181 - குடும்ப வன்முறையைத் தடுக்கும் அரசின் உதவிக்கரம்!
181 - குடும்ப வன்முறையைத் தடுக்கும் அரசின் உதவிக்கரம்! இதன் செயல்பாட்டைப் பார்ப்போம். ஒருவர் உதவி தேடி 181 என்ற எண்ணுக்கு அழைத்தால், அவர் எந்த மாவட்டத்தைச் சேர்ந்தவரோ அங்கு அழைப்பு திசைதிருப்பப்படும். இப்படியான மாவட்ட மையத்தை ஒன் ஸ்டாப் சென்டர் - ஓஎஸ்சி என்று அழைக்கிறார்கள். என்ன மாதிரியான பிரச்னை என்று கேட்டு, ஆள் உதவி தேவையெனில் குறிப்பிட்ட இடத்திற்கு பணியாளர்கள் அனுப்பி வைக்கப்படுகிறார்கள். இப்படி மீட்கப்படும் பெண்கள் உதவி மையத்தில் அல்லது மாநிலத்தில் உள்ள 33 பெண்கள் காப்பகத்தில் ஏதாவது ஒன்றில் சேர்க்கப்படுவார்கள். 181 என்ற எண்ணில் பெண்களுக்கு தேவையான மருத்துவ வசதிகளும் வழங்கப்படுகிறது. கூடுதலாக ஆலோசனை, சட்டரீதியான உதவி, ஆதரவு, கல்வி உதவிகள், காவல்துறையினரின் தலையீடு தேவையிருந்தால் அதையும் பெறுகிறார்கள். வன்முறையால் பாதிக்கப்பட்ட பெண்களுக்கு தன்னார்வ அமைப்புகளின் உதவிகளைப் பெற்றுத் தருகிறார்கள். 2018ஆம் ஆண்டு தொடங்கி 2024ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் வரை 181 உதவி மையம் ஒன்பது லட்சத்திற்கும் அதிகமாக அழைப்புகளைப் பெற்றுள்ளது. பெண்களுக்கான திட்டங்கள் பற்றி அற...