்கே அமைந்தது. பதினைந்து வயதிலிருந்து நான் மாடலிங் செய்து வருகிறேன்.  நடிகர் ஆவது என்பது பற்றி கனவு கண்டீர்களா? எனக்கு சிறுவயதிலிருந்து இருந்தது ஒரே கனவுதான். மருத்துவம் படித்து மருத்துவராகி எனது கிராமமான கோகிமா சென்று மக்களுக்கு மருத்துவம் பார்ப்பது மட்டுமே எனது ஆசை. ஆனால் நான் படிக்கும்போது எனக்கு வந்த வாய்ப்புகளை பின்பற்றி இப்போது நடிகராகி இருக்கிறேன். இப்படி கிரியேட்டிவிட்டி கொண்ட த